Sunday, 7 January 2018

தேவகோட்டை பள்ளி சாதனை 
மாவட்ட அளவில் முதலிடம் 


 

பாவை விழா போட்டிகளில் தொடர்ந்து மூன்றாம் ஆண்டாக 

மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை


தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டியிட்டு அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து மூன்றாவது  ஆண்டாக வெற்றி 


தேவகோட்டை – மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த மாணவருக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.
                    தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை சார்பாக மாவட்ட அளவில் சிவகங்கையில்  நடைபெற்ற பாவை விழா போட்டிகளில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளி மாணவர் முதலிடம் பிடித்து சாதனை படைத்ததை பாராட்டும்  விழா பள்ளியில் நடைபெற்றது.விழாவிற்கு வந்தவர்களை மாணவர் அஜய் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட அளவிலான ஒப்புவித்தல் போட்டியில் அஜய் என்கிற மாணவர்  மாவட்ட அளவில் முதலிடம் பெற்று பரிசுகளையும்,சான்றிதழ்களையும் பெற்றார்.கடந்த இரண்டு ஆண்டுகளாக மாவட்ட அளவில் திருப்பாவை ஒப்புவித்தல் போட்டியில் இப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து வெற்றி பெற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து மூன்றாவது  ஆண்டாக இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.இப்போட்டிகளில்  திவ்ய ஸ்ரீ, ஜெயஸ்ரீ , அட்சயா ,  ஜனஸ்ரீ , வெங்கட்ராமன், கிஷோர்குமார்,ராஜேஷ், கார்த்திகேயன், ஐயப்பன்   மாணவர்கள் பங்கேற்று சான்றிதழ்கள் பெற்றனர்.வெற்றி பெற்ற மற்றும் பங்கேற்று சான்றிதழ் பெற்ற மாணவர்களையும்,பயிற்சி அளித்த முத்து லெட்சுமி,முத்துமீனாள் ஆசிரியர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.நிறைவாக மாணவி காயத்ரி நன்றி கூறினார்.

பட விளக்கம் : தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை சார்பாக மாவட்ட அளவில் சிவகங்கையில்  நடைபெற்ற பாவை விழா போட்டிகளில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற மற்றும்  முதலிடம் பிடித்த மாணவரை   பாராட்டும்  விழா பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமையில் பள்ளியில்  நடைபெற்றது.

No comments:

Post a Comment