தேசிய அறிவியல் தின கொண்டாட்டம்
இளம் வயது மாணவர்கள் அறிவியல் சோதனை செய்து காண்பித்து அசத்தல்
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தின நிகழ்வு கொண்டாடப்பட்டது.
நிகழ்வில் ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். அ .மு.மு.அறக்கட்டளை அறிவியல் பயிற்சியாளர்கள் தனசேகர் முன்னனிலை வகித்தார்.பறக்கும் யானை,தராசு,காற்றின் அழுத்தம்,மடிக்கணினி,நீரின் அடர்த்தி,வெப்ப சலனம்,ஊசி துளை கேமிரா,ஒளியின் பாதை,நீர் பாயும் தன்மை போன்ற அறிவியல் சோதனைகளை நேரடியாக மாணவர்களே செய்து காண்பித்து விளக்கம் அளித்தனர்.மாணவர்கள் பிரஜித்,கனிஷ்கா, சரண் ஆகியோர் முறையே முதல்,இரண்டு, மூன்றாம் பரிசுகளை பெற்றனர். முதல் வகுப்பு மாணவி மழலை மொழியில் அறிவியல் சோதனை செய்ததுடன் அருமையாக விளக்கியதை பாராட்டி சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்விற்கான ஏற்பாடுகளை ஆசிரியை முத்துமீனாள் செய்து இருந்தார்.நிறைவாக ஆசிரியை முத்து லெட்சுமி நன்றி கூறினார்.
பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தினை முன்னிட்டு மாணவர்களே அறிவியல் சோதனைகளை செய்து காண்பித்து அசத்தினார்கள்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். அ .மு.மு.அறக்கட்டளை அறிவியல் பயிற்சியாளர் தனசேகர் முன்னனிலை வகித்தார். சிறப்பாக செய்த மாணவர்களுக்கு புத்தகங்கள் பரிசுகளாக வழங்கப்பட்டது.
வீடியோ : https://www.youtube.com/watch?v=4tpim1a10DU
No comments:
Post a Comment