Wednesday, 24 January 2018

தேசிய வாக்காளர் தினம் ஏன் ஜனவரி 25ம் தேதி கொண்டாடப்படுகிறது?

 தேவகோட்டை பள்ளியில் மாணவர்களுடன் சப் கலெக்டர் கலந்துரையாடல்

தேசிய வாக்காளர் தின விழா 



                    தேவகோட்டை -  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்   நடுநிலை பள்ளியில்  பெற்றோர்களுக்கான கோலப்போட்டிகளுடன் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது.தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.


                           விழாவில் கலந்துகொண்டோரை பள்ளியின் தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் வரவேற்றார்.தேவகோட்டை சப் கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி கணித துறை தலைவர் சிந்தாமணி ,தேவகோட்டை துணை வட்டாட்சியர் மாணிக்க வாசகம்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சப் கலெக்டர்  மாணவ,மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசுகையில்,அனைவரும் வாக்களிக்க ஆவண செய்வதே அரசின் நோக்கமாகும்.100 சதவிகிதம் வாக்களிக்க அனைவரும் முயற்சி எடுக்க வேண்டும்.அதற்காகத்தான் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கபடுகிறது.ஒரிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் தான் ஜனவரி 25ம் நாள் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடுவது என்று முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்வில் வாக்காளர்  உறுதிமொழி கூற  அனைத்து மாணவ மாணவியரும்,ஆசிரியர்களும்,பெற்றோர்களும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் .விழாவில் திரளான பெற்றோரும் கலந்துகொண்டனர்.பெற்றோர்களும்,மாணவிகளும் கோலப்போட்டியில் பங்கேற்றனர்.சுமார் 25க்கும் மேற்பட்ட கோலங்கள் போடப்பட்டன.பெற்றோர்களுக்கான கோலப்போட்டியில் புவனேஸ்வரி முதல் பரிசையும்,பாரதி இரண்டாம் பரிசையும்,பெரியநாச்சி மூன்றாம் பரிசினையும் பெற்றனர்.மாணவர்களுக்கான கோலப்போட்டியில் திவ்யஸ்ரீ முதல் பரிசையும்,சந்தியா இரண்டாம் பரிசையும்,காயத்ரி மூன்றாம் பரிசையும் பெற்றனர்.  நிறைவாக பள்ளி ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.
                                              நிகழ்வின் முன்னதாக மாணவர்கள்  அஜய் பிரகாஷ் மற்றும் ஐயப்பன் ஆகியோர் தேசிய வாக்காளர் தினம் தொடர்பாக கவிதையும், மாணவி சக்தி ஆங்கிலத்தில் உரையும் ,மாணவர் கார்த்திகேயன் வாக்காளர் தினம் தொடர்பாக பேசவும் செய்தார் .மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.


பட விளக்கம் ; தேவகோட்டை சேர்மன்  மாணிக்கவாசகம் நடுநிலை பள்ளயில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் தேவகோட்டை சப் கலெக்டர் ஆஷா அஜித் ,பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் ,துணை வட்டாச்சியர் மாணிக்கவாசகம் ஆகியோர் உள்ளனர்.


No comments:

Post a Comment