ஜல்லிக்கட்டும் நெற்குப்பையும்
நண்பர்களே கடந்த 3 ஆண்டுகளாக தோழர் முத்துமாரியப்பன் உதவியுடன் குடும்பத்துடன் ஜல்லிக்கட்டு நெற்குப்பையில் கண்டு ரசித்து வருகிறோம்.மிகவும் மகிழ்ச்சியான தருணம் . விளையாட்டினை நேரில் காணும் வாய்ப்பினை மிக அருமையாக ஏற்படுத்திக் கொடுக்கும் தோழர் முத்துமாரியப்பன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் . முதலில் இந்தியன் பேங்க் அருகில் உள்ள நண்பர் பழனியப்பன் அவர்களின் அண்ணன் வீட்டில் இருந்து ஜல்லிக்கட்டை பார்ப்போம் . பிறகு ராஜ வீதியில் நடக்கும் ஜல்லிக்கட்டை பாதுகாப்பாக ஓரிடத்தில் நின்று முழுவதுமாக பார்த்து ரசிப்போம். இந்த முறை மிக அதிக அளவிலான மக்கள் கூட்டம் வந்திருந்தது. மாடுகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது. மாடுகள் ஓடுவதும் , சீறிப் பாய்ந்து வரும் காளைகளை சிறப்பாக பிடித்த வீரர்கள் என்று நேரில் காணும் பொழுது அந்த தருணம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. கால் வலி தெரியாமல் தொடர்ந்து 2 மணி நேரம் 3 மணி நேரம் நின்று கொண்டு பார்த்தாலும் இது மிகவும் அருமையான தருணமாக அமைந்திருந்தது. தோழர் முத்துமாரியப்பன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மாடுகளை கட்டியிருக்கும் தொழுக்களையும் நாங்கள் இந்த முறை சென்று கண்டு மகிழ்ந்தோம் . மாடுகள் சீறி வரும் பொழுது உள்ளூர்க்காரர்கள் பிடிக்காமல் மற்ற ஊர்க்காரர்கள் பிடிக்க வேண்டுமென்று அறிவிப்பும் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். சில மாடுபிடி வீரர்கள் குத்துபட்டு ஆங்காங்கே கிடந்தார்கள். இருந்தபோதிலும் தொடர்ந்து நிகழ்வுகள் நடந்த வண்ணம் இருந்தது . நெற்குப்பையில் நல்ல ஏற்பாடுகள் அனைத்து இடத்திலும் செய்திருந்தனர் . தமிழர்களின் வீர விளையாட்டை நேரில் கண்டபோது எங்களுக்கு புல்லரிப்பாக இருந்தது.பல வீரர்கள் மீண்டும் ,மீண்டும் சீறி வரும் காளைகளை அடக்கியது நெகிழ்வான தருணங்கள்.அருமையான வாய்ப்பினை வழங்கிய தோழர் முத்துமாரியம்மனுக்கு மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்வோம் .
தோழமையுடன்
லெ . சொக்கலிங்கம்,
தலைமையாசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி ,
தேவகோட்டை .
சிவகங்கை மாவட்டம்.
8056240653
பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் நெற்குப்பையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்வுகளில் சீறி வரும் காளைகளை பாய்ந்து பிடிக்கும் மாடு பிடி வீரர்கள் மற்றும்ஜல்லிக்கட்டினை காண அலைகடலென குடியிருந்த மக்கள் கூட்டம்.

No comments:
Post a Comment