Wednesday, 5 February 2025

 போக்சோ சட்டம் குறித்து பள்ளியில் விழிப்புணர்வு

யாரேனும் உங்களை கேலி செய்தால் 1098யை அழையுங்கள் 

மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் அறிவுரை 










தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்  குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போக்சோ சட்டம் குறித்து, பள்ளி மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது .

                     ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். சிவகங்கை  மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரை மாணவ,மாணவிகளிடம் கலந்துரையாடி பேசுகையில்,நம் பெற்றோரை தவிர யாரையும் நம்மைத் தொட அனுமதிக்கக்கூடாது. யாரேனும் கேலி செய்தால் உடனடியாக நாம் பெற்றோரிடமும் ஆசிரியரிடமும் தெரிவிக்க வேண்டும். நாம் ரோட்டில் நடந்து செல்லும் பொழுது இரட்டை அர்த்தங்களில் யார் பேசினாலும் நாம்  புகார் கொடுக்கலாம். நமக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் 1098 என்ற எண்ணிற்கு கால் செய்து புகார் அளிக்கலாம்  மற்றும் போக்சோ சட்டம் குறித்தும், பள்ளி குழந்தைகளிடம் அறிவுரைகள் வழங்கி பேசினார்.

                                             நிகழ்வில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பணியாளர் நாகராஜ் உட்பட ஏராளமான பெற்றோர்கள் பங்கேற்றனர். மாணவர்களின் ஏராளமான கேள்விகளுக்கு மிக பொறுமையாக தெளிவான  விளக்கங்களை  மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பதில் கூறினார். 

                    நிகழ்விற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஸ்ரீதர் முத்துலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.


படவிளக்கம்:  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் போக்சோ விழிப்புணர்வு குறித்த தகவல்களை  சிவகங்கை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரை மாணவர்களுக்கு விரிவான முறையில்  எடுத்துக் கூறினார். தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதில் கூறப்பட்டது.

வீடியோ : 

https://www.youtube.com/watch?v=Me2JN0NolPk


https://www.youtube.com/watch?v=RP0YJfbz-m8






மேலும் விரிவாக : 


                                     பாலியல் என்பது உடல் ரீதியாக யாரேனும் தொந்தரவு செய்தால் உடனடியாக புகார் கொடுக்க வேண்டும். அதனுடன் 100 என்ற எண்ணிற்கும் ,181 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். 

                       நமக்கு சிறுவயதில் ஏதேனும் தவறு நடந்து இருந்தாலும் அதனை இப்பொழுது தெரிவித்து அவர்களுக்கு சட்டப்படி பாடம் புகட்டலாம். 

                         காது கேளாதோர் கண் தெரியாதவருக்கு பிரச்சனை ஏற்பட்டால் அவர்கள் தெரிவிக்க முடியாவிட்டாலும் அவர்களுக்கு உரிய மொழிகளில் பேசுபவர்களை வைத்து உரியவருக்கு தவறு நடந்திருந்தால் சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

                        மூன்று வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் முதலில் மருத்துவ பரிசோதனை செய்து பின்பு அவர்களுக்கு புரியும் மொழியில் பேசும் மருத்துவர்களை அழைத்து பேசி பின்பு சட்டப்படி அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

                               பாலியல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில்  ஈடுபட்டிருந்தால் யாராக இருந்தாலும்  அவர்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி தப்பிக்க சட்டத்தில் இடமில்லை.

                                 சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது. எனவே உங்கள் உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ யாரேனும் புண்படுமாறு அல்லது தவறான இடங்களில் தொடக்கூடாத இடங்களில் தொட்டாலோ உடனடியாக நீங்கள் 10 98 என்கிற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். ஆசிரியர்களிடமும் தெரிவிக்கலாம் .

                     பெற்றோரிடம் முதலில் தெரிவியுங்கள். மாணவ, மாணவிகள் உங்களது பெற்றோர்களின் மொபைல் என்னை மனப்பாடமாக வைத்துக்கொள்ளுங்கள்.

                       எங்கேனும் காணாமல் போய்விட்டால் அருகில் உள்ள காவலர்களை அல்லது உங்கள் பெற்றோர்களையோ தொடர்புகொள்ள மொபைல் எண்ணை  மனதில் வைத்து சொல்லுங்கள். 


                               நல்ல ஒழுக்கம் இருந்தால் நல்ல கல்வி கிடைக்கும். நல்ல ஒழுக்கமாக இருப்பதற்கு தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். ஒழுக்கம் என்பது பள்ளியில்தான் உருவாகும்.

                       பள்ளிக்கு வருவது சுத்தமான ஆடைகள் அணிந்து வருவது போன்றவை தான் ஒழுக்கத்தை உங்களுக்கு கற்றுக் கொடுக்கும். இப்பள்ளியில் நல்ல முறையில் உங்களுக்கு அனைத்து விஷயங்களும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. அதற்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

                                  தைரியமாக இருங்கள். தைரியம் ஒன்றுதான் உங்களை வாழ்க்கையில் வெற்றிகரமாக கொண்டு போய் சேர்க்கும்.

                                     யாருக்கும் பயப்படாதீர்கள் . நல்லனவற்றையே செய்யுங்கள். தவறான பாதையில் செல்லாதீர்கள். தவறான பாதையில் செல்ல முயன்றால் நல்லவை நடக்காது. எனவே உங்களை எப்போதும் பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளுங்கள்.

                                   பெற்றோர் சொல்வதை கேளுங்கள். டிவி பார்ப்பது, மொபைல் போன் தேவையில்லாமல் பயன்படுத்துவது, கேம் விளையாடுவது போன்றவை உடல் ரீதியாகவும் ,மனரீதியாகவும் உங்களை பாதிக்கும்.

                              எனவே முடிந்த அளவு நல்ல விஷயங்களை மட்டுமே கற்றுக்கொள்ளுங்கள். தவறான பாதைக்கு செல்லாதீர்கள். அது உங்களை மோசமான நிலைமைக்கு அழைத்துச் செல்லும். எனவே படிக்கும் வயதில் நல்ல பழக்கங்களைக் கற்றுக் கொண்டு நன்றாக கல்வி கற்று வாழ்க்கையில் முன்னேற முயற்சி எடுங்கள். 


                             எந்த உதவி என்றாலும் 10 98 என்கிற எண்ணை  அழையுங்கள். நீங்கள் எங்கேனும் திருவிழாக்களில் காணாமல் போய்விட்டால் கூட காவலர்களை தொடர்பு கொள்ளுங்கள் அல்லது 10 98, 100, 181 என்கிற எண்களுக்கு  கால் செய்து பேசுங்கள் இவ்வாறு  குழந்தைகள் நல அலுவலர் மாணவர்களுக்கு விளக்கினார் .


 



No comments:

Post a Comment