பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம்
தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான மருத்துவ முகாம் நடை பெற்றது.
முகாமிற்கு வந்திருந்தோரை ஆசிரியர் கருப்பையா வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.கண்ணங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் தமீம் அன்சாரி ,பிரியா,பல் மருத்துவர் மல்லிகை ,கண் மருத்துவ அலுவலர் மகேஸ்வரி ,செவிலியர் ஜோசப் மேரி ஆகியோர் பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களின் உடல்களையும் பரிசோதித்தார்.மாணவர்களிடம் உடல் சார்ந்த நோய்களை கண்டுபிடித்து அவற்றை உடனுக்குடன் எடுத்து கூறினார்கள்.மேலும் சில நோய்களுக்கு மேல் சிகிச்சைக்காக மாவட்ட அளவிலான அரசு மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரைத்தனர்.மாணவர்களின் பெற்றோர்களுக்கும் நோய்களின் தீவிரம் குறித்து எடுத்த சொல்லப்பட்டது.சில நோய்களுக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டது.முகாமிற்கான ஏற்பாடுகளை மருத்துவ உதவியாளர்கள் சிவக்குமார் ,ஷாஜஹான்,தேவதாஸ் ஆகியோர் செய்து இருந்தனர்.முகாமின் நிறைவாக ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.
பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான மருத்துவ முகாம் நடை பெற்றது.
மழைக் காலத்தில் நோய்கள் தாக்காமல் பாதுகாப்பாக இருப்பது எப்படி?
மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனே மருத்துவரை அணுகவும்
நீங்களாக கடைகளில் மாத்திரைகள் வாங்கி சாப்பிட வேண்டாம்
அரசு மருத்துவர் பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான மருத்துவ முகாமில் பல்வேறு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment