Monday, 29 October 2018

                                     உலக சேமிப்பு தினம் 

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் உலக சேமிப்பு தின விழா கொண்டாடப்பட்டது .


                                      விழாவிற்கு வந்தவர்களை பள்ளி ஆசிரியை முத்துமீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கி மாணவர்களிடம் சேமிப்பு அவசியம் பற்றி பேசினார்.பள்ளியில் அனைத்து வகுப்புகளிலும் வைக்கப்பட்டுள்ள உண்டியல் சேமிப்பு குறித்தும்,அதன் பயன்பாடு குறித்தும் எடுத்து கூறினார்.மாணவர்கள் அய்யப்பன்,காயத்ரி ஆகியோர் பேசுகையில்  , பள்ளியில் மாணவர்களின் உண்டியல் சேமிப்பின் மூலம் சமுதாயத்துக்கு உதவும் வகையில் சென்னை வெள்ள நிவாரணம்,பாட்டி இளவரசியின் உடல்நிலை சரியில்லாத ,பொருளாதார வசதி இல்லாத பேரனுக்கு உதவி,கேரள வெள்ள நிவாரணம் என எங்களின் உதவி தொடர்கிறது.எங்கள் வீட்டிலும் சேமிக்கும் பழக்கம் அதிகமாகிறது.என்று பேசினார்கள்.நிறைவாக ஆசிரியர் கருப்பையா நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற உலக சேமிப்பு தின விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் வகுப்பு மாணவ தலைவர்களுக்கு சமுதாய நோக்கோடு உதவும் வகையில் சேமிக்கும் உண்டியல் வழங்கினார் .

No comments:

Post a Comment