Tuesday, 30 January 2018


 இத,இத,இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம்,


  கண்டிப்பாக நான் இந்த கல்லூரியில் வந்து படிப்பேன்.இதில் என்ன ஆச்சிரியம்? மேலும் சுவாரஸ்யமாக எட்டாம் வகுப்பு மாணவி சின்னம்மாள் சொல்வதை கேளுங்கள் :



                               எங்கள் பள்ளியில் நாளை உங்களை கல்லூரிக்கு அழைத்து செல்கிறோம் என்று தலைமை ஆசிரியர் சொன்னார்கள்.எனக்கு அது புதிய விஷயமாக இருந்தது.இரவு முழுவதும் கல்லூரிக்கு செல்வது தொடர்பாகவே யோசித்து கொண்டு இருந்தேன்.மறு நாள் கல்லூரிக்கு சென்றோம்.அங்கு விலங்கியல் துறையில் மனித எலும்புக்கூடு இருப்பதை கண்டு நான் முதலில் பயந்து விட்டேன்.அதுதான் முதலில் இருந்தது.பிறகு விலங்கியல் துறையில் ஆசிரியர்கள்,மாணவர்கள் எங்களை அன்புடன் வரவேற்று நுண்ணோக்கி வழியாக பல விவரங்களை சொன்னார்கள்.ரத்தம் வகை எவ்வாறு தெரிந்து கொள்வது என்பதை நானே தைரியமாக ரத்தம் கொடுத்து தெரிந்து கொண்டேன்.பாம்பு,பள்ளி,தேள் இன்னும் பல உயிரினங்களை பார்த்தேன்.புறா,பறவை என பலவற்றை பார்த்து முக்கிய விஷயங்களை அறிந்து கொண்டேன்.மூலிகை தோட்டம்,வேதியியல் ஆய்வகத்தில் பல்வேறு சோதனை முறைகள் நன்றாக விளக்கி சொன்னார்கள்.இயற்பியல் ஆய்வகத்தில் கல்லூரி முதல்வர் எங்களுக்கு சோதனைகளை நன்றாக புரியும்படி விளக்கி சொன்னார்கள்.
                                நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் எங்கள் கிராமத்தில் இருந்து ஆறாம் வகுப்பில் இந்த பள்ளியில் வந்து சேர்ந்தேன்.எனது அப்பா,அம்மா கிராமத்தில் உள்ளனர்.எனது சித்தி வீட்டில் இருந்து படித்து வருகிறேன்.நான் இனிமேல் என்னத்த  படிக்க போகிறோம் என்று எண்ணி  இருந்தேன்.ஏனெனில் எனது குடும்ப சூழ்நிலை அப்படி உள்ளது.இந்த நிலையில் தான் இந்த கல்லூரிக்கு களப்பயணம் பள்ளியில் இருந்து அழைத்து வந்தனர்.இந்த கல்லூரியை பார்த்த பிறகு கண்டிப்பாக இந்த கல்லூரி படிப்பு வரை படிக்க வேண்டும் என்று எனக்குள் பதிந்து விட்டது.எப்படியாவது கல்லூரியில் விலங்கியல் துறை படிப்பு எடுத்து படிப்பேன் என்று உறுதியடன் தெரிவித்தார்.கூடியிருந்த அனைவரும் கைதட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

சுருக்கமான செய்தியாக  :

 நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கல்லூரிக்கு ஆய்வக களப்பயணம் 


தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் அறிவியல் ஆய்வக களப்பயணமாக ஸ்ரீ சேவுகன் அண்ணாமலைக் கல்லூரி அறிவியல் ஆய்வகத்திற்கு களப்பயணமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.தொடர்ந்து ஐந்தாம் ஆண்டாக களப்பயணம் அழைத்து செல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.  

