நண்பர்களே வணக்கம் 🙏
சில வரிகளில் 'வரி' பற்றி சிறு தொடர்...
1..2..
வரி 7..
*வருமான வரி (பழைய முறையில்) *மருத்துவ செலவினங்கள்* எந்த பிரிவின் கீழ் எவ்வளவு தொகை கழிக்க இயலும்?
*நான்கு விதமான பிரிவுகள்* ....
*80D* ... மருத்துவ காப்பீடு ( *NHIS* ) மற்றும் பிற காப்பீடு இரண்டும் சேர்ந்து அதிகபட்சமாக *25000* /- கழித்து கொள்ளலாம்...
( *Preventive* Health checkup *5000* வரை இந்த பிரிவில் கழித்து கொள்ளலாம்)...
*80DD* ....
உங்களைச் *சார்ந்தவர்கள்* மாற்றுத் திறனாளி எனில் அவர்களுக்கான மருத்துவ பராமரிப்பு செலவுகள்
*80%* வரை ஊனம் எனில் 75000/-
*80% அதிகம்* எனில் 1,25,000/-...
( *பணியாளர்* மாற்றுத் திறனாளி எனில் *80U* பிரிவு)
*80DDB* ...
பணியாளர் மற்றும் சார்ந்தவர்கள் குறிப்பிட்ட *நோய்களுக்கான* மருத்துவ செலவினங்கள்
*40000* / வரை...
மூத்த குடிமக்கள் எனில் 1,00,000/- வரை....
மருத்துவ சான்றிதழ் படிவம் *10-I* கட்டாயம் *இணைக்க* வேண்டும்..
(தொகை *ரொக்கமாக* செலுத்தி இருக்கக் *கூடாது* )
*நோய்களின் பட்டியல்*
1) Neurological disease
2) Malignant Cancer
3) AIDS
4) chronic renal failure
5) Hematological disorders
மேற்கண்ட *நோய்களுக்கான* சிகிச்சை செலவு மட்டுமே அனுமதி...
காய்ச்சல் தலைவலி பல் வலி.... Maternity expenses, Heart operation, accident medical expenses என வேறு
எதற்கும் இந்த பிரிவில் *கழிக்க இயலாது 🙏*
*பதிவின்* சுருக்கம்
*80D vs 80DDB*
*80D* - *வருமுன்* காக்கும் செலவு
*80DDB* - *வந்தபின்* காக்கும் செலவு 😁 ( *குறிப்பிட்ட* 5 வித நோய்களுக்கு மட்டும்)
*80U vs 80DD*
*80U* - பணியாளரே *மாற்றுத் திறனாளி* எனில்
*80DD* - பணியாளரை *சார்ந்தவர்* மாற்றுத் திறனாளி எனில்....
பணியாளர் மாற்றுத் திறனாளி மற்றும் அவரை சார்ந்தவரும் மாற்றுத்திறனாளி ( சார்ந்தவர் அரசு ஊழியர் இல்லை) எனில்
*80U (self) + 80 DD* ( *dependent* ) இரண்டும் பயன் படுத்தி கொள்ளலாம்...
இவைகள் *80C* இல் *உள்ளடக்கம்* *இல்லை* எனவே
இந்த நான்கு பிரிவுகளும் 80C (இதர சேமிப்பு 1,50,000) ஐ விட *கூடுதலாக* கழித்துக் கொள்ளலாம்
இவைகள் அனைத்தும் புதிய வரி விதிப்பு முறையில் ( *New Regime* ) இல்லை ...
கூடுதல் விவரங்களுக்கு
Income tax department இணையதளத்தை பார்க்கவும்...
தகவலுக்காக
*க.செல்வக்குமார்*
தலைமை ஆசிரியர்
அரசு மேல்நிலைப் பள்ளி
மோ சுப்புலாபுரம்
மதுரை மாவட்டம் 🙏
17/2/25
No comments:
Post a Comment