உலகத்தின் நம்பர் 1 தொழிற்சாலை எங்கு உள்ளது தெரியுமா ?
அட நம்ம சென்னையில்தான்
உங்கள் குழந்தைகளுடன் ஒரு நாள் பயணம் செல்ல சூப்பரான இடம் ரயில் மியூசியம்
அறிமுகம் :
நண்பர்களே ! சமீபத்தில் சென்னை சென்று இருந்தேன்.மாணவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய மியூசியம் ரயில்வே மியூசியம் .எங்கு உள்ளது? எப்படி பார்க்கலாம்? நண்பர்களே சென்னை வில்லிவாக்கம் பகுதியில் பெரம்பூர் அருகே ரயில்வே தொழிற்சாலை அருங்காட்சியகம் அமைந்துள்ளது .மிகவும் அழகான அருமையான பல்வேறு தொழில்நுட்பங்களை ( லெ .சொக்கலிங்கம்,காரைக்குடி ) விளக்கக்கூடிய மாணவர்களுக்கு அதிகமாக பயனுள்ள தகவல்களை தரக்கூடிய ஒரு அருங்காட்சியமாகும் . நீங்கள் உள்ளே நுழைந்தவுடன் ஆர்ட் கேலரி பார்க்கச் சொல்கிறார்கள் .
இந்திய ரயிலின் உலக அளவிலான வளர்ச்சி :
ரயில்வே துறையின் வளர்ச்சி, ரயில்களின் வளர்ச்சி ,உலக அளவிலும் இந்திய அளவிலும் உள்ளவற்றை வரிசைப்படுத்தி உள்ளது வரவேற்பைப் பெற்றுள்ளது . இந்தியாவில் ( லெ .சொக்கலிங்கம்,காரைக்குடி ) எப்படி எல்லாம் வளர்ச்சி அடைந்து உள்ளது என்கிற தகவல்களை மிக எளிதாக அனைவரும் அறிந்து கொள்ளக்கூடிய வகையில் வரிசைப் படுத்தி உள்ளார்கள் .இரண்டாவதாக ரயில் தொழில்நுட்பத்துடன் கூடிய இன்ஜின்கள் மற்றும் அது சார்ந்த தொழில்நுட்பக் கூறுகள் மிக அழகாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது .மேலே சொன்ன தகவல்களை காட்சிப்படுத்தி தனித்தனியாக பிரித்து வைத்துள்ளார்கள் .,
பெரியவர்களையும் குழந்தைகளுக்கும் ரயில் :
கல்லூரி மாணவர்கள் குழுவாக சென்றால் பள்ளி மாணவர்கள் குழுவாக சென்றால் ,ரயில்அருங்காட்சியகத்தில் மிக அழகாக விரிவாக விளக்கி கூறுகிறார்கள். மற்றவர்கள் செல்லும்பொழுது தாங்களாக கேட்டால் மட்டுமே விளக்கங்கள் பெற இயலும்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செல்ல கூடிய ட்ரைனும் குழந்தைகளுக்காக ஒட்டப்படுகிறது. குழந்தைகளும் பெரியவர்களும் அதில் ஏறிச் செல்லலாம். அவ்வாறு தாங்கள் ஏறிச் செல்லும் பொழுது மிகப்பழமையான நடைமுறையில் உள்ள பல்வேறு ரயில்களும் அங்கே வரிசையாக காட்சிக்கு நிற்க வைக்கப்பட்டு இருக்கிறது. ரயில்களை ஒவ்வொன்றாக நீங்கள் ஆழமாக ரசித்து ரசனையுடன் காண இயலும். அதற்கான விளக்கங்களும் அங்கே வைக்கப்பட்டுள்ளன.
