Thursday, 11 January 2018

                        பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா 



தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
  
               சமத்துவ பொங்கல் விழாவிற்கு வந்தவர்களை ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம்  தலைமையில் ஆசிரியர்கள், சத்துணவு அமைப்பாளர் தென்றல் மற்றும் மாணவிகள் பொங்கல் சமைத்து மாணவர்களுக்கு வழங்கினர்.
பொங்கல் விளையாட்டு, பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.நிகழ்விற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் கருப்பையா செய்து இருந்தார்.நிறைவாக ஆசிரியை முத்து மீனாள்  நன்றி கூறினார்.


பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.  

No comments:

Post a Comment