                      இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரை விலங்கியல் துறை பேராசிரியர்  திருநாவுக்கரசர்   வரவேற்றார்.மாணவர்களை அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் செய்து இருந்தார்.கல்லூரி முதல்வர் முனைவர்.சந்திரமோகன் தலைமை தாங்கினார்.
துறை தலைவர்கள் விஜயன் (இயற்பியல் ),நாவுக்கரசர் (விலங்கியல்),காஜா மைதீன் (வேதியியல் ) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.களப்பயணத்தில் மாணவர்கள் விலங்கியல் துறையில் மனித எலும்பு மண்டலம் தொடர்பான மாதிரியையும்,கரு உருவாவதை நுண்ணோக்கி வழியாகவும் பார்த்தும் அதன் பயன்களையும் ,  மூலிகை தோட்டம் சென்று மலேசியன் திப்பிலி,அம்மான் பச்சரிசி,சிறுநங்காய் போன்றவற்றையும்,வேதியியல் ஆய்வகத்தில் உப்பு தொடர்பான சுடர் சோதனைகள்,பருமனரி பகுப்பாய்வு செய்து காட்டல் ,ஆய்வக உபகரணங்களான கூம்பு குடுவை முதலானவற்றையும்,இயற்பியல் துறையில் காந்தங்கள்,வான்நோக்கி,மின்நோக்கி,தனி ஊசல் உட்பட அதிகமான சோதனைகளையும் நேரடியாக செய்து கற்று கொண்டனர். நிறைவாக பள்ளி ஆசிரியை செல்வமீனாள் பள்ளியின் சார்பாக நன்றி கூறினார்.
                                                     முன்னதாக விலங்கியல் துறை பேரா.செந்தில்குமார்,தாவரவியல் துறை பேரா.வீரலட்சுமி,இயற்பியல் துறை பேரா.உமா மகேஸ்வரி,வேதியியல் துறை பேரா.மோகன்,சீனிவாசன் ஆகியோர் மாணவர்களுக்கு விரிவாக துறை சார்ந்த விளக்கங்களை அளித்தனர்.நிறைவு நிகழ்ச்சியில் தமிழ்த்துறை தலைவர் மாரிமுத்து,பேரா.பாகை கண்ணதாசன் ஆகியோர் மாணவர்களை வாழ்த்தி பேசினார்கள்.மாணவர்கள் நித்திய கல்யாணி,கார்த்திகேயன்,காயத்ரி,ரஞ்சித்,சக்தி,உமாமகேஸ்வரி,
காவியா,
சின்னம்மாள் உட்பட பலர் தங்களின் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி  மாணவர்கள் அறிவியல் ஆய்வக களப் பயணமாக ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு சென்று  ஆய்வகங்களை பார்வையிட்டனர்.



மேலும் விரிவாக :




 நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கல்லூரிக்கு ஆய்வக களப்பயணம் 


தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் அறிவியல் ஆய்வக களப்பயணமாக ஸ்ரீ சேவுகன் அண்ணாமலைக் கல்லூரி அறிவியல் ஆய்வகத்திற்கு களப்பயணமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.தொடர்ந்து ஐந்தாம் ஆண்டாக களப்பயணம் அழைத்து செல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.  

                      இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரை விலங்கியல் துறை பேராசிரியர்  திருநாவுக்கரசர்   வரவேற்றார்.மாணவர்களை அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் செய்து இருந்தார்.கல்லூரி முதல்வர் முனைவர்.சந்திரமோகன் தலைமை தாங்கினார்.

கல்லூரி முதல்வர் பேச்சு

                                     இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரை விலங்கியல் துறை பேராசிரியர்  திருநாவுக்கரசர்   வரவேற்றார்.கல்லூரி முதல்வர் சந்திரமோகன் தலைமை தாங்கி பேசுகையில்,8ம் வகுப்பு படிக்கும் நீங்கள் எந்த விசயத்தை அணுகினாலும் ஏன் என்று கேள்வி கேட்டு பதில் பெறுங்கள்.அப்போதுதான் உங்கள் அறிவு விரிவடையும் என்றார்.சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா ? என்று கேட்ட கேள்வி வந்ததே முதல் அறிவியல் கேள்வி என்று கூறினார்.ஐசக் நியூட்டன் போன்ற அறிவியலாலர்கள்  அறிவியல்  தொடர்பான நிறைய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியதற்கு காரணமே அவர்கள் ஏன் என்று கேள்வி கேட்டதனால்தான் என்றார்.எனவே நீங்களும்  சிறு வயதில் படிக்கும் காலத்திலேயே நிறைய கேள்விகள் கேட்டு பதில்கள் பெறுங்கள்.வருங்காலத்தில் கண்டிப்பாக அறிவியல் விஞ்ஞானிகள் ஆவிர்கள் என பேசினார்.

