Saturday, 27 October 2018

டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி 

ஆட்டுக்கல் ,அம்மி,பிரிட்ஜ்,திறந்த கிணறு,டயர்,தேங்காய் சிரட்டை ,இளநீர் மட்டை கொண்டு வந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்

மாணவர்களே உங்கள் வீட்டை சுற்றி டெங்கு விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் 

சப் கலெக்டர்  பேச்சு 

 டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி நடத்தி அசத்திய பள்ளி மாணவர்கள் 

நடுநிலைப் பள்ளி மாணவர்களை பாராட்டி பரிசளித்த ஐ.ஏ.எஸ்.அதிகாரி







தேவகோட்டை - மாணவர்கள் அனைவரும் தங்களின் வீட்டை சுற்றி உள்ளவர்களிடம் சொல்லி டெங்கு போன்ற காய்ச்சல் பரவ காரணமான கொசுக்களை ஒழிப்பதற்கு உதவ வேண்டுமென சப் கலெக்டர் பள்ளி மாணவர்களிடம் பேசினார்.
                                                         தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் டெங்கு,சிக்குன்குனியா ,பன்றி காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது.கண்காட்சிக்கு வந்தவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் வரவேற்றார்.தேவகோட்டை நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு ) ஜெயபால் முன்னிலை வகித்தார்.தேவகோட்டை சப் கலெக்டர் ஆஷா அஜித் விழிப்புணர்வு கண்காட்சியை துவக்கி வைத்து பேசுகையில் , பள்ளி மாணவர்கள் சொன்னால்தான் பெற்றோர்கள் கேட்பார்கள்.எனவே உங்கள் வீட்டிலும்,சுற்றி உள்ள வீடுகளிலும் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க வேண்டிய முன்னேற்பாடுகளை சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.நீங்களே கொண்டு வந்து கண்காட்சியில் வைத்துள்ள அனைத்து பொருள்களும்,விளக்கங்களும் நன்றாக உள்ளது.உங்களுக்கு பாராட்டுக்கள்.இதனை தொடர்ந்து அனைவரிடமும் கொண்டு போய் சேருங்கள்.புதுமையான முறையில் விழிப்புணர்வு கண்காட்சியை ஏற்பாடு உங்கள் பள்ளிக்கும் எனது வாழ்த்துக்கள் இவ்வாறு பேசினார்.கண்காட்சியில் மாணவர்களே களி மண்ணால் தயாரிக்கப்பட்ட ஆட்டுக்கல் , செய்தித்தாள், அட்டை கொண்டு தயாரிக்கப்பட்ட பிரிட்ஜ், குளிர்சாதன பெட்டி ,அட்டையில் செய்யப்பட்ட திறந்த கிணறு,மாணவர்கள் தாங்களே சேகரித்த தேங்காய் சிரட்டை,இளநீர் மட்டை முதிலியவற்றை கொண்டு எவ்வாறு கொசு பரவுகிறது,அதனை தடுக்கும்  முறைகளை விளக்கினார்கள்.அரசு பொது மருத்துவர்கள்  செல்வகுமார்,லெனின்பிரபு ,நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் தினேஷ் குமார்,ராஜமாணிகுமார் உட்பட பெற்றோர்கள் பலர் கலந்துகொண்டனர்.நிறைவாக ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.

படவிளக்கம் :  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற டெங்கு,சிக்குன்குனியா ,பன்றி காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு கண்காட்சியில் பங்குகொண்ட தேவகோட்டை சப் கலெக்டர் ஆஷா அஜித் ,தேவகோட்டை நகராட்சி ஆணையாளர் ஜெயபால்,பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் ஆகியோர் உள்ளனர்.


No comments:

Post a Comment