சேற்றில் இறங்கி நாட்டு நட்ட நடுநிலைப் பள்ளி மாணவர்கள்
விவசாய கல்லூரிக்கு களப்பயணம் சென்ற மாணவர்கள்
விவசாயி ஆவதே குறிக்கோள் - மாணவர் உறுதிமொழி
ஆடு,பன்றி,கோழி ,புறா வளர்ப்பது ,இயற்கை விவசாயம் செய்வது எப்படி ? நேரில் கற்றுக்கொண்ட மாணவர்கள்
மண்புழு உரம்,பஞ்சகாவிய உரம்,மீன் அமிலம் போன்றவை எவ்வாறு தயாரிப்பது ? நேரில் கற்று கொண்ட மாணவர்கள்
செடிக்கு வலிக்காமல் காய்கறிகளை எவ்வாறு பறிப்பது ? நேரில் சென்று காய்கறிகளை பறித்த மாணவர்கள்
தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் களப் பயணமாக சேது பாஸ்கரா விவாசய கல்லூரிக்கு சென்று சேற்றில் இறங்கி நாட்டு நட்டனர் .
4ம் வகுப்பு முதல் 8ம்
வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் விவாசய கல்லூரிக்கு களப் பயணமாக சென்றனர் .கல்லூரி தோட்டக்கலை பிரிவு மேலாளர் விக்னேஷ் அனைவரையும்
வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்
முன்னிலை வகித்தனர்.கல்லூரி தாளாளர் சேது குமணன் தலைமை தாங்கி பேசுகையில் , இளம் மாணவர்களாகிய
நீங்கள் இப்போதே விவாசய கல்லூரியில் சேருவதை குறிக்கோளாக கொள்ள
வேண்டும்.விவாசயம் செய்ய அனைவரும் முன்வரவேண்டும்.பயிர் நிலங்கள் அழிந்து
கொண்டே வருகின்றன.விவாசயம் செய்தால் நாடு தானாக முன்னேறும்.இயற்கை உரம் அதிக
அளவில் பயன்படுத்த வேண்டும்.விவாசய கல்லூரியில் சேர்ந்து படிப்பதன்
மூலம் நாட்டையும்,உங்களையும் நன்றாக வளர செய்ய இயலும் என்று
பேசினார்.விவசாய கல்லூரியில் ஆட்டு பண்ணை,கோழி பண்ணை,பன்றி பண்ணை,புறா பண்ணை,மீன் பண்ணை ஆகியவைகளையும்,பூச்சியியல் துறை ஆய்வகம்,மண் அறிவியல் ஆய்வகங்களையும், வெண்டிக்காய்,பாகற்காய்,புடலங்காய் போன்றவை எவ்வாறு பறிப்பது என்பது தொடர்பாகவும் நேரில் கற்று கொண்டனர்.சேற்றில் இறங்கி சந்தோஷமாக நாட்டு நற்றனர் .மாணவர்கள் பார்வையிட்ட இடங்களை பற்றி மாணவர்கள் அய்யப்பன்,வெங்கட்ராமன்,பாலசிங்கம்,காயத்ரி,ஜெயஸ்ரீ,கார்த்திகேயன்,
பாக்யலட்சுமி , கீர்த்தியா ,ஈஸ்வரன்,சிரேகா ,சந்தியா உட்பட பல மாணவர்களும்,ஆசிரியர்களும் பேசினார்கள்.பள்ளியின் சார்பாக ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.ஆசிரியர் கருப்பையா மாணவர்கள் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார்.
மேலும் விரிவாக :
மாணவர் அய்யப்பன் : விவசாய கல்லூரிக்கு வந்து சேற்றில் இறங்கி நாட்டு நற்றது எனக்கு வாழ்வில் மறக்க முடியாத நிகழ்ச்சி.நான் இதுவரை எனது குறிக்கோளாக போலீஸ்,கலெக்டர் ஆக வேண்டும் என்று எண்ணி இருந்தேன்.ஆனால் சேற்றில் இறங்கி நாட்டு நட்ட பிறகு எனக்கு விவசாயி ஆக வேண்டும் என்று ஆசை வந்துள்ளது.இந்த கல்லூரியில் பன்றி பண்ணையில் பன்றி வளர்ப்பதால் அதன் மூலம் நாம் சம்பாதிக்க இயலும் என்று சொன்னார்கள்.மேலும் மாட்டு பண்ணையில் காலையும் ,மாலையும் 12லிட்டர் கறக்கும் மாடுகளை பார்த்து ஆச்சிரியப்பட்டு போனேன்.மாடுகளுக்கு பிசுகட் கொடுத்தேன்.அவை ஆர்வத்துடன் சாப்பிட்டது கண்டு எனக்கு பிரமிப்பாக இருந்தது.கண்டிப்பாக நான் பிற்காலத்தில் விவசாயியாக வருவேன்,என்று பேசினார்.