  விலங்கியல்,தாவரவியல் துறை பார்வையிடல்                 களப்பயணத்தின் தொடக்கமாக   மாணவ,மாணவியர் விலங்கியல் துறையில்  ஒரு செல் உயிரியிகளிலிருந்து பல செல் உயிரிகள் வரையும்,முதுகெலும்பற்றவைகளான புரோட்டோசோவா தொகுதியை சார்ந்த அமீபா ,பாரமீசியம் ,பிளாஸ்மோடியம்,பவளப்பாறைகள்,அஸ்கல்மன்திஸ் ,ஆர்த்ரோபோடா,ஆக்டோபஸ்,ஸ்டார் பிஷ்,சங்கு,சிப்பி,இறால்,நத்தை,முதுகெலும்பு உள்ளவைகளில் கடல் குதிரை,பச்சோந்தி,பல்லி ,ஆமை, மீன் வகைகள்,இருவாழ்விகளான தவளை,ஊர்வனவற்றில் பாம்பு வகைகளான விஷப்பாம்புகள்,விஷமில்லாப் பாம்புகள்,நல்லபாம்பு,ராஜநாகம்,பச்சைப்பாம்பு,ஓணான்,பறப்பனவற்றில் புறா,காகம்,மைனா ,மரங்கொத்தி,மீன் கொத்தி ஆகியவை உடல் உறுப்புகளின் எலும்புகளுடனும்,பாலூட்டிகலில் முயல்,பன்றி,எலி மற்றும் அவைகளின் கரு போன்றவைகளையும் ,எலும்பு வகைகள்,மனித இதய மாதிரி,டி என் ஏ ,ஆர் என் ஏ மாதிரிகளையும்,மைட்டோகாண்ட்ரியா  ,மனித எலும்பு மண்டலம் தொடர்பான மாதிரியையும்,கரு உருவாவதை நுண்ணோக்கி வழியாகவும் பார்த்தும் அதன் பயன்களை கேட்டும் அறிந்து கொண்டனர்.ரத்த வகை கண்டறிதல் எவ்வாறு நடைபெறுகிறது, அதன் அர்த்தங்கள் என்ன ,அதன் வகைகள் என்ன என்பன போன்ற தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.

                                                          தாவரவியல் துறை 
                          தாவரவியல் துறையில் மூலிகை தோட்டத்தில் டெரிடொ பைட்டுகள்,பிரையொ பைட்டுகள் என  தாவரங்களின் வகைகளையும்,நுண்ணோக்கிகள் மூலம் தாவரத்தின் மகரந்தப்பை,சூல்பைகளையும் பார்வையிட்டும் அதன் பயன்பாடுகளையும் அறிந்து கொண்டனர்.