ஸ்கிராப் பொருள்களில் இருந்து கலை நயமிக்க பொருள்கள் :
ரயில் நிலையத்தில் உள்ள பழைய பொருள்கள் மூலமாக பல்வேறு வடிவங்களில் காட்சிப் பொருட்கள் மிக அழகாக தயார் செய்யப்பட்டு உள்ளன .அவற்றைப் பார்க்கும்போது நமக்கே மிகவும் பிரம்மிப்பாக உள்ளது. வெஸ்ட் பொருள்களில் இருந்து நல்ல அழகான கலை நயம் மிக்க பொருள்கள் தயார் செய்ய இயலும் என்பதனையும் அங்கே காண்பிக்கிறது. ரயில் என்னென்ன பொருட்கள் பயன்படுத்துகிறார்கள் ,எப்படியெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்கிற தகவல்களும் அங்கே கொடுக்கப்பட்டுள்ளது
ஆச்சரியப்படுத்தும் ட்ரெயின் கேலரி
ட்ரெயின் கேலரி என்று ஒரு அறை வைத்துள்ளனர். அந்த அறையின் உள்ளே ட்ரெயினில் பயன்படுத்தக் கூடிய பொருள்கள் பல்வேறு வகையான பொருட்களை வரிசைப் படுத்தி உள்ளார்கள். பழங்காலத்து ட்ரெயின் தொடர்பான பல பொருள்களை அங்கே வரிசைப்படுத்தி உள்ளது பார்க்கும்போது நமக்கே மிகவும் ஆச்சரியமாக இருக்கின்றது . இந்த ரயில் பொருட்கள் அனைத்தும் நமக்கு பல்வேறு புதிய விஷயங்களை கற்றுத் தருகிறது என்பதே உண்மை .இதன் தொடர்ச்சியாக அந்த அறையினுள்ளே பழங்காலத்தில் பயன்படுத்திய தொலைபேசி, ரயில் நிலையங்களுக்கு இடையில் மட்டுமே பேசக்கூடிய தொலைபேசிகளும் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது .அவற்றைக் காணும்போது நமக்கு பல்வேறு புதிய தகவல்களை கற்றுத்தருகிறது. சிறுசிறு ரயில்களை எலக்ட்ரிக்கல் மூலமாக தொடர்பு படுத்தி எவ்வாறு செல்லும்போது இன்னொரு ட்ரெயின் செல்லும் என்பதையும் , டிராபிக்கில் எவ்வாறு கதவுகள் அடைக்கப்படுகிறது, சிக்னல் எவ்வாறு காண்பிக்கப்படுகிறது ,போன்ற தகவல்களை இளம் மாணவர்கள் உட்பட அனைவரும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் ஆர்வமுடன் கவனிக்கும் வகையிலும் வரிசைப்படுத்தி நமக்காக ஓட்டி காண்பிக்கின்றனர். சிறு குழந்தைகள் அந்த இடத்தை விட்டு நகர மனமில்லாமல் ஆர்வத்துடன் அதனைப் பார்த்துக் கொண்டுள்ளனர் ..பெரியவர்களும் அதனை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டு உள்ளனர் அந்த சிறு சிறு டிரெயின்கள் அழகாக வட்டமிட்டு வண்ண விளக்குகளுடன் செல்லும்பொழுது நமக்கு பல்வேறு விஷயங்களை கற்றுத் தருகிறது . பொதுவாக நாம் ரயில் நிலையங்களுக்கு செல்லும் பொழுது ட்ராக்கில் ஏதோ கட்டி உள்ளனர் என்று நினைக்கின்றோம். ஆனால் ரயில் ட்ராக்குகளில் நான்கு அடுக்குகள் பயன்படுத்தபடுகிறது., முதல் நிலை இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை, நான்காம் நிலை என்று நான்கு விதமான தளங்கள் அதில் பயன்படுத்தப்பட்டு பாதுகாப்பாக செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ட்ரெயின் கேலரியில் முன்பாக மிக அழகான ஒரு ஸ்கிராபிக் தயாரிக்கப்பட்ட பொம்மை அமைக்கப்பட்டுள்ளது .
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விளையாடி மகிழ ஊஞ்சல் உட்பட பல விளையாட்டு பொருள்கள் :
சிறு குழந்தைகள் முதல் பெரியவர் வரை விளையாடி மகிழும் வகையில் பல்வேறு விதமான விளையாட்டு உபகரணங்களும் அங்கே வைக்கப்பட்டுள்ளன. ஒரு நாள் முழுவதும் நீங்கள் முழுவதுமாக அங்கே செலவிடலாம் .காலையில் உணவைக் கட்டிக் கொண்டு அங்கே சென்று விட்டால் மாலை வரை நீங்கள் உள்ளே இருக்கலாம். நன்றாக விளையாடிவிட்டு ட்ரெயின் கேலரியை ஆர்வம்தீர பார்த்து விட்டும் நமது சாப்பாட்டை நாம் சாப்பிடலாம்.
ட்ரெயின் என்ஜினை காணும் அருமையான வாய்ப்பு :
ட்ரெய்னில் எவ்வாறெல்லாம் நிலக்கரியை எடுத்து மற்றொரு பக்கம் போடுகிறார்கள் என்பதை அந்த ட்ரெயின் உள்ளேயே சென்று நாம் காணமுடியும். பொதுவாக நாம் ரயிலைதான் தான் பார்க்கிறோம். இன்ஜின்கள் எவ்வாறெல்லாம் உள்ளது என்பதை நாம் பார்ப்பதற்கான வாய்ப்புகள் இல்லை .ஆனால் இங்கே அந்த வாய்ப்புகள் நமக்குத் தரப்பட்டிருக்கிறது. மிக அழகாக நாம் அவற்றைக் காணக் கூடிய நிலையில் இருக்கின்றோம். இது ஒரு மிகப்பெரிய அருமையான வாய்ப்பு. மேலும் பழங்காலத்திலிருந்து நமது இந்தியாவில் செல்ல கூடிய அனைத்து விதமான ரயில்களையும் நாம் அங்கே காண முடிகிறது .பஸ்ட் கிளாஸ் ஏசி முதல் கடைசி நிலை வரை எவ்வாறு ரயில் பெட்டிகள் அமைக்கப்பட்டிருக்கிறது ,இன்ஜின்கள் அமைக்கப்பட்டிருக்கிறது என்பதை எல்லாம் எளிதாக பார்த்து புரிந்து கொள்ள முடிகிறது.அந்த காலத்தில் ரயில்கள் எப்படி எல்லாம் ஓடியது என்கிற தகவலும் உண்டு . அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. நமக்குத்தான் ( லெ .சொக்கலிங்கம்,காரைக்குடி ) நேரமும் காலமும் அதிகமாக வேண்டும். அதுதான் உண்மை கால் வலிக்கும் போது நாம் ஆங்காங்கே ஓய்வு எடுத்துக் கொள்வதற்கு சிமெண்ட் பலகைகளை அமைக்கப்பட்டுள்ளன .
காண்போரை பரசவப்படுத்தும் மூவி தியேட்டர் :
மூவி தியேட்டர் என்று ஒன்று வைத்துள்ளனர் .இந்த மூவி தியேட்டரை நீங்கள் ( லெ .சொக்கலிங்கம்,காரைக்குடி ) சென்று கேட்டால் மட்டுமே அவர்கள் போட்டு காண்பிக்கிறார்கள். ஏனென்றால் சில தயாரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருப்பதால் குறைந்தது இருபது பேர் இருந்தால் அந்த மூவி தியேட்டரில் ரயில் வாழ்க்கை வரலாறை போட்டு காண்பிக்கிறார்கள். ட்ரெயின் எவ்வாறெல்லாம் வளர்ச்சி அடைந்தது ,அதனுடைய வளர்ச்சியின் தன்மைகள் என்ன என்பதையெல்லாம் மிக அழகாக படத்தில் காண்பித்துள்ளனர் .மிக அருமையான ஒரு தியேட்டர். ஒலி ஒளி அமைப்பு மிக அருமை. காட்சிகளும் மிக அருமை .அதற்காக அவர்கள் எடுத்த முயற்சிகளும் அருமை. ஊட்டி டிரெயின் பற்றி நாம் பலமுறை கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் அதனை நேரடியாக இங்கு படத்தில் காண முடிகிறது. அதற்கான அமைப்புகள் என்ன என்பதை தெளிவுபடுத்தி உள்ளனர் .பார்க்கும் போதே நமக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது .பழங்காலத்தில், பழங்காலம் என்றால் சில காலங்களுக்கு முன்பாக டிரெயின் வரும்பொழுது ஒரு வட்ட வடிவமான ஒரு குச்சியை தயார் பண்ணி அதனுள்ளே ஸ்டேஷன் மேலாளர் டெலிபோனில் பேசி விட்டு ஒருபால் போன்ற பொருளை எடுக்கின்றார். உதாரணமாக C 17 என்கிற பால் எடுத்து அதனை அந்த வட்டவடிவ கூண்டில் கட்டி அதை வரும் ட்ரெயினில் ஒரு ஆளை வைத்து கொடுக்கின்றனர் .இரவு நேரங்களில் தீப்பந்தம் எரியவிட்டு அதனை கட்டி விடுகிறார்கள் .அப்போது அந்த ட்ரெயின் வேகமாக செல்லும்போது அது தட்டி விட்டு செல்கிறது .தட்டி விட்டால் அந்த ட்ரெயின் அந்த நிலையத்தை கடந்து விட்டதாக அர்த்தம் ஆக எடுத்துக் கொள்கிறார்கள் .மேலும் உலகத்திலேயே முதன்மையான இந்திய ரயில் தொழிற்சாலை பற்றி மிகத் தெளிவாக கொடுத்துள்ளனர் .அதுவும் அது சென்னையில் அமைந்துள்ளது நமக்கெல்லாம் மிகப்பெரிய பெருமை என்று கூறலாம்.
பழங்காலத்தில் செயல்பட்ட டார்ஜிலிங் ரயில் தொடர்பாகவும் மிக அழகாக ஒரு காட்சியை வடிவமைக்கப்பட்டுள்ளது .ஒளியும் ஒளியும் மிகவும் அருமை. புதிய காலத்திற்கான பல்வேறு நாடுகளில் உள்ள ரயில்கள் தொடர்பாகவும், சுற்றுலா ரயில்கள் தொடர்பாகவும், பல்வேறு தகவல்கள் ஒலி ஒளி காட்சிகள் காண்பிக்கப்படுகிறது. கனடா ,லண்டன் ,அமெரிக்கா, ஈகுவடார் இன்னும் பல்வேறு நாடுகளின் உடைய ரயில்களின் வடிவமைப்புக்கள் இங்கே காட்சிப்படுத்தப்படுகிறது .இந்தியாவில் செல்லக்கூடிய பல்வேறு இரயில்களின் குறிப்பாக சுற்றுலா ரயில்களின் வடிவமைப்பதிலும், அழகான ஒளி ஒலி அமைப்புடன் காண்பிக்கப்படுகிறது .இப்படியெல்லாம் டிரெயின்கள் இருக்கிறது என்கிற தகவலும் நாம் அங்கேயே தெரிந்துகொள்ள முடிகிறது.
பிளாஸ்டிக் விழிப்புணர்வு :
இந்த ஒலி-ஒளி காட்சி நிறைவாக பிளாஸ்டிக் விழிப்புணர்வு மிக அருமையாக எடுத்து வைக்கப்படுகிறது .இரண்டு நிமிடம் மட்டுமே ஓடக்கூடிய ஒளி ஒலி கண்காட்சியில் நாம் குடிக்கும் தண்ணீரிலும் சாப்பிடும் உணவிலும் பிளாஸ்டிக் எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதை நம் ஆழ் மனதில் பதியுமாறு எடுத்துரைக்கின்றனர் .இது மிகப்பெரிய பாராட்டுக்குரிய விஷயம் ஆகும்
ICF உள்ளே கொட்டி கிடக்கும் வேலை வாய்ப்புகள் :
ICF உள்ளே எவ்வளவு வேலை வாய்ப்புகள் உள்ளன, என்னென்ன மாதிரியான செயல்பாடுகள் அங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்கிற தகவலை எல்லாம் தெளிவாக கொடுக்கிறார்கள் .
பெண்களே ரயில் பெட்டி தயாரிக்கும் மகிளா யூனிட் :
ஒரு யூனிட்டிற்கு மகிளா யூனிட் என்று பெயர் வைத்து முற்றிலும் பெண்களே இயக்கக்கூடிய, தயாரிக்கக் கூடிய ஒரு யூனிட் அங்கே ரயில் பெட்டி தொழிற்சாலையில் உள்ளே அமைக்கப்பட்டுள்ளது .அதன் மூலமாக பல்வேறு சாதனைகளை செய்து வருகின்றனர். ரயில் பெட்டி தொழிற்சாலை தயாரிக்கும் பணியில் அலுவலர்களுக்கும் ஊழியர்களுக்கும் பல்வேறு விதமான சலுகைகளையும் வசதிகளையும் செய்து கொடுத்து உள்ளனர். ஒவ்வொரு குடியிருப்பு மிக அருமையாக கட்டமைக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகளின் வடிவமைப்பு மிகவும் நேர்த்தியாக உள்ளது. நமக்கான பல்வேறு வாய்ப்புகள் அங்கே காணப்படுகிறது. விளையாட்டில் திறமையாக இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ரயில்வே தொழிற்சாலை மக்களுக்காகவும் பல்வேறு நலத்திட்டங்களையும் செய்து வருகிறது. குறிப்பாக மூன்று கல்யாண மண்டபங்கள், சமுதாயப் பணிகள் என்று பல்வேறு விதமான தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பார்க்கும் பொழுது இவ்வளவு வேலை வாய்ப்புக்கள் உள்ளன என்கிற தகவலையும் நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.
