வாழ்வியல் திறன் பயிற்சி முகாம்
காரைக்குடி - காரைக்குடி கேந்திர வித்யாலயா பள்ளியில் வாழ்வியல் திறன் பயிற்சி முகாம் நடைபெற்றது.
பயிற்சி முகாமிற்கு வந்தவர்களை பள்ளி முதல்வர் (பொறுப்பு ) லதா வரவேற்றார்.மதுரை சுங்கத்துறை தீர்ப்பாயத்தின் இணை ஆணையாளர் பாண்டியராஜா முகாமிற்கு தலைமை தாங்கி மாணவர்கள் இலக்குகளை எவ்வாறு நிர்ணயித்து எளிதாக அடைவது என்பது தொடர்பாக விளக்கி பேசினார்.நிகில் அறக்கட்டளை தலைவர் மலர்க்கொடி முன்னிலை வகித்தார்.நிகில் அறக்கட்டளை நிறுவனர் நாகலிங்கம் தலைமையிலான பயிற்சி குழுவினர் சிவகங்கை குமார்,விசுவநாதன்,மதுரை நடராஜ் ,ராமநாதபுரம் சபாபதி ஆகியோர் நினைவாற்றல்,எளிதாக தொடர்பு கொள்ளுதல்,தன்னையறிதல் ஆகிய தலைப்பில் ஒரு நாள் பயிற்சி அளித்தனர்.பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அன்பு குழந்தை நாதன்,செயலர் சாய் தர்மராஜ் ஆகியோர் நிகழ்விற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.நிறைவாக ஆசிரியர் தேன்மொழி நன்றி கூறினார்.
பட விளக்கம் : காரைக்குடி கேந்திர வித்யாலயா பள்ளியில் வாழ்வியல் திறன் பயிற்சி முகாமில் மதுரை சுங்கத்துறை தீர்ப்பாயத்தின் இணை ஆணையாளர் பாண்டியராஜா தலைமை தாங்கி பேசினார்.

No comments:
Post a Comment