குடற்புழு நீக்க மாத்திரை மாணவர்களுக்கு வழங்கல்
தேவகோட்டை- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் சுகாதாரத்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ரத்த சோகை ஏற்படுவதை தவிர்க்க குடற்புழு நீக்கத்திற்கான 'அல்பென்டசோல்' மாத்திரைகளை ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துலெட்சுமி ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கினார்கள் .
5 முதல் 13 வயது வரை உள்ள மாணவ,மாணவியர்க்கு 400 மி.கி., மாத்திரை வழங்கபட்டது.ரத்த சோகை நோயால் பல்வேறு நோய்கள் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக இந்த மாத்திரைகள் வழங்கப்படுகிறது. பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது.
பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் குடற்புழு நீக்க மாத்திரைகளை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் வழங்கினார்.
வீடியோ : https://www.youtube.com/watch?v=jELQFhREMa4
No comments:
Post a Comment