Wednesday, 3 October 2018

தூய்மை இந்தியா விழிப்புணர்வு பேரணி 

 உருவாக்குவோம் தூய்மை இந்தியாவை என்கிற கோசத்தோடு விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள் 





தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் உருவாக்குவோம் தூய்மை இந்தியாவை என்கிற கோசத்தோடு தேவகோட்டையின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் சென்றனர்.
                                                தூய்மை இந்தியா விழிப்புணர்வு ஊர்வலத்திற்கு வந்தவர்களை பள்ளி ஆசிரியை செல்வமீனாள் வவேற்றார்.தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கி ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.ஊர்வலம் தேவகோட்டையில் நடராஜபுரம்,இறகுசேரி ,நேரு தெரு,சின்ன மாரியம்மன் கோவில் பகுதி வழியாக சென்று பள்ளியை அடைந்தது.பொது மக்களிடம் மாணவர்கள் கிருத்திகா ,சிரேகா ,மகாலெட்சுமி ஜனஸ்ரீ ,கார்த்திகேயன் ,அய்யப்பன் ஆகியோர் சுத்தம் ,கை கழுவுதல் ,பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு சார்ந்து பேசியும்,தூய்மை இந்தியா உருவாக்குவது சார்ந்த பதாகைகளை ஏந்தி கோசங்களை எழுப்பியும்   விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.நிறைவாக ஆசிரியர் கருப்பையா நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் உருவாக்குவோம் தூய்மை இந்தியாவை என்கிற கோசத்தோடு தேவகோட்டையின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் சென்றனர்.

No comments:

Post a Comment