மாணவி காயத்ரி : அனைத்து இடங்களிலும் 1330 குறள் தான் பார்த்துள்ளேன்.ஆனால் இங்கு கல்லூரியில் 1331வது குறள் எழுதி போட்டு அதில் விவாசியை பாராட்டி உள்ளனர்.புறா குஞ்சு எனது கையில் வாங்கி பார்த்தது எனது வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம்.நான் இது வரையில் முயல் குட்டி பார்த்தது கிடையாது.இன்று கையில் வாங்கி பார்த்து அதனை பக்கத்தில் பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது.வெண்டிக்காய் பறிக்கும்போது அதனை எவ்வாறு பறிக்க வேண்டும் எனக்கு நன்றாக சொல்லி கொடுத்தனர்.மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
மாணவி பாக்யலட்சுமி ; பாகற்காய்,புடலங்காய் பறித்த அனுபவம் அருமை.செடிகளுக்கு வலிக்காமல் காய்களை பறிக்க கற்று கொடுத்தனர்.மீன் பண்ணை பார்த்தோம்.மீனுக்கான உணவை தூக்கி போட்ட உடன் அவை வெளியில் வந்து சாப்பிட்டது நன்றாக இருந்தது.மூலிகை தாவரங்கள் பார்த்தோம்.ராசிகளுக்கு உள்ள மரங்களையும் பார்த்தோம்.சேற்றில் இறங்கி நாற்று நட்டது எனக்குள் புதிய அனுபவத்தை கொடுத்தது.
மாணவி ஜெயஸ்ரீ: மண் புழு உரம் தயாரிப்பது எப்படி,அதனால் ஏற்படக்கூடிய பலன்கள் என்ன என்பதை விரிவாக விளக்கினார்கள்.ஸ்பைருலினா தயாரிப்பது எப்படி என்பதையும் விளக்கி சொன்னார்கள்.இதுவரை தொலைக்காட்சியில் மட்டுமே நான் காலநிலை அறிவது தொடர்பாக பார்த்து வந்துள்ளேன்.ஆனால் இங்கு தெளிவாக அதனை நேரில் காண்பித்து எவ்வாறு மழை பெய்யும் அளவை கணிப்பது ,இன்றைய வெப்பநிலை அளவு என்ன அதன் தொடர்ச்சியான தகவல்களை விளக்கினார்கள்.எனக்கு முழுவதும் புரிந்தது.
மாணவர் வெங்கட்ராமன் : இது வரை செடி எப்படி வளர்கிறது என்று எனக்கு தெரியாது.இன்று ஆய்வகங்களில் தெளிவாக எனக்கு இதனை விளக்கி சொன்னார்கள்.காளான் வளர்ப்பது எப்படி,வளர்ந்த காளானை எப்படி விற்கலாம்,பஞ்ச காவிய தயாரிப்பது ,மீன் அமிலம்,சாணி உரம் போன்றவை தயாரிப்பது போன்றவற்றை நேரடியாக விளக்கி சொன்னார்கள்.இதன் மூலம் நான் வீட்டில் மிச்சமாகும் உணவு வகைகளை வைத்து உரம் தயாரிக்க முயற்சி எடுப்பேன்.மண் அறிவியல் ஆய்வகம் ,பூச்சியியல் துறை ஆய்வகம்,பூ,இலை பற்றிய ஆய்வகம்,நுண்ணுயிரியனங்கள் பற்றிய ஆய்வகம் போன்றவற்றை நேரில் காண்பித்து தெளிவாக விளக்கினார்கள்.என்று பேசினார்.
4ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவ,மாணவியரும் சுற்றுலா செல்வது போல தனியார் குளிர் வசதி கொண்ட இரண்டு ஓம்னி பேருந்தில் பள்ளியில் இருந்து கல்லூரிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.கல்லூரியில் நான்கு குழுக்களாக மாணவ,மாணவியரை பிரித்து அவர்களுக்கு உதவியாக கல்லூரி பேராசிரியர்களும்,கல்லூரி மாணவர்களும் வழிகாட்டுதலுடன் பண்ணைக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஒவ்வொரு பிரிவும் ஒவ்வொரு பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.பேராசிரியர்கள் உதவியுடன் மாணவ,மாணவியர்க்கு வெண்டைக்காய் பறிக்க கற்று கொடுக்கப்பட்டது.மாணவர்களை வைத்து எடை போட செய்து விவாசயம் தொடர்பாக நேரடியாக செயல் முறை விளக்கம் கொடுக்கப்பட்டது.
இக்கல்லுரி 240 ஏக்கர் நிலபரப்பில் அமைந்துள்ளது.இங்கு இயற்கை விவசாயம் கடைபிடிக்கபடுவதை மாணவர்களுக்கு விரிவாக எடுத்து சொல்லப்பட்டது.இயற்கை வேளாண்மை முறையில் காய்கறிகள் மற்றும் கீரைகள் பயிரிடபட்டதையும் விளக்கமாக சொல்லப்பட்டது.எண்ணெய் வித்துப் பயிர்களான எள் ,நிலக்கடலை ,சூரிய காந்தி,தென்னை,பூக்களில் முக்கியமாக மல்லிகை,பல மரங்களில் மா,பலா,வாழை மற்றும் மாதுளை,மேலும் சந்தனம் ,தேக்கு,செம்மரம்,வாகை,புங்கம்,வேம்பு,இலுப்பை,புளி ,வெப்பாலை போன்ற பலன் தரும் மரக்கன்றுகள் பயிரிடபட்டுள்ளதை மாணவர்களுக்கு நேரடியாக விளக்கப்பட்டது. 4 முதல் 8 வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவ,மாணவியரையும் அவர்கள் கையால் செடிகளை கொடுத்துநட செய்ய சொன்னார்கள்.மாணவ ,மாணவியரும் சந்தோசமாக செடிகளை நட்டனர்.
