தேசிய தொழு நோய் தினம்
தொழு நோய் குணப்படுத்த கூடிய நோய்தான்
தொடர் மருந்து சாப்பிட்டால் தொழுநோய் பூரணமாக குணமாகும்
மருத்துவர் அறிவுரை
தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தொழுநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
பள்ளி தலைமையாசிரியர் சொக்கலிங்கம் அனைவரையும் வரவேற்றார். பள்ளி செயலர் சோமசுந்தரம் தலைமை தாங்கினார். தேவகோட்டை இந்தியன் மருத்துவமனை மருத்துவர் ஜெயக்குமார் மாணவர்களிடம் தொழுநோய் விழிப்புணர்வு குறித்து பேசுகையில், தொழுநோய் என்பது கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியாவால் வருவது தான். நம்முடைய உடம்பில் ,கையிலோ, காலிலோ , வெள்ளை படலமாக இருந்து அதை தொட்டால் உணர்வே இல்லை என்றால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். நோயின் ஆரம்ப நிலையில் ஆறு மாதம் முதல் 9 மாதம் வரை தொடர்ந்து மாத்திரை மருந்து சாப்பிட்டால் தொழு நோய் எளிதில் குணமாகிவிடும். அரசு மருத்துவமனையில் அதற்காக சிகிச்சைகள் முறையாக வழங்கப்படுகிறது. 15 வருடங்களுக்கு முன்னால் முற்றிலுமாக இந்தியாவை விட்டு ஒழிக்கப்பட்ட இந்நோய் மீண்டும் சிறுக சிறுக வர ஆரம்பித்துள்ளது. தொழு நோய்க்கு தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எந்த விதமான உணவுப் பழக்க வழக்கங்களாலும் இந்நோய் நோய் வருவது கிடையாது .உணவு பழக்க வழக்கத்திற்கும் தொழு நோய்க்கும் சம்பந்தம் கிடையாது .எந்த நாட்டில் மருந்துகள் குறைவாக உள்ளதோ அந்த நாட்டில் நோய் அதிகமாக இல்லை என்று அர்த்தம் .எனவே நோய் இல்லாத நாடாக இந்தியாவை மாற்ற நாம் அனைவரும் சேர்ந்து முயற்சி செய்வோம் என்று பேசினார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது .ஆசிரியை முத்துலட்சுமி நன்றி கூறினார் .மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு மருத்துவர் பதில் அளித்தார்
படவிளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தொழுநோய் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் தேவகோட்டை இந்தியன் மருத்துவமனை மருத்துவர் ஜெயக்குமார் மாணவர்களுக்கு தொழுநோய் தொடர்பான விழிப்புணர்வு அறிவுரைகளை வழங்கினார். பள்ளி செயலர் சோமசுந்தரம் தலைமை தாங்கினார் .போட்டிகளில் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
No comments:
Post a Comment