Friday, 31 January 2020

அறிவியல் சோதனைகள் செய்து கற்றல்






  
 தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் எளிய அறிவியல் செயல் சோதனைகள் செய்து காண்பிக்கப்பட்டது.                                      
                      நிகழ்விற்கு வந்தவர்களை மாணவி நதியா   வரவேற்றார். தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். அ .மு.மு. அறக்கட்டளையின் பயிற்சியாளர்கள் மகாதேவி   மற்றும் அரங்குலவன்  ஆகியோர் அறிவியல் உபகரணங்களை கொண்டு அறிவியல் சார்ந்த விளக்கங்களை நேரடி சோதனைகள்  மூலம் செய்து காண்பித்து விளக்கினார்கள்.நிகழ்வில் ஒளி நேர்கோட்டில் செல்லுதல்,பன்முக எதிரொலிப்பு,காந்தவியல் ,ஈர்ப்பு விசை,விலக்கு விசை ,காந்தத்தின் வரலாறு தொடர்பான சோதனைகளை நேரடியாக மாணவர்களே செய்து கற்று கொண்டனர்.  நிறைவாக மாணவர் ஜோயல்   நன்றி கூறினார்.

பட விளக்கம் ; தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் விளையாட்டாக அறிவியல் கற்றல்   வாயிலாக மாணவர்கள் நேரடியாக அறிவியல் சோதனைகளை   செய்து கற்று கொண்டனர்.
 
 எளிய அறிவியல் சோதனைகளை செய்து காண்பிக்கும் மாணவர்களின் வீடியோவை YOU TUBE வழியாக காணலாம் :
1) https://www.youtube.com/watch?v=JM1OuzEwYI4

2) https://www.youtube.com/watch?v=ykh4dEuD-Hc


No comments:

Post a Comment