Friday, 7 February 2025

 

கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தினம்

 நமக்கு தெரியாமல் நம்மை ஏமாற்றி போடப்படும் ஒப்பந்தங்களோ, வெற்று தாளில் வாங்கப்படும் கையழுத்துக்களோ செல்லாது

நம் உரிமைகள் மறுக்கப்படும்போது கேட்டு பெறுவதே சட்டம் 

மாற்று திறனாளிகளின் வாகனங்களுக்கு  சுங்க சாவடிகளில் கட்டணம் விளக்கு 

வட்ட சட்ட பணிகள் குழு வழக்குரைஞர் தகவல் 









தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம்   தேவகோட்டை வட்ட சட்ட பணிகள் குழு  சார்பில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

                                               நிகழ்ச்சிக்கு வந்தவர்களை ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.சட்ட  பணிகள் குழு தன்னார்வலர் வித்யா முன்னிலை வகித்தார். வட்ட சட்ட  பணிகள் குழு வழக்குரைஞர் கல்யாண்குமார் மாணவர்களிடம் பேசுகையில்,சட்டம் என்பது  நம்முடைய உரிமையை நாம் கேட்டுப் பெறுவதுதான். அது மறுக்கப்படும் போது நாம் நியாயப்படி கேட்பதுதான் சட்டம்.

                            இளம் சிறார்கள் வாகனம் ஓட்டுதல் கூடாது. சட்டப்படி குற்றமாகும்.. அதை மீறி ஓட்டினால் அவர்களுக்கு 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் கிடைக்காது . 

                          இருசக்கர வாகனம்    வைத்திருப்பவர்கள்  தலைக்கவசம், ஓட்டுநர் உரிமம், விபத்துக் காப்பீடு இவை அனைத்தும் அவசியம் வைத்திருக்க வேண்டும். இது இல்லாமல் இருந்தால் உங்கள் பெற்றோரிடம் எடுத்து கூறி விபத்து காப்பீடு அவசியம் எடுக்க சொல்லுங்கள்.

                        கொத்தடிமை என்பது   1976 ம் ஆண்டே ஒழிக்கப்பட்டது. ஆனால் இன்னும் சில இடங்களில்  இருப்பதாக தகவல் உள்ளது. 

                           சம்பளம் முன்தொகையாகவோ அல்லது கடனாகவோ கொடுக்கப்பட்டு, அவர்களை வாழ்நாள் முழுவதும் வேலை வாங்கி, கூலியும் கொடுக்காமல், கல்வியும் மறுக்கப்பட்டு, வாழ்க்கையையே சீரழிக்கும் நிலைதான் கொடுமையான கொத்தடிமை. 

                            வெறும் வெற்றுத் தாளில்  கையெழுத்து வாங்கி ஒப்பந்தம் போட்டதாக மிரட்டி  அவர்களது தலைமுறையின் தலையெழுத்தையும்  தலை நிமிரச் செய்வது இல்லை. 

                             நமக்கு தெரியாமல் நம்மை ஏமாற்றி போடப்படும் ஒப்பந்தங்களோ, வெற்று தாளில் வாங்கப்படும் கையழுத்துக்களோ செல்லாது .எனவே அதற்காக நாம் பயப்பட வேண்டிய அவசியமில்லை. 

            மாற்றுத்திறனாளிகளுக்கு  என்று சட்டத்தில் பல சலுகைகள் வகுக்கப்பட்டுள்ளது. பேருந்து கட்டணம், இரயில் கட்டணம் போன்றவை குறைக்கப்பட்டுள்ளது. 

                                 சுங்கச்சாவடிகளில் இவர்களுக்கு இலவசம் செய்யப்பட்டுள்ளது. வரி செலுத்துவதிலும்  சலுகை செய்யப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வை நீங்கள் உங்களைச் சுற்றி உள்ளவர்களிடம் சொல்ல வேண்டும்.இவ்வாறு பேசினார்.ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.


பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம்   தேவகோட்டை வட்ட சட்ட பணிகள் குழு  சார்பில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.சட்ட  பணிகள் குழு தன்னார்வலர் வித்யா முன்னிலை வகித்தார். வட்ட சட்ட  பணிகள் குழு வழக்குரைஞர் கல்யாண்குமார் மாணவர்களிடம் கலந்துரையாடினார் .


வீடியோ :

 https://www.youtube.com/watch?v=4BrKwJebJOM&t=36s








No comments:

Post a Comment