Friday, 18 March 2016

 தி ஹிந்து ஆங்கில நாளிதழ் ஓவிய போட்டியில் இறுதி சுற்றில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவிகள் 




        தி ஹிந்து ஆங்கில நாளிதழ் சார்பாக சில தினங்களுக்கு முன்பு ஓவிய போட்டி அறிவிக்கப்பட்டது.அதன் தொடர்ச்சியாக தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் 20 பேர்   ஆசிரியை முத்து லெட்சுமி வழிகாட்டுதலின்படி போட்டியில் பங்கு பெற்றனர்.இவர்களில் இரண்டு மாணவிகள் இறுதி போட்டிக்கு தேர்வு பெற்று இன்று (19/03/2016) மதுரையில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கின்றனர்.தென் மாவட்ட அளவில் நடைபெறும் இப்போட்டியில் மிகப்பெரிய ஆங்கில வழிகல்வி பள்ளி  மாணவர்கள் பங்கேற்கின்றனர்.அரசு உதவி பெறும்பள்ளியில் படிக்கும் இப்பள்ளி மாணவிகளின் பெற்றோர்கள் மதுரை செல்ல இயலாத சூழ்நிலையில் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் காலை 5.50 மணிக்கெல்லாம் தேவகோட்டையில் கிளம்பி மாணவிகளை அழைத்து கொண்டு மதுரை சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இறுதி போட்டியில் வெற்றி பெற அவர்களை வாழ்த்துவோமாக .இந்த இறுதி போட்டியில் கலந்து கொள்ளும் பெரும்பாலான பள்ளிகள் ஆங்கில வழி கல்வியில் உள்ள மிக பெரிய பள்ளிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் இன்று CRC பயிற்சி என்பது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment