Sunday, 19 January 2020

  ஜிசாட்-30 செயற்கைகோள் வெற்றிக்கு வண்ண பலூன்கள் பறக்க விட்டு பள்ளி மாணவர்கள் பாராட்டு

டிடிஎச் சேவை, ஏடிஎம் இணைப்பு, மின் ஆளுமைக்கு பயன்படும்  செயற்கைகோள் வெற்றிக்கு பாராட்டு தெரிவித்த மாணவர்கள் 





தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஜிசாட்-30 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு வண்ண பலுன்கள்  பறக்கவிட்டு, செயற்கைகோள் வடிவமைத்து மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
                                            

                      இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் ஜிசாட்-30 செயற்கைக்கோள், பிரெஞ்சு கயானாவில் உள்ள கவ்ரவ் ஏவுதளத்தில் இருந்து திட்டமிட்டப்படி  விண்ணில் செலுத்தப்பட்டது. தென் அமெரிக்காவில் உள்ள பிரெஞ்சு கயானாவில் இருந்து அதிக எடையை சுமந்து செல்லும் ஏரியான்-5 ராக்கெட் மூலம் ஏவப்பட்டது,இதன் எடை 3,357 கிலோ ஆகும். திட்டமிட்டப்படி சரியான பாதையில் சென்ற ஏரியான்-5 ராக்கெட், புவிசுற்றுவட்டப் பாதைக்கு சென்றதும், செயற்கைக்கோள் பிரிக்கப்பட்டு, திட்டமிட்ட இலக்கில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. 2020 ஆம் ஆண்டில் இஸ்ரோ செலுத்திய முதல் செயற்கைக்கோள் இது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஜிசாட் – 30’ அதன் அதன் தனித்துவமான உள்ளமைவுடன் டிடிஎச் தொலைக்காட்சி சேவைகள், ஏடிஎம்களுக்கான இணைப்பு, பங்குச் சந்தைகள் மற்றும் மின்-ஆளுமை ஆகியவற்றை வழங்கும் என்கிற தகவலை மாணவர்கள் முன்னிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் எடுத்து கூறினார்.இந்த சாதனையை செய்த இஸ்ரோவின் தலைவர் சிவன் மற்றும் அனைத்து விஞ்ஞானிகள்,பொறியாளர்கள்,தொழில்நுட்ப ஊழியர்கள் அனைவருக்கும் பள்ளி மாணவர்களால் வண்ண பலூன் பறக்கவிடப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரிய,ஆசிரியைகள்,மாணவ,மாணவியர்கள் பங்கேற்றனர்.

பட விளக்கம்:
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஜிசாட்-30 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு வண்ண பலுன்கள்  பறக்கவிட்டு, செயற்கைகோள் வடிவமைத்து மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

No comments:

Post a Comment