ரயில் உணவு :
நீங்கள் ( லெ .சொக்கலிங்கம்,காரைக்குடி ) உள்ளேயே சாப்பிடுவதற்கு மகாராஜா ரயில் போன்ற வடிவத்தில் சென்னை எக்ஸ்பிரஸ் சென்னை மியூசியம் என்று ஒரு ரயில் உணவகம் அமைத்துள்ளனர் .ரயில் உணவகத்தில் நான்வெஜ் தான் முழுவதுமாக உள்ளது. கொஞ்சம் விலை அதிகமாக உள்ளது .ஆனால் உணவின் தரம் கொஞ்சம் குறைவாகவே உள்ளது .இடையிடையில் நீங்கள் டீ சாப்பிடுவதற்கு வேறு உணவுகள் சாப்பிடுவதற்கும் பல்வேறு விதமான ஸ்னாக்ஸ் சாப்பிடுவதற்கும் கேண்டீன் ஒன்றும் உள்ளது .நீங்கள் உள்ளே செல்வதற்கு வாங்கும் டிக்கெட் விலையில் கேன்டீனில் உள்ளே சாப்பிட 10 ரூபாய் அதற்கான டோக்கன் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிகமாக வேண்டுமானால் நீங்களே உணவுகளை காசு கொடுத்து வாங்கி சாப்பிட்டு கொள்ள வேண்டும் .திங்கள்கிழமை விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது. ரயில் உணவகத்தில் நீங்கள் அமர்ந்து சாப்பிடும் பொழுது ரயிலில் இருப்பது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துகின்றன .அதற்கு அவர்கள் உள்ளே போய் உட்கார்ந்து சாப்பிடுவது போன்று பார்த்துவிட்டு வரலாம்.
ரயில் மியூசியம் தோழர்களுக்கு நன்றி :
இந்த நிகழ்வுகளுக்கு ஒத்துழைப்பு நல்கிய அனைத்து நண்பர்களுக்கும் .ஒரு நாள் முழுவதற்குமான பொழுதுபோக்கு,தொழிற்சாலை பிரிவுத் தகவல்கள் ,வேலைவாய்ப்புத் தகவல்கள், சுற்றுலா தகவல்கள் ,பொழுதுபோக்கு தகவல்கள், குடும்பத்துடன் கொண்டாட கூடிய தகவல்கள், என பல்வேறு தகவல்களை உள்ளடக்கிய ரயில் மியூசியத்திற்கு நான் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் ,
எங்கிருந்து எங்கு சென்றோம் ?
நண்பர்களே நாங்கள் அடையாரில் இருந்து நண்பர் ஆனந்த் அவர்களின் காரில் வில்லிவாக்கம் பெரம்பூர் அருகே உள்ள ஐசிஎப் தொழிற் சாலைக்கு சென்றோம் .அனைத்து அணிகளையும் பார்த்துவிட்டு மீண்டும் மாலை ஐந்து முப்பது மணி அளவில் பெரம்பூரில் கிளம்பி பெசன்ட் நகர் பீச்சுக்கு சென்று விட்டோம் .அங்கு ஒரு மணி நேரம் இருந்து விட்டு இரவு உணவை ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு வீட்டை அடைந்தோம். காலை முதல் இரவு வரை ஒரு நாள் முழுவதும் சுற்றுலாவுக்கு செல்லக்கூடிய மிக அருமையான இடம் ஐசிஎப் ரயில்வே மியூசியம் ஆகும்.
நண்பர் ஆனந்துக்கு நன்றி :
ஒத்துழைப்பு நல்கிய நண்பர் ஆனந்த் அவர்களுக்கும் ,அவரது குடும்பத்தினருக்கும் மிகுந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் .ரயில்வே மியூசியத்தில் உள்ள அனைத்து அலுவலர்களும் ஊழியர்களும் மிக நல்ல முறையில் நம்மை அனுசரித்து நமக்கு வேண்டிய பல்வேறு தகவல்களையும் பொறுமையுடன் எடுத்துரைத்தனர் .அது மிகவும் பாராட்டுக்குரிய விஷயம் ஆகும் .
அன்புடன்
லெ .சொக்கலிங்கம் ,
காரைக்குடி .
8056240653
ரயில் ம்யூஸியத்தின் உள்ளே உள்ள காட்சிகளை வீடியோவாக காணலாம் :
1) https://www.youtube.com/watch?v=Ibmv7XgCKJk
2) https://www.youtube.com/watch?v=Aq4nOKAtFA8
3) https://www.youtube.com/watch?v=e7cM6PDL0cQ
4) https://www.youtube.com/watch?v=Rc77d6tBGfI
5) https://www.youtube.com/watch?v=EOUa3XrEJEo
பட விளக்கம் : சென்னை ரயில் மியூசியத்தில் ஒரு நாள் முழுவதும் பயனுள்ள வகையில் சுற்றி பார்க்கும் இடங்களை சுற்றி பார்த்த சுற்றுலா பயணிகளை படத்தில் காணலாம்

No comments:
Post a Comment