Sunday, 5 January 2020

 பெண் சுதந்திரம் - வார்த்தைகளால் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையாக  வாழும் கேப் ஓட்டுநர் 

ஆச்சரியத்தில் ஆழ்த்திய கேப் ஓட்டும் ஆளுமை


 சென்னையில் ஓட்டுனர்கள் உடன்  ஒரு நாள் முழுவதும் பல்வேறு வாகனங்களில் பயணித்த பொழுது ஏற்பட்ட அனுபவங்கள்

 பயணத்தில் எங்களை வியக்க வைத்த ஆளுமை



படித்ததும் ,வேலை செய்வதும்  வேறு ,வேறு 


                          சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தனது பயண அனுபவத்தில் கிடைத்த பாராட்டுக்குரிய நிகழ்வுகளை நம்மிடம் பகிர்ந்து கொண்ட தகவல் :
                                            நண்பர்களே ,அம்பத்தூரில் இருந்து கோடம்பாக்கம் நோக்கி செல்வதற்காக கேப் புக் செய்து சென்றபோது  எங்கள் (லெ .சொக்கலிங்கம்,காரைக்குடி) வண்டியின் ஓட்டுநர் எங்களிடம் இயல்பாக பேசிய வண்ணம் வந்தார். ஓட்டுனர் பேர் கோவிந்தன் என்று சொன்னார் . சொந்த ஊர் காரைக்குடி என்றும் கூறினார் .நானும் ஐயா காரைக்குடி தான் என்று சொல்லி பேச்சை ஆரம்பித்தேன். எங்களை  ஆச்சரியத்தில் ஆழ்த்தியது அவருடைய பேச்சு, சார் என்ன படிச்சு இருக்கீங்க என்று அவரிடம் நான் கேட்டேன். அவரை பார்க்கும் பொழுது கரடுமுரடாக தெரிந்தார். ஆனால் அவருடைய பேச்சு மிக தெளிவாக புரிதலுடன்,  தூய தமிழில் பேசியது  எனக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது .காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் பிகாம் படித்ததாகவும் , பிறகு பிஜிடிஹஸ்ராம்  படித்ததாகவும் தெரிவித்தார். ஐடி கம்பெனியில் தற்போது வேலை வாய்ப்பு அதிகமாக இல்லை என்று தெரிவித்தார். ஐடி கம்பெனிகளில் பைனான்ஸ்  தொடர்பான வேலை வாய்ப்புகள் தான் தற்போது அதிகமாக உள்ளதாகவும் தெரிவித்தார் .தான் பல கம்பெனிகளில் மேலாளராக வேலை பார்த்து தற்போது வாகனம் ஓட்டுவதே முழுநேர தொழிலாக கொண்டுள்ள கூறினார் .தனது மனைவி அவர்களும் ஐடி கம்பெனியில் மிகப் பெரிய வேலையில் இருப்பதாகவும் கூறினார் .அதாவது அவரது மனைவி ஐடி பணியில் பைனான்ஸ்  தொடர்பான பணிகளில் இருப்பதாக தெரிவித்து என்னை ஆச்சரியப்படுத்தினார் .

மகளுக்கு முழு சுதந்திரம்,ஆச்சரியத்தில் நாங்கள்

                               தனது மகள் தொடர்பாக அவர் கூறிய விஷயங்கள் தான் என்னை மிகப்பெரிய ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. என்னுடைய மனைவியும் அதைக் கேட்டுக்கொண்டே வந்தார். தன்னுடைய மகளுக்கு தான் முழு சுதந்திரம் கொடுத்து இருப்பதாகவும், தற்போது தனது மகள் எம். ஏ., ஹச் .ஆர். சென்னை WCC கல்லூரியில் படித்து வருவதாகவும் தெரிவித்தார் .பிளஸ் டூவில் 1138 மதிப்பெண் எடுத்த மகளை மருத்துவப் படிப்பு படிக்க அனுப்புவதாக தெரிவித்ததாகவும் ,மகள் சரி என்று கூறி பின்பு உங்களால் எவ்வளவு ரூபாய் பணம் படிப்பதற்கு செலவு செய்ய முடியாது, என்கிற தகவலை தெரிவித்ததாகவும், பிறகு  இன்ஜினியரிங் படிக்க சொல்லி தான் கேட்டுக் கொண்டதாகவும் , அதற்கு வேண்டாம், நான் பி எஸ் சி பிசிக்ஸ் படிக்கிறேன் என்று அவர் படித்ததாகவும் கூறினார் .பி எஸ் சி பிசிக்ஸ் படிக்கும்போது, அது 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் எடுத்தால் கார் வாங்கித் தருவதாகத் தான் தெரிவித்ததாகவும் ,முதல் வருடத்தில் 90 சதத்திற்கும் மேல் எடுத்ததாகவும் ,ஆனால் தனது மகளை பிளஸ் டூவில் படித்த பாடங்களை முதல் ஆண்டில் வந்துள்ளதால் அடுத்த ஆண்டு நான் 90 செய்து முடிக்கிறேன் என்று கூறியதாகவும், இரண்டாம் ஆண்டில் 93.5 சதம் மதிப்பெண்  எடுத்தால் இரண்டு லட்ச ரூபாய்க்குத்தான் தனது மகளுக்கு கார் வாங்கிக் கொடுத்ததாக தெரிவித்தார் .

ஓட்டுநர் மகள் கலை கல்லூரிக்கு காரில் செல்வதை பெருமையுடன் பகிர்ந்து கொள்ளுதல்

                         கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிப்பவர்கள் காருடன் சென்றது தனது மகள்தான் என்றும் மிகப் பெருமையுடன் தெரிவித்தார் .மகளுக்கு முழு சுதந்திரம் கொடுத்து உள்ளதாகவும் தெரிவித்தார் .கார் ஓட்டிக்கொண்டு தனது மகள் பல்வேறு இடங்களுக்கு தானாகவே சென்று வருவதாகவும் எங்களிடம் தெரிவித்தார் .எங்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது. பி எஸ் சி பிசிக்ஸ் முடித்துவிட்டு தனது மகள் மேற்படிப்பு தான் விரும்பிய வண்ணம் படிப்பதற்கு தான் அனுமதி அளித்ததாகவும் கூறினார் . தனது மனைவி பல்வேறு நேரங்களில் தன்னுடன் இந்த விஷயத்தில் ஒத்துக் கொள்ளவில்லை என்றாலும் , தனது வழிகாட்டுதலின்படி தனது மகள் செயல்படுவதாகும் தெரிவித்தார்.  தனது மகளை அனைத்து முடிவுகளும் எடுத்துக்கொள்ள விட்டு விடுவதாகவும் கூறினார். அவருடைய மகளின் முடிவின்படி தற்போது எம்.ஏ ,ஹச் .ஆர். படித்து வருவதாகக் கூறினார் . 

மகளின் காருக்கு வாரம் ரூபாய் 1,200


                  வாரம் ஆயிரத்து 200 ரூபாய் தான் தனது மகளுக்கு கொடுத்து விடுவதாகவும்,  200 ரூபாய் பாக்கெட் மணிக்கு எடுத்துக் கொண்டு ஆயிரம் ரூபாய் பெட்ரோல் போட்டுக் கொள்ள சொல்லி உள்ளதாகவும் , அந்த ஆயிரம் ரூபாய் பெட்ரோலுக்குள்  தான் எங்கெல்லாம் செல்ல வேண்டுமோ அந்த இடங்களுக்குச் சென்று வரலாம் என்றும் கூறியுள்ளதாக கூறினார் . நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் பொழுது அவரது மகளிடம் இருந்து போன் வந்தது.  ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு போனில் அவருடன் தொடர்பு கொண்டார் .அப்போது அவரது மகள்தனக்கு  வண்டியில் பெட்ரோல் ட்ரையாகி கூடிய சூழ்நிலை இருப்பதாகவும்,  உடனடியாக பணம் தேவைப்படுவதாகவும்  கூறினார் .  என்னிடமே போனை கொடுத்து கூகுள் பெயில் ரூபாய் .1200 உடனடியாக போடச் சொன்னார். 1,200 ரூபாய் போட்டு விட்டு  அவரது மகளையும் அழைத்து பேசினார். இனிமேல் இதுபோன்று ட்ரையாக கூடிய நிலைமையில் வண்டி ஓட்ட வேண்டாம் என்றும்,  பணம் தேவைப்பட்டால் உடனடியாக தன்னிடம் கேட்குமாறும் கூறி  கோச்சிங் கிளாஸ் சரியாக படித்து விட்டு சரியான வழி திரும்பிக் கொண்டிருக்கிறாயா  என்றும் கேட்டுக்கொண்டார் . எங்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியம் .

நல்ல வழியில் சம்பாதித்து,நன்றாக செலவு செய்ய வேண்டும் - ஓட்டுனரின் பெருமிதம்

                   மேலும் அவர் எங்களிடம் பேசுகையில் , வாழ்க்கையில் என்ன சார்  சாதிக்கப் போகிறோம். நன்றாக சம்பாதித்து  செலவு செய்கிறோம். நல்ல வழியில் செலவு செய்கிறோம். அது ஒன்றே போதும் சார் .என்னுடைய மகன் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான் .எனக்கு ஊரில் சொந்த வீடு இருக்கின்றது .சென்னையில் பதினைந்து ஆயிரம் ரூபாய்க்கு வாடகை வீட்டில்தான் குடியிருந்து வருகிறேன் .நிம்மதியான வாழ்க்கை. சந்தோசமாக வாழ்கின்றேன் .கடைசியில் எண்ணத்தை சார் கொண்டு போக போறோம். நம்ம சம்பாதிக்கிற நம்ம டெய்லி நல்லா நிம்மதியா செலவு பண்ணிட்டு நம்முடைய வாழ்க்கையை நல்ல திருப்திகரமாக இருக்கும் சார் என்று  சொன்னார் .எங்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது. மிகப் பெரிய ஆளுமை சந்தித்ததில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன் .நாங்கள் செல்ல கூடிய இடத்தை  சரியான முறையில் கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலையில் அவரே சரியான இடத்தில் தொடர்பு கொண்டு எங்களை இறக்கிவிட்டு சென்றார் . எங்களுக்கு மிகுந்த ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் அவரை பார்த்தபோது இருந்தது. பெண் சுதந்திரம் என்று பேசி வருகிறோம் .ஆனால் பெண்களுக்கான முழு சுதந்திரத்தையும் கொடுத்து முழு ஒத்துழைப்பையும் கேப் ஓட்டுநர் வழங்கி வருகிறார் என்று பார்க்கும் பொழுது எங்களுக்கு பெரிய மகிழ்ச்சியாக இருந்தது என்றே கூறலாம் . வாழ்த்துக்கள்.  ஓட்டுநர் அவர்களுக்கு அடுத்த சவாரி அழைப்பு அவசரமாக வந்ததன் காரணமாகவும்,இரவு ஆகி விட்டதாலும் அவருடன் புகைப்படம் எடுக்கவில்லை. இருந்தபோதிலும் அவரது சிறப்பான எண்ணங்கள் எங்களுடன் தொடர்ந்து உள்ளது .நன்றி

அன்புடன் 
லெ .சொக்கலிங்கம்,
தலைமை ஆசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை.
சிவகங்கை மாவட்டம்.
8056240653

No comments:

Post a Comment