Wednesday, 26 February 2025

 பரிசுகளை குவித்த மாணவர்கள் 


அழகாக மழலை மொழியில் பாடல்  பாடி அசத்திய முதல் வகுப்பு மாணவி 
 
மாணவர்களுக்கு பாராட்டு











தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் பாடல்கள்  ஒப்புவித்தல் போட்டிகளில் பரிசு பெற்ற மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. 


                                                                  ஆசிரியை முத்துமீனாள்   வரவேற்றார்.விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்  .  தேவகோட்டை முத்தமிழ் வேத திருச்சபை சார்பில் நடைபெற்ற பாடல்கள்    ஒப்புவிக்கும் போட்டியில் முதலிடம்  பெற்ற நந்தனா,யோகேஸ்வரன்,கனிஸ்கா, ரித்திகா,ஜாய் லின்சிகா,   உட்பட 41 மாணவர்களுக்கும்,  பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் போட்டிகளை நடத்திய முத்தமிழ் வேத திருசபையின் துணை செயலர்கள்   ஆதி ரெத்தினதிம்  மற்றும் மகாலிங்க மூர்த்தி ஆகியோர்  பரிசுகளை வழங்கி பாராட்டினார் .. நிறைவாக ஆசிரியை முத்துலெட்சுமி   ஸ்ரீதர்   நன்றி கூறினார்.ஏராளமான பெற்றோர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.


பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் முத்தமிழ் வேத திருச்சபையின்   பாடல்கள்  ஒப்புவித்தல் போட்டியில்  பரிசு பெற்ற மாணவர்களையும் , சிறப்பாக பயிற்சி அளித்த  ஆசிரியர்களையும் போட்டிகளை நடத்திய முத்தமிழ் வேத திருசபையின் துணை செயலர்கள்   ஆதி ரெத்தினதிம், மகாலிங்க மூர்த்தி  மற்றும்  பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் ஆகியோர் பாராட்டினார்கள்.

வீடியோ : 
https://www.youtube.com/watch?v=VpHy852Hez0

1 comment: