27 குடும்பத்தினர் கூடிய நிகழ்வை நேரில் பார்த்த அனுபவம்
ஒற்றுமையான குடும்பம் என்றால் இதுதான் குடும்பம்
நண்பர்களுக்கு வணக்கம். 27 குடும்பங்கள் மூன்று ஆண்டுகளாக ஒன்றாக சேர்ந்து பொங்கல் திருநாளில் சந்திக்கும் சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை வீட்டிற்கு இன்று சென்றிருந்தோம் .நாங்களும் எங்கள் குடும்பத்துடன் சென்றிருந்தோம். நெற்குப்பையில் ஜல்லிக்கட்டு பார்த்த பிறகு மாலை 5 மணியளவில் மும்பை வங்கி அதிகாரி சேதுராமன் சாத்தப்பன் அவர்களது அழைப்பின் பேரில் அவருடன் உள்ள 27 குடும்பத்தார்கள் உள்ள வீட்டிற்கு சென்றிருந்தோம் . உள்ளே சென்றபோது அனைவரும் சேதுராமன் சாத்தப்பன் அவர்கள் வளவில் இருப்பதாக கூறினார்கள்.
வளவில் சந்தித்தோம் :
நாங்களும் வளவிற்கு உள்ளே சென்றோம் .மகிழ்ச்சி கடல் அங்கே மகிழ்ச்சியாக அனைத்து உறவினர்களும் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்க்கும் பொழுது எங்களுக்கு மிகுந்த சந்தோஷமாக இருந்தது .சேதுராமன் சாத்தப்பன் அவர்கள் நல்ல உறக்கத்தில் இருந்தார் . அவரது துணைவியார் அவர்கள் எங்களை வாசலுக்கே வந்து அழைத்துச் சென்று அவரது வீட்டில் எங்களை வளவில் அமரவைத்து, முற்றத்தில் தூக்கத்தில் இருந்த சேதுராமன் சாத்தப்பன் அவர்களை எழுப்பினார்கள். அவர்களும் மிக புன்னகையுடன் எழுந்து எங்களை வரவேற்று எங்களிடம் பேசினார்கள் . நாங்கள் வீட்டின் உள்ளே செல்லும்பொழுது சிறு குழந்தைகளுக்கான விளையாட்டுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது. பார்க்கவே எங்களுக்கும் மகிழ்வாக இருந்தது .அனைத்து உறவினர்களும் குழந்தைகளை ஊக்கப்படுத்தி விளையாட்டை விளையாட செய்துகொண்டிருந்தார்கள். அடுத்ததாக சேதுராமன் சாத்தப்பன் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது , பெரியவர்களுக்கான லெமன் அண்ட் ஸ்பூன் விளையாட்டும் நடந்தது .அதனை பார்க்கும் போதும் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது .வெற்றி பெற்றவர்களுக்கு அப்போதே அவர்கள் பரிசுகளை கொடுத்துக்கொண்டே இருந்தார்கள் .அதுவும் மிகவும் பிடித்திருந்தது .
பொங்கல் விழாவில் கூட்டு குடும்பம் கூடும் யோசனை வந்தது எப்படி ?
சேதுராமன் சாத்தப்பன் அவர்கள் கூட்டு குடும்பம் கூடிய தகவல் குறித்து குறித்து கூரியாதவாவது: எங்கள் குடும்பத்தில் அனைவரும் அமெரிக்காவில் இருந்து ,ஜப்பானிலிருந்து ,இன்னும் பல்வேறு நாடுகளில் உள்ள 27 குடும்பங்களை சார்ந்த 80-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து 3 ஆண்டுகளாக வந்து மூன்று நாள் மகிழ்ச்சியுடன் கலந்து கொள்வதாக தெரிவித்தார். விடுமுறை கிடைத்து, விடுமுறை எடுத்து, அதனை சேமித்து இங்கே வந்து உறவினர்களுடன் கலந்து கொள்ளும் பொழுது மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்தார் ,பல்வேறு பணிகளில் அவர்கள் இந்த நிகழ்வுக்கு அவர்களது குடும்பம் என்று வருகிற பொழுது மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்தார் . அப்போது எனக்கு ஒரு கேள்வி எழுந்தது ? இந்த நிகழ்வு எப்படி ஆரம்பிக்கப்பட்டது என்று கேட்டேன்.
பிள்ளையார் சுழி போட்ட சாத்து என்ற சாத்தப்பன் :
அப்பொழுது சாத்து என்ற சாத்தப்பன் அவர்களை அழைத்தார் .சாத்து என்ற சாத்தப்பன் எங்களிடம் பேசும் பொழுது, மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு திருமணத்திற்காக வந்திருந்த போது உறவினர்களுடன் வீட்டில் பேசிக் கொண்டிருந்தபொழுது ஏன் நாம் பொங்கலை நம்ம நமக்குள் இருக்கக்கூடிய குடும்பத்துடன் இணைந்து இங்கே வைத்தால் என்ன சொந்த ஊரில் வைத்தால் என்ன என்று ஒரு எண்ணம் தோன்றியது என்றும்,அதனை உறவினர்களுடன் கேட்டதாகவும், அதன் தொடர்ச்சியாக வாட்ஸ்அப் குழு ஆரம்பித்ததாகவும், அந்த வாட்ஸ்அப் என்ன நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது என்பதை அதனை பதிவு செய்ததாகவும், அனைவரும் அதற்கு ஆதரவு தெரிவித்து அதன் காரணமாகவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இந்த நிகழ்வை சொந்த ஊரில் பொங்கலை குடும்ப விழாவாக கொண்டாடியதாகவும் தெரிவித்தார் .மேலும் பொங்கல் விழாவுக்கு வரும் குடும்பத்தார்கள் அனைவரும் தான் இருக்கும் பதவியையோ அல்லது வேறு எதையும் நினைக்காமல் பந்தி பரிமாறுவது முதல் அனைத்து நிகழ்வுகளிலும் கலந்து பழகுவதும், மிகவும் சகஜமாக இருப்பதும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாக கூறினார் .
குடும்ப விழாவிற்கு ஆகும் செலவுகளை நிர்வாகிப்பது எப்படி ?
இதற்கு ஆகும் செலவு தொகையை எவ்வாறு தாங்கள் ஈடு செய்கிறீர்கள் ? என்று கேட்டபொழுது முதலில் தான் கொஞ்சம் செலவு அளித்ததாகவும் பிறகு அது பொது நிதியாக மாற்றியதாகவும் தற்போது உறவினர்கள் அனைவருடைய ஒத்துழைப்பும் மிக சிறந்த முறையில் இதனை செயல்படுத்த முடிவதாகவும் தெரிவித்தார். இரண்டு ஆண்டுகள் தான் அதனை எடுத்து நடத்தியதாகவும் இந்த ஆண்டு உறவினர்கள் உள்ள இளைஞர்கள் கையில் அதை கொடுத்து நடத்த சொன்னதாகவும் தெரிவித்தார் .அந்த குடும்பத்தினர் அனைவரும் ஒற்றுமையாக பாசமாகவும் பழகியது எங்களுக்கு மிகப்பெரிய பிரமிப்பை ஏற்படுத்தியது . ஏனென்றால் இன்று கணவன் மனைவி ஒற்றுமையாக இருப்பது மிகவும் குறைவான காலமாக அரிதாகி வருகிறது . நகரத்தார் குடும்பங்களில் மிகப் பெரிய வீடுகளில் பல இடங்களில் புறாக்கள் இன்னும் பல்வேறு விதமான பூனை எலிகள் கூடியிருக்கும் வீடுகளாக மாறி வருகின்றன . அதுபோன்று ஒரு சூழ்நிலையில் இவர்கள் மூன்று மாதத்திற்கு முன்பாகவே முயற்சி எடுத்து 80க்கும் மேற்பட்ட உறவினர்களை அழைத்து அதுவும் மாட்டுப்பொங்கலன்று 100க்கும் மேற்பட்ட வெளி விருந்தினர்களும் வந்து வீட்டில் உணவருந்திய செல்வதாகவும், பொங்கல் நேரத்தில் தங்களுக்கு மிக அருமையான உணவினை பாகனேரி அருகில் இருந்து மூன்று பெண்கள் முதன்முதல் வந்து செய்து தந்ததாகவும், அவர்களை தற்போது ஆறு பேராக உள்ளதாகவும் எங்களுக்கு சேதுராமன் சாத்தப்பன் அவர்கள் தெரிவித்தார்கள் .சாத்தப்பன் அவர்களை சந்தித்ததும், அவர்கள் துணைவியார் சந்தித்ததும் ,குடும்பத்தினரை சந்தித்து வந்ததும் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது .
குடும்பம் என்றால் இதுதான் கூட்டு குடும்பம் :
இந்த தருணத்தில் சேதுராமன் சாத்தப்பன் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் . குடும்பம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் . அனைவரும் ஒற்றுமையாக பாசமாக பண்பாக இருந்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எனது மனைவிக்கு மிகவும் பிடித்திருந்தது மிகப்பெரிய ஆச்சரியமாக என்னவென்றால் அவர்கள் அனைவரும் விடுமுறை . எடுத்து பல ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து இரண்டு நாள் மூன்று நாள் ஒன்றாக இருந்து செல்வது என்பது சாதாரண விஷயம் கிடையாது .அதனை எண்ணும்போது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாகவே இருந்தது.சாத்து என்ற சாத்தப்பன் அவர்கள் எங்களிடம் கூறும் பொழுது, முதல் வருடம் குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் வாங்கி வந்த பொழுது சேதுராமன் சாத்தப்பன் அவர்கள் முழு தொகையும் தானே தந்து விடுவதாகவும் தெரிவித்ததாகவும், 10,000 ரூபாய் வரை பரிசுப் பொருள் வழங்குவது ஆகும் தெரிவித்ததாகவும் மிகவும் பெருமையாக சொன்னார்கள் .மேலும் செய்தித் தாள்களில் வருவதற்கு அவர் தான் மிகுந்த காரணமாக இருப்பதாகவும் என்னிடம் தெரிவித்தார்கள்.
UNBELIEVABLE மாணவர்கள் - பாராட்டு :
நான் தலைமை ஆசிரியராக பணியாற்றும் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி பற்றியும் சாத்து என்ற சாத்தப்பன் அவர்களிடம் சேதுராமன் சாத்தப்பன் எடுத்துக் கூறினார்கள். எங்கள் பள்ளியைப் பற்றியும் , எனது பணியை பற்றியும் பாராட்டி பேசினார்கள். எங்களது பள்ளிக்கு அவர்கள் வந்து பேசிய பொழுது நான்கைந்து மாணவர்கள் பேசிய தகவல் இன்னும் கண்ணுக்குள் நிற்பதாக கூறினார்கள் . அந்த மாணவர்கள் தான் கூறிய விஷயங்களை அப்படியே உள்வாங்கி அதனை வெளிப்படுத்திய விதம் மிகவும் அருமையாக இருந்ததாகவும்,அந்த நிகழ்வு UNBELIEVABLE என்றும் ,அதனை பாராட்டுவதாகவும் எனது மனைவியிடம் சொன்னார்கள். எனது மனைவியிடம் சேதுராமன் சாத்தப்பன் , உங்களது கணவர் பார்க்கும் வேலை குறித்து நீங்கள் என்ன சொல்வீர்கள் என்று கேட்டார்கள்.அதற்கு மனைவி , நான் நன்றாகத்தான் சொல்வேன் .ஆனால் பல நேரம் வீட்டிலும் அவர்கள் பள்ளியை பற்றி நினைப்பதால் திட்டவும் செய்வேன் என்று தெரிவித்தார்கள் .அதனை கேட்ட சேதுராமன் சாத்தப்பன் நல்ல முறையில் பள்ளி உள்ளதாகவும்,பிற்காலத்தில் மாணவர்கள் மிகவும் அருமையாக வருவார்கள் என்றும் பாராட்டி சேதுராமன் சாத்தப்பன் அவர்கள் எனது மனைவியிடம் சொன்னார்கள் .எனக்கு மிகவும் பெருமையாகவும், என்னுடைய பணியை மேலும் அருமையாக செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தையும், உந்துதல் சக்தி அவரது வார்த்தைகள் உந்துதல் சக்தியாகவும் இருந்தது என்பதே உண்மை. மிகுந்த நன்றி.
நன்றி கலந்த அன்புடன்
லெ .சொக்கலிங்கம்,
தலைமை ஆசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை.
சிவகங்கை மாவட்டம்.
பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் நெற்குப்பையில் 27 குடும்பங்கள் இணைந்து கொண்டாடும் பொங்கல் விழாவில் சாத்து என்ற சாத்தப்பன் , மும்பை வங்கி அதிகாரி சேதுராமன் சாத்தப்பன் ஆகியோருடன் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் உள்ளனர்.

No comments:
Post a Comment