Thursday, 4 January 2018

பாவை விழாவில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு 



தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலைய துறை பாவை விழா போட்டிகளில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பாவைவிழா ஒப்புவித்தல் போட்டிகளில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
             விழாவிற்கு வந்தவர்களை ஆசிரியை முத்து மீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.வட்டார அளவிலான திருப்பாவை,திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டியில் சிறுவர்களுக்கான ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள பிரிவில்  முதலிடம் பெற்ற திவ்ய ஸ்ரீ,இரண்டாம் இடம் பெற்ற ஜெயஸ்ரீ ,மூன்றாமிடம் பெற்ற அட்சயா , நான்கு மற்றும் ஐந்து வகுப்புகளுக்கான பிரிவில் முதலிடம் பெற்ற ஜனஸ்ரீ ,இரண்டாமிடம் பெற்ற வெங்கட்ராமன்,மூன்றாமிடம் பெற்ற கிஷோர்குமார்,6 முதல் 8 வகுப்பு வரை உள்ள பிரிவில் முதலிடம் பெற்ற ராஜேஷ், இரண்டாமிடம் பெற்ற கார்த்திகேயன்,மூன்றாமிடம் பெற்ற ஐயப்பன்  ,கட்டுரை போட்டியில் மூன்றாமிடம் பெற்ற நித்யகல்யாணிக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.பரிசுகளை வழங்கிய இந்து சமய அறநிலைய துறை திருவாடானை வட்ட ஆய்வாளர் வசந்தா, போட்டியின் நடுவர்களாக செயல்பட்ட அழகப்பா பல்கலைக்கழக ஆசிரிய காப்பாளர் சந்திரன் ,தேவகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஓய்வு ) குமார்,கோவில் அலுவலக பணியாளர்கள் சுந்தர்,ராணி ஆகியோருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிறைவாக ஆசிரியை முத்து லெட்சுமி நன்றி தெரிவித்தார்.
பட விளக்கம் : தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலைய துறை சார்பாக தேவகோட்டை வட்டார அளவிலான பாவை விழா ஒப்புவித்தல் போட்டிகளில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றதற்கு பள்ளியில்  பாராட்டு விழா நடைபெற்றது.

No comments:

Post a Comment