                        மூலிகை  தோட்டம்

                           மூலிகை தோட்டம் சென்றுமலேசியன் திப்பிலி,அம்மான் பச்சரிசி,சிறுநங்காய்,முடக்கத்தான்,முப்பிரண்டை,கரிசலாங்கண்ணி,
நொச்சி,வசம்பு ,ஓமவல்லி,ஆடாதொடா,தவசி முருங்கை,மஞ்சள்,மணத்தக்காளி,பெரியநெல்லி,தும்பை,அருகம்புல்,
சங்குபூ,
செம்பருத்தி,குப்பைமேனி உட்பட பல்வேறு மூலிகை செடிகளை நேரடியாக  பார்த்தும் அதன் பயன்களை அறிந்தும், அது எவ்வாறு மனிதர்களுக்கு உதவியாக உள்ளது என்பதையும் தெளிவாக எடுத்து கூறினார்கள்.தாவரவியல்  விஞ்ஞானிகளை படங்களின் மூலமாக அவர்களின் கண்டுபிடிப்புகளை பார்வையிட்டும் பயன்பெற்றனர்.
        வேதியியல் ஆய்வகம்  பார்வையிடல்
                                    வேதியியல் ஆய்வகத்தில் உப்பு தொடர்பான சுடர் சோதனைகள்,பருமனரி பகுப்பாய்வு செய்து காட்டல் ,ஆய்வக உபகரணங்களான கூம்பு குடுவை,பியூரெட்,பீப்பெட்,சோதனை குழாய்,கண்ணாடி தட்டு,உப்பு எடுக்கும் கரண்டி,கண்ணாடி கலக்கி, புன்சென் அடுப்பு , நிற மாற்றத்தை சரியாக காட்டும் போர்செளின் டை , 200 மி.லி.பீக்கர் ,வீழ்படிவு சேகரிக்கும் சோதனை குழாய் போன்றவற்றையும்,நடுநிலையாக்கல் வினைகளையும்,வீழ்படிவு எவ்வாறு நடைபெறுகிறது என்பதையும் அதற்கான உபகரணங்கள் எப்படி செயல்படுத்த படுகிறது என்பதையையும் நேரடியாக செய்து காட்டல் மூலம் கற்று கொண்டனர்.  மாணவர்களும் நடுநிலையாக்கள் வினைகளை அவர்களே செய்து பார்த்து அதன் முடிவு நிலைகளை தெரிந்து கொண்டனர்.மேலும் உப்புக்கள் கண்டறிதல் சோதனைகளை அதன் நிறங்கள் புன்சன் அடுப்பில் காண்பிக்கும்போது எவ்வாறு மாறுகிறது என்பதையும் ,அதன் மூலம் அவற்றை எவ்வாறு கண்டுபிடிக்க முடியும் என்பதையும் அவர்களே செய்து பார்த்தனர்.
              இயற்பியல் ஆய்வகம் பார்வையிடல்
                                               இயற்பியல் துறையில் நீர் அழுத்த மேஜிக்,ஒளி விலகல் எண் காணுதல்,நியூட்டன் வளையங்கள்,புவியீர்ப்பு விசை,கீற்றணி,முப்பட்டகம் ,பரப்பு இழுவிசை,திருகுஅளவி ,வெர்னியர் கருவி,குழிஆடி,குவி ஆடி,காந்தவியல் மானி ,தொலைநோக்கி,தனி ஊசல்,ஊசிமுனை மற்றும் நுண்ணோக்கி சோதனை,ஸ்ட்ரா மேஜிக் போன்றவை நேரடியாக செய்து காண்பித்தும் மாணவர்களால் செய்தும் பார்க்கப்பட்டது.கணினி துறையில் எவ்வாறு கணினியை இயக்குவது,அதில் உள்ள முக்கிய பகுதிகள் என அனைத்துக்கும் விரிவாக நேரடியாக செயல் விளக்கங்கள் மாணவ,மாணவியர்க்கு விளக்கப்பட்டது.

 துறை தலைவர்கள் விஜயன் (இயற்பியல் ),நாவுக்கரசர் (விலங்கியல்),காஜா மைதீன் (வேதியியல் ) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னதாக விலங்கியல் துறை பேரா.செந்தில்குமார்,தாவரவியல் துறை பேரா.வீரலட்சுமி,இயற்பியல் துறை பேரா.உமா மகேஸ்வரி,வேதியியல் துறை பேரா.மோகன்,சீனிவாசன் ஆகியோர் மாணவர்களுக்கு விரிவாக துறை சார்ந்த விளக்கங்களை அளித்தனர்.நிறைவு நிகழ்ச்சியில் தமிழ்த்துறை தலைவர் மாரிமுத்து,பேரா.பாகை கண்ணதாசன் ஆகியோர் மாணவர்களை வாழ்த்தி பேசினார்கள்.மாணவர்கள் நித்திய கல்யாணி,கார்த்திகேயன்,காயத்ரி,ரஞ்சித்,சக்தி,உமாமகேஸ்வரி,
காவியா,
சின்னம்மாள் உட்பட பலர் தங்களின் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர்.

  களப்பயணம் தொடர்பாக பள்ளி மாணவர்களின் கருத்துக்கள் : 
             ஆய்வக களப்பயணம் குறித்து நிறைவாக மாணவி காயத்ரி   பேசுகையில் கல்லூரியில் படித்தால் கூட ஒரு துறை பற்றி மட்டும்தான் அறிய முடியும்.ஆனால் 8ம் வகுப்பு படிக்கும்போதே நாங்கள் கல்லூரியில் உள்ள அனைத்து அறிவியல் துறைகளையும் அறியும் வாய்ப்பை பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்றார்.

