தேசிய வாக்காளர் தின விழா
வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை உறுதிப்படுத்துங்கள்
1950 என்ற தொலைபேசி எண் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு மட்டுமே உரியது
ஆர்.டி.ஓ. பள்ளி மாணவர்களிடம் பேச்சு
வாக்காளர் தின ரங்கோலி போட்டியில் வெற்றி பெற்றோர்க்கு ஆர்.டி.ஓ பரிசு வழங்குதல்
தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் பெற்றோர்களுக்கான கோலப்போட்டி களுடன்தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது .இப்பள்ளியில் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.
பள்ளி தலைமையாசிரியர் சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார் .ஆசிரியை முத்துமீனாள் வரவேற்றார் .தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் செ .சங்கரநாராயணன் தலைமை தாங்கி பேசுகையில், 18 வயது நிரம்பிய அனைவரும் இளம் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். நான்கு வழிகளில் பெயர்களை சேர்க்கலாம் .முதலாவதாக ஆன்லைன் மூலமாகவும், இரண்டாவதாக ஆண்ட்ராய்டு மொபைல் மூலமாகவும் ,மூன்றாவதாக மாற்றுத்திறனாளிகள் 1950 என்ற எண்ணுக்கு போன் மூலமாகவும், நான்காவதாக படிவம் 6 கொடுத்து உங்களது பெயர்களை அவசியம் வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம் .வாக்காளர் அடையாள அட்டையில் உங்கள் பெயர் இருப்பதுடன் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் அண்ணன், அக்கா, அம்மா, அப்பா ஆகியோரிடம் சென்று கட்டாயம் வாக்களிக்க சொல்லுங்கள்.வாக்காளர் அடையாள அட்டையை முதல்முறையாக எந்தவிதமான கட்டணமும் இல்லாமல் இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு இலவசமாக தருகிறது. வாக்காளர் அடையாள அட்டை தொலைந்து விட்டால் இரண்டாவது முறையாக பணம் செலுத்தி வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம்.என்று பேசினார்.முன்னதாக வாக்காளர் உறுதி மொழியை வருவாய் கோட்டாட்சியர் கூற மாணவர்களும் ,ஆசிரியர்களும் ,பெற்றோர்களும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். விழாவில் திரளான பெற்றோர்கள் ,மாணவிகள் வாக்காளர் தின கோலப் போட்டியில் பங்கேற்றனர் .சுமார் 25-க்கும் மேற்பட்ட கோலங்கள் போடப்பட்டன. பெற்றோர்களுக்கான கோலப் போட்டியில் முதலிடத்தை மெர்லின் , இரண்டாவது இடத்தை மகேஸ்வரியும் ,மூன்றாவது இடம் அங்காளஈஸ்வரியும் பெற்றனர் .மாணவிகள் கிருத்திகா, திவ்யஸ்ரீ,கீர்த்தியா ஆகியோரும் கோலப் போட்டியில் பங்கேற்று பரிசுகளை பெற்றார்கள். வாக்காளர் தினம் தொடர்பாக கனிகா,ஜனஸ்ரீ ஆகியோர் கவிதையும் , மெர்சி வாக்காளர் தினம் தொடர்பாக பேச்சும், காவியா, சங்கரி ஆகியோர் வாக்காளர் விழிப்புணர்வு பாடலையும் பாடினார்கள். ஆசிரியை முத்துலட்சுமி நன்றி கூறினார்.
படவிளக்கம்: தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய வாக்காளர் தின விழாவில் தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் சங்கரநாராயணன் தலைமை தாங்கி ரங்கோலி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். பள்ளி தலைமையாசிரியர் சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.ஏராளமான பெற்றோர்கள் கோலப்போட்டியில் பங்கேற்று வாக்காளர் விழிப்புணர்வு கோலங்களை வரைந்தார்கள்.
தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு கோல்போட்டியில் பங்கேற்ற பெற்றோர்கள் - வீடியோ
https://www.youtube.com/watch?v=8XDYOiYpQL4
தேசிய வாக்காளர் தின விழாவில் விழிப்புணர்வு ஏற்படுத்திய தேவகோட்டை ஆர்.டி.ஓ அவர்களின் பேச்சு - வீடியோ
https://www.youtube.com/watch?v=g0feeYExs0U

No comments:
Post a Comment