இஸ்ரோவின் 100வது ராக்கெட் வெற்றிக்கு பள்ளி மாணவர்கள் வண்ண பலூன்கள் பறக்கவிட்டு பாராட்டு
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் விண்வெளியில் 100வது ராக்கெட்யை
இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு வண்ண பலுன்கள் பறக்கவிட்டு மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு வண்ண பலுன்கள் பறக்கவிட்டு மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
விண்வெளி துறையில் உலக நாடுகளை திரும்பி பார்க்கும் வகையில் பல்வேறு சாதனைகளை இந்தியா படைத்து வருகிறது. அந்த வகையில் இஸ்ரோவின் 100வது ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் 2வது ஏவுதளத்தில் இருந்து என்.வி.எஸ்- செயற்கைக்கோளை சுமந்து செல்லும் ஜி.எஸ்.எல்.வி. எப்-15 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இந்த ராக்கெட், ஜி.பி.எஸ்., சேவை அளிப்பதற்கான என்.வி.எஸ்., என்ற செயற்கைக்கோளை விண்ணில் நிலை நிறுத்தியது.
இந்த என்.வி.எஸ் -02 செயற்கைக்கோள் தரை, கடல், வான்வெளி போக்குவரத்தை கண்காணித்து பேரிடர் காலங்களில் துல்லிய தகவல்களை தெரிவிக்கும்.என்கிற தகவலை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மாணவர்களுக்கு எடுத்து கூறினார்.
இந்த சாதனையை செய்த இஸ்ரோவின் அனைத்து விஞ்ஞானிகள்,பொறியாளர்கள்,தொழில்நுட்ப ஊழியர்கள் அனைவருக்கும் பள்ளி மாணவர்களால் வண்ண பலூன் பறக்கவிடப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியை முத்துலெட்சுமி செய்து இருந்தனர்.
பட விளக்கம்: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் விண்வெளியில் 100வது ராக்கெட்யை
இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு வண்ண பலுன்கள் பறக்கவிட்டு மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
No comments:
Post a Comment