நல்லாசிரியர்களுக்கு ஆசிரியர் CJR மணி விருது
விருதுக்கு என்னை தேர்வு செய்த மகிழ்ச்சியான தகவல் :
திசைகள் குழுவின் சார்பாக நடைபெறும் 14ஆம் ஆண்டு நிகழ்வில் எனது பணிகளின் செயலை பாராட்டி விருது வழங்கப்பட உள்ளதாக ஆசிரியர் திரு.பாஸ்கர் அவர்கள் என்னிடம் கூறினார்கள்.மிகுந்த மகிழ்ச்சி என்று கூறினேன்.எனது புகைப்படமும்,எனது பணி தொடர்பான சில தகவல்களையும் என்னிடம் கேட்டார்கள்.உடன் அனுப்பி வைத்தேன்.திசைகள் குழுவுக்கு எனது நன்றிகளை தெரிவித்து கொண்டேன்.
பாராட்டு தெரிவித்த ஆசிரியர் திரு .சுரேஷ் அவர்கள் :
மறுநாள் ஆசிரியர் திரு.சுரேஷ் அவர்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.அப்போதுதான் திசைகள் குழு தொடர்பாக அன்னாரிடம் கேட்டு தெரிந்து கொண்டேன்.பாராட்டப்பட பட வேண்டிய விஷயம்.சமுதாயத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி கொண்டுள்ள திசைகள் குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்.
ஆசீர்வாதம் செய்த திரு.மணி ஆசிரியர் அவர்கள் :
மூன்று நாட்களுக்கு முன்பு ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் பங்கு கொண்டு கைதாகி மஹாலில் தங்கி இருந்தபோது அறந்தாங்கியில் இருந்து ஆசிரியர் மணி அவர்கள் என்னிடம் தொலைபேசியில் பேசினார்கள்.அய்யா , மகாலில் அதிக சப்தம் இருப்பதால் என்னால் தங்களின் பேச்சை கேட்க இயலவில்லை என்று சொல்லி,மீண்டும் நானே பேசுகின்றேன