 கண்டிப்பாக நான் இந்த கல்லூரியில் வந்து படிப்பேன்.இதில் என்ன ஆச்சிரியம்? மேலும் சுவாரஸ்யமாக மாணவி சின்னம்மாள் சொல்வதை கேளுங்கள் :

                               எங்கள் பள்ளியில் நாளை உங்களை கல்லூரிக்கு அழைத்து செல்கிறோம் என்று தலைமை ஆசிரியர் சொன்னார்கள்.எனக்கு அது புதிய விஷயமாக இருந்தது.இரவு முழுவதும் கல்லூரிக்கு செல்வது தொடர்பாகவே யோசித்து கொண்டு இருந்தேன்.மறு நாள் கல்லூரிக்கு சென்றோம்.அங்கு விலங்கியல் துறையில் மனித எலும்புக்கூடு இருப்பதை கண்டு நான் முதலில் பயந்து விட்டேன்.அதுதான் முதலில் இருந்தது.பிறகு விலங்கியல் துறையில் ஆசிரியர்கள்,மாணவர்கள் எங்களை அன்புடன் வரவேற்று நுண்ணோக்கி வழியாக பல விவரங்களை சொன்னார்கள்.ரத்தம் வகை எவ்வாறு தெரிந்து கொள்வது என்பதை நானே தைரியமாக ரத்தம் கொடுத்து தெரிந்து கொண்டேன்.பாம்பு,பள்ளி,தேள் இன்னும் பல உயிரினங்களை பார்த்தேன்.புறா,பறவை என பலவற்றை பார்த்து முக்கிய விஷயங்களை அறிந்து கொண்டேன்.மூலிகை தோட்டம்,வேதியியல் ஆய்வகத்தில் பல்வேறு சோதனை முறைகள் நன்றாக விளக்கி சொன்னார்கள்.இயற்பியல் ஆய்வகத்தில் கல்லூரி முதல்வர் எங்களுக்கு சோதனைகளை நன்றாக புரியும்படி விளக்கி சொன்னார்கள்.
                                நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் எங்கள் கிராமத்தில் இருந்து ஆறாம் வகுப்பில் இந்த பள்ளியில் வந்து சேர்ந்தேன்.எனது அப்பா,அம்மா கிராமத்தில் உள்ளனர்.எனது சித்தி வீட்டில் இருந்து படித்து வருகிறேன்.நான் இனிமேல் என்னத்த  படிக்க போகிறோம் என்று எண்ணி  இருந்தேன்.ஏனெனில் எனது குடும்ப சூழ்நிலை அப்படி உள்ளது.இந்த நிலையில் தான் இந்த கல்லூரிக்கு களப்பயணம் பள்ளியில் இருந்து அழைத்து வந்தனர்.இந்த கல்லூரியை பார்த்த பிறகு கண்டிப்பாக இந்த கல்லூரி படிப்பு வரை படிக்க வேண்டும் என்று எனக்குள் பதிந்து விட்டது.எப்படியாவது கல்லூரியில் விலங்கியல் துறை படிப்பு எடுத்து படிப்பேன் என்று உறுதியடன் தெரிவித்தார்.கூடியிருந்த அனைவரும் கைதட்டி வாழ்த்து தெரிவிதார்.

கல்லூரி ஆய்வகத்திற்கு நடுநிலைப் பள்ளி மாணவர்களின் களப்பயணத்தின் வெற்றி  என்ன ?

இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் கூறியதாவது :
                எங்கள் பள்ளியில் பயிலும் பெரும்பாலான மாணவர்கள் சமுதாயத்தில்,பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளவர்கள். இந்த மாணவர்களில் எத்துணை பேர் எட்டாம் வகுப்புக்கு பிறகு,பத்தாம் வகுப்புக்கு பிறகு மேல் படிப்புக்கு செல்வார்கள் என்பது கேள்விக்குறிதான்.எட்டாம் வகுப்பு படிக்கும்போதே இந்த நிலையில் உள்ள மாணவர்கள் கல்லூரியை பார்த்து விட்டால் கண்டிப்பாக அவர்கள் எண்ணங்களில் ஒரு மாற்றம் ஏற்படும் என்று எண்ணினேன்.அவர்களும் கல்லூரியில் படிப்பார்கள் .படிக்கும் எண்ணம் உருவாகும் என்று எண்ணி,கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாக அருகில் இருக்கும் ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு இங்கு பயிலும் மாணவர்களை அழைத்து செல்லலாம் என கல்லூரி முதல்வரிடம் சென்று அனுமதி கேட்டேன்.அவர்களும் உடனடியாக அனுமதி கொடுத்து எங்களை ஒரு நாள் முழுவதும் அன்புடன் உபசரித்து அனைத்து துறை தலைவர்களின்,பேராசிரியர்களின்,மாணவர்களின் ஒத்துழைப்போடு அனைத்து ஆய்வகங்களையும் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக சுற்றி காண்பித்து விளக்கி கூறி வருகின்றனர்.
                                          மாணவி சின்னம்மாள் கூறுவதுதான் இந்த களப்பயணத்தில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது.கல்லூரியில் படிக்க வேண்டும் என்கிற எண்ணம் அந்த மாணவியின் மனதில் உருவானது மிக பெரிய விஷயம்.இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம். மாணவி சின்னம்மாள்  மனதில் உருவான எண்ணம்தான் களப்பயணத்தின் வெற்றி. மற்ற மாணவர்களுக்கும் இது போன்று எண்ணங்கள் ,குறிக்கோள்கள் உருவாகி விடும்.கல்லுரியில் பேராசிரியர்கள்,கல்லூரியின் அமைப்பு ,ஆய்வகங்கள் போன்றவற்றை பார்க்கும்போதும்,நேரடியாக சோதனை கூடங்களை  பார்க்கும்போதும் பல்வேறு குறிக்கோள்கள் அவர்கள் மனதில் உருவாகும்.நான் படிக்கும் காலங்களில் இதுபோன்று வாய்ப்பு கிடைக்கவில்லை.12ம் வகுப்புக்கு பின்புதான் கல்லூரி தொடர்பாகவே தெரியும்.அப்படியே கல்லூரியில் படிக்கும்போதும் வேதியியல் என்றால் வேதியியல் துறை மற்றும் அது சார்ந்த விருப்ப படத்திற்கான துறையைத்தான் நாம் சென்று பார்ப்போம்.ஆனால் இன்று எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் விலங்கியல்,தாவரவியல்,வேதியியல் ,இயற்பியல் என கல்லூரியில் உள்ள அனைத்து ஆய்வகங்களையும்  ஆர்வமுடன் பார்த்து அறிந்துகொண்டனர். இயற்பியல் துறையில் மாணவர்களை கல்லூரி அனுபவம் தொடர்பாக பேச சொன்னதில் கார்த்திகேயன் என்கிற மாணவர் முதல் பரிசையும்,நித்யகல்யாணி என்கிற மாணவி இரண்டாம் பரிசையும்,ரஞ்சித் என்கிற மாணவர் மூன்றாம் பரிசையும் பெற்றனர்.இவர்கள் உட்பட பேசிய  மாணவர்கள் அனைவரும் இயற்பியல் துறையில் செய்து காண்பித்த அனைத்தையும் அப்படியே கருத்துக்களுடன் விரிவாக சொன்னார்கள்.விலங்கியல் துறையில் மாணவி காயத்ரி கருத்துக்களை சொல்லி பரிசுகளை பெற்றார்.நேரடி களப்பயணத்தின் வாயிலாக மாணவர்களின் அறிவும்,குறிக்கோளும் மேலும் வலிமை பெறும் என்பது உண்மை.தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக ஒத்துழைப்பு வழங்கி வரும் எங்கள் பள்ளி நிர்வாகத்துக்கும்,கல்லூரி நிர்வாகத்துக்கும்,கல்லூரி முதல்வருக்கும்,துறை தலைவர்களுக்கும்,பேராசிரியர்களுக்கும் ,மாணவர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

1 comment:

  1. மகிழ்ச்சி இத்தகைய மாணவர்கள் வருங்கால இந்தியாவின் கண்கள் வாழ்க வளர்க உங்கள் கல்விப்பணி

    ReplyDelete