Friday, 14 February 2025

 

பள்ளிக்கே வந்து  மாணவர்களுக்கு  கண் கண்ணாடி வழங்குதல் 


தமிழக அரசின் கண்ணொளிதிட்டத்தில் மாணவர்களுக்கு விலையில்லா கண்ணாடிகள் 





தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் கண்ணொளி திட்டத்தின் கீழ்  பள்ளி  மாணவர்களுக்கு, விலையில்லா கண்  கண்ணாடிகள்  பள்ளிக்கே வந்து வழங்கப்பட்டது

                                தமிழக பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கண் குறைபாட்டை அறிந்து, சரி செய்யும் வகையில் தமிழக அரசு சார்பில் 'கண்ணொளி காப்போம்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் வாயிலாக, தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  பள்ளியில் கல்வி பயிலும்,  மாணவர்களுக்கு கண்ணங்குடி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய கண் நிபுணர் மகேஸ்வரி தமிழக அரசின் மூலம் வழங்கப்பட்ட இலவச கண்ணாடிகளை மாணவர்களுக்கு வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.அரசு ஆரம்ப சுகாதர நிலைய மருந்தாளுனர் சிவக்குமார் உடன் இருந்தார்.

            நிகழ்ச்சிக்கு பள்ளி ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துலெட்சுமி  ஆகியோர் ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.


பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் கண்ணொளி திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு, இலவச கண்ணாடிகளை  கண்ணங்குடி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய  கண் நிபுணர் மகேஸ்வரி வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.அரசு ஆரம்ப சுகாதர நிலைய மருந்தாளுனர் சிவக்குமார்  உடன் இருந்தார்.







No comments:

Post a Comment