பன்றி வளர்ப்பு,ஆடு வளர்ப்பு,மாடு வளர்ப்பு,பால் தரும் பசுக்கள்,கோழி இனங்களில் கினி கோழி ,வான் கோழி,நாட்டு கோழி,புறா,முயல்,வாத்து போன்றவை ஒருங்கிணைந்த பண்ணை முறையில் வளர்க்க படுவதை விரிவாக ,நேரடியாக விளக்கப்பட்டது.
கல்லூரி தாளாளருடன் 4 முதல் 8 வகுப்பு வரை உள்ள மாணவர்கள் விவாசயம் தொடர்பான கேள்விகளை கேட்டு பதில்களை பெற்றனர்.மாணவர்களின் கேள்விகளும்,தாளாளர் பதில்களும் ;
காயத்ரி : வெள்ளை பன்றி வளர்ப்பதால் என்ன பயன் ?
தாளாளர் : விவாசயம் தொடர்பான பணிகளுக்கும்,உணவுக்காகவும் பன்றிகள் வளர்க்கபடுகின்றன.பன்றிகள் அதிக குட்டிகளை ஈனும்.நிறைய மக்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.அதற்கு தான் வெள்ளை பன்றிகள் வளர்க்கபடுகின்றன.
சந்தியா : வேளாண்மையில் என்ன,என்ன படிப்புகள் உள்ளன?
தாளாளர் : இளங்கலை பட்டம்,முதுகலை பட்டம்,டிப்ளோம படிப்பு,ஆராய்ச்சி படிப்பு என வேளாண்மையில் பல்வேறு படிப்புகள் உள்ளன.வேளாண்மை தான் ஒரு நாட்டின் முதுகெலும்பு ஆகும்.இது தான் எல்லா தொழிலுக்கும் முன்னோடி .அனைத்து நாடுகளுக்கும் வேளாண்மை தேவை.பயிர் நிலங்கள் அழிந்து கொண்டே வருகின்றன.இடைக்காலத்தில் 20 வருடங்களாக சரியான மழை இல்லை.நிலம் சரியாக உலுவதில்லை.அடுத்து தொழில். நிலம் தரிசாகி விடும்.விவசாயத்தின் வாயிலாக கோடிக்கணக்கான வருவாய் கிடைக்கும்.எனவே நீங்கள் அனைவரும் வருங்காலத்தில் விவசாயம் செய்ய முன்வரவேண்டும்.அதனை குறிகோளாக எடுத்து கொள்ள வேண்டும்.
கார்த்திகேயன் : மாற்று வேளாண்மை என்றால் என்ன ?
தாளாளர் : சில இடங்களில் கால்வாய் பாசனம் இருக்கும்.நிலத்தில் பயிரை மாற்றி,மாற்றி விவசாயம் செய்தால் மகசூல் கூடும்.தண்ணீர் குறைவாக செலவு செய்தால் போதுமானது.
சந்தியா : மல்லிகை செடிக்கு எத்துனை நாளைக்கு ஒரு முறை மருந்து தெளிக்கபடுகிறது ?
தாளாளர் : மருந்து தெளிப்பது என்பது பூச்சியின் தாக்குதல்,நோயின் தாக்குதல் இருந்தால் மட்டுமே தேவை.எத்துனை நாள் ஒரு முறை மருந்து தெளிப்பது என்பது நோயின் தாக்கத்தை பொருத்து மட்டுமே அமையும்.
அய்யப்பன் : இயற்கை உரம் ,செயற்கை உரம் என்றால் என்ன?
தாளாளர் : இயற்கை உரம் என்பது மக்கிய தொழு உரம் ஆகும்.எரு தயாரிப்பது உரம் ஆகும்.எப்போதுமே இயற்கை உரம் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.மண் இறுக்கமாக இருந்தால் மட்டுமே , சத்து பற்றா குறை இருக்கும் நேரமே செயற்கை உரம் போட்டால் மண் இளக்கம் கொடுத்து நன்றாக பயிர் வளரும்.
இவ்வாறு மாணவ ,மாணவியர் கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றனர்.
4ம் வகுப்பு,5ம் வகுப்பு படிக்கும் மாணவ,மாணவியர் இது போன்று கல்லூரிக்கு வருவது இதுவே முதல் முறை என்றும் ,இது தங்களின் வாழ்க்கையில் முடியாத சந்தோசம் என்றும் கூறினார்கள்.

No comments:
Post a Comment