Saturday, 15 February 2025

 விண்டோஸ், மேக் கணினிகளில் இன்காக்னிட்டோ சர்ச் ஹிஸ்டரியை முழுமையாக நீக்குவது எப்படி?


வெப் ப்ரவுசர்களில் இன்காக்னிட்டோ மோட் (Incognito Mode) எனும் தனிப்பட்ட தேடல் முறையை பயன்படுத்தும்போது, ப்ரவுசிங் ஹிஸ்டரி (Browsing History), ஆட்டோஃபில் டேட்டா (Autofill data) உள்ளிட்ட தரவுகள் சேமிக்கப்படாதே தவிர, வலைத்தளங்களில் உங்கள் செயல்பாடுகள், இணைய சேவை வழங்குநர் (Internet Service Provider) விவரம், நெட்வொர்க் அட்மினிஸ்ட்ரேட்டர்கள் (Network Administrators) விவரம், DNS Resolution போன்ற சில பின்னணி செயல்முறைகள் குறித்த தகவல்களை அணுக முடியும். இதனை விண்டோஸ், மேக் கணினிகளில் முழுமையாக நீக்கும் வழிமுறைகளை பார்ப்போம்:

 

விண்டோஸ் இன்காக்னிட்டோ சர்ச் ஹிஸ்டரியை முழுமையாக நீக்குவது எப்படி?

1) முதலில், உங்கள் ப்ரவுசரை திறந்து, Settings-க்கு செல்லவும். “Privacy and Security” என்ற ஆப்ஷனை தேர்வு செய்து, delete browsing data என்பதை தேர்வு செய்து கால அளவை “All Time” என கொடுத்து, அதில் Advanced என்பதை தேர்வு செய்து Browsing history, Cookies and site data, Cached images, files ஆகியவற்றை டிக் செய்து ப்ரவுசிங் ஹிஸ்டரி மற்றும் தரவுகளை நீக்க வேண்டும்.  

2) DNS Cache தரவுகளை நீக்க, Win + R ஐ அழுத்தி, cmd என டைப் செய்து, Enter கொடுக்கவும். Command Prompt-இல் ipconfig/flushdns என டைப் செய்து Enter கொடுக்க வேண்டும். இதன் மூலம் DNS Cache தரவுகள் அழிக்கப்படும்.

3) Temporary file-களை நீக்குவதற்கு, Win + R ஐ அழுத்தி, %temp% என டைப் செய்து Enter-ஐ அழுத்தவும். ஸ்கிரீனில் காண்பிக்கும் அனைத்து Temporary file-களையும் தேர்வு செய்து அழிக்கவும்.

மேக்கில் இன்காக்னிட்டோ சர்ச் ஹிஸ்டரியை முழுமையாக நீக்குவது எப்படி?

1) Safari ப்ரவுசரிக்கு சென்று Menu-வை கிளிக் செய்து Clear History-ஐ தேர்வு செய்யவும். ‘All History’ என்பதை தேர்வு செய்து Confirm கொடுத்தால் ப்ரவுசிங் ஹிஸ்டரி மற்றும் தரவுகள் முழுவதும் நீக்கப்படும்.

2) Cache மற்றும் Cookies-ஐ நீக்குவதற்கு, Safari ப்ரவுசரில் Preferences-ஐ கிளிக் செய்து, Privacy > Manage Website Data ஆகியவற்றை கிளிக் செய்து Remove All கொடுக்க வேண்டும்.

3) மேக் கணினியில் DNS Cache தரவுகளை நீக்குவதற்கு, Command + Space Key-ஐ அழுத்தவும், பிறகு Spotlight Search-இல் Terminal என டைப் செய்து கிளிக் செய்தால் Command Box திறக்கப்படும். அதில், “sudo dscacheutil -flushcache; sudo killall -HUP mDNSResponder” என டைப் செய்து Enter கொடுத்து மேக் பாஸ்வேர்டை டைப் செய்து மீண்டும் Enter கொடுத்தால் DNS Cache தரவுகள் முழுமையாக நீக்கப்படும்.


https://theekkathir.in/EPaper#

No comments:

Post a Comment