ஆட்டோகிராப் போட்டு அசத்திய மாணவி
நண்பர்களே நிகில் அறக்கட்டளை வழியாக காரைக்குடி K V பள்ளியில் ஒரு நாள் வாழ்வியல் பயிற்சி முகாம் நடைபெற்றது.இதனில் பேசிய சுங்கத்துறை இணை ஆணையாளர் ,முன்பெல்லாம் வாய்ப்புகள் ஒரு முறை தான் வரும்.இப்போது பல வாய்ப்புகள் எளிதாக கிடைக்கிறது.அதனை நாம் எப்படி பயன்படுத்தி கொள்கிறோம் என்பது தான் முக்கியம் என்று கூறினார்.ஒரு நாள் பயிற்சி முகாமின் நிறைவாக மாணவர்களிடம் கருத்து கேட்டு முடித்த பிறகு ,மைதிலி என்கிற மாணவி திரு.நாகலிங்கம் அவர்களிடம் வந்து ஆட்டோகிராப் போட்டு தருமாறு கேட்டார்.அதற்கு திரு.நாகலிங்கம் அவர்கள் ,நான் ஆட்டோகிராப் போடுவது கிடையாது.நீ எப்போது ஆட்டோகிராப் போடும் அளவிற்கு வருகிறாயோ அப்போது ஆட்டோகிராப் நீ எனக்கு போட்டு கொடுத்தால் போதும் என்று தெரிவித்தார்.உடனடியாக அந்த மாணவி ,நீங்கள் நோட்டை கொடுங்கள் ,நான் இப்போதே ஆட்டோகிராப் போட்டு தருகிறேன் என்று சொல்லி ஆட்டோகிராப் போட்டு கொடுத்து விட்டு,என்னிடம் ஆட்டோகிராப் வாங்கும் முதல் நபர் நீங்கள்தான் என்று பெருமையோடு சொல்லி விட்டு தன்னம்பிக்கையோடு நிமிர்ந்து நடந்து சென்றார்.இந்த நிகழ்வு என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது.மேலும் அவர் தனது கருத்து கூறும்போது ,நான் இன்று வருவோமா? வேணாமா? என்று யோசித்தேன்.ஆனால் வந்த பிறகு இன்றைய நிகழ்வு என்னுள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது .அதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று சொன்னார்.அவரது உடனடி முடிவு என்னை அசத்தியது.
மேலும் பயிற்சி குறித்து ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மாணவி பேசும்போது,காலையில் எனக்கு மொழி சரியாக புரியவில்லை என்று எண்ணினேன்.ஆனால் இன்று முழுவதும் நடைபெற்ற பயிற்சி அருமை.என்று முதலில் கருத்து சொல்ல வந்து,அதனை ஆங்கிலம்,தெலுங்கு,ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் சொல்லி அசத்தினார்.
பயிற்சி குறித்து பேசிய மாணவர் ஒருவர் ,நான் யார் என்பதை இந்த பயிற்சியின் வழியாக நன்றாக கற்று கொண்டேன்.இலக்குகளை எவ்வாறு நிர்ணயிக்க வேண்டும் என்பதை எனது வருங்கால குழந்தைக்கு சொல்லி கொடுக்கும் அளவுக்கு என்னிடம் ஆளுமையை இந்த பயிற்சி முகாம் கற்று கொடுத்துள்ளது என்று பேசினார்.
KV பள்ளியில் முதல்வர் லதா அவர்கள்,ஆசிரியைகள் தேன்மொழி,ஆசிரியர் நடராஜன்,இன்னும் பல ஆசிரியர்கள் ,அலுவலக பணியாளர்கள்,பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ,செயலர் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்து பயிற்சி சிறப்பாக அமைய உதவி செய்தார்கள்.அனைவருக்கும் நன்றிகள் பல.
நிகில் அறக்கட்டளை குறித்து மேலும் சில தகவல்கள் :
திரு.நாகலிங்கம் மற்றும் அவரது மனைவி மலர்க்கொடி இருவரும் இணைந்து நிகில் அறக்கட்டளை ஆரம்பித்து தொடர்ந்து இது வரை சுமார் ஒரு லட்சத்து ஐம்பத்து ஏழாயிரம் மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளுக்கே சென்றே ஒரு நாள் முழுவதும் வாழ்வியல் திறன் பயிற்சி ( 50 மாணவர்களுக்கு ஒரு பயிற்றுனர் என்கிற விகிதத்தில் ) உன்னையே நீ அறிதல்,இலக்கு நிர்ணயித்தல் ,தகவல் தொடர்பு ,நினைவாற்றல் பயிற்சி என்கிற தலைப்புகளில் பயிற்சி இலவசமாக 9,10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு வழங்கி உல்ளனர்..பயிற்சியின் நிறைவாக இந்த தலைப்புகளில் உள்ள தகவல்கள் அடங்கிய புத்தகம் மற்றும் சான்றிதழ் அனைத்து மாணவர்களுக்கும் பரிசாக வழங்கப்படும்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர் நிலை,மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக இந்த பயிற்சி வழங்கப்படுகிறது.ஆர்வமுள்ள பள்ளிகள் நிகில் திரு.நாகலிங்கம் ( 9003659270) அவர்களை தொடர்பு கொள்ளலாம் .சனிக்கிழமைகளில் மட்டுமே இந்த பயிற்சி பள்ளிகளில் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த முயற்சி இன்னும் பல லட்சம் மாணவர்களை சென்று அடைய வாழ்த்துக்கள்.
அன்புடன் நிகில் லெ .சொக்கலிங்கம் ,தலைமை ஆசிரியர்,சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,தேவகோட்டை.சிவகங்கை மாவட்டம்.

No comments:
Post a Comment