பெட்ரோலிய துறையின் போட்டிக்கு தகுதி தேர்வு
தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் எரிவாயு துறையால் நடத்தப்படவுள்ள தேசிய போட்டிக்கு மாணவர்களை பள்ளி அளவில் தேர்வு செய்யும் தகுதி போட்டி நடைபெற்றது.
பெட்ரோல் மற்றும் எரிவாயு ஆகிய இயற்கை வளங்களை பாதுகாத்தல் என்ற தலைப்பில்
ஓவிய போட்டியும்,நான் எவ்வாறு பெட்ரோலிய பொருள்களை
பாதுகாப்பது,சேமிப்பது,தேசிய அளவில் இதனை பாதுகாப்பது தொடர்பாக எவ்வாறு
எடுத்து செல்வது என்கிற தலைப்புகளில் போட்டிகள் நடைபெற்றன.போட்டிக்கான
நிகழ்ச்சியில் மாணவர் அஜய் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ
.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் .ஆசிரியை முத்துமீனாள் போட்டிகளை
நடத்தினார்.ஆங்கில கட்டுரை போட்டியில் ரஞ்சித்,சஞ்சீவ் ,தமிழ் கட்டுரை போட்டியில் சக்தி,சந்தியா,காவியா,ஓவியப்போட்டியில் அபிநயா ,திவான்,சஞ்சைஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். நிறைவாக மாணவர் நந்தகுமார் நன்றி கூறினார்.
பட விளக்கம் :சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பெட்ரோலியம் மற்றும் எரிவாயு துறையால் நடத்தப்படவுள்ள கட்டுரை மற்றும் ஓவிய போட்டிக்கு தகுதி போட்டி பள்ளி அளவில் நடைபெற்றது.
தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் எரிவாயு துறையால் நடத்தப்படவுள்ள தேசிய போட்டிக்கு மாணவர்களை பள்ளி அளவில் தேர்வு செய்யும் தகுதி போட்டி நடைபெற்றது.
பட விளக்கம் :சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பெட்ரோலியம் மற்றும் எரிவாயு துறையால் நடத்தப்படவுள்ள கட்டுரை மற்றும் ஓவிய போட்டிக்கு தகுதி போட்டி பள்ளி அளவில் நடைபெற்றது.
No comments:
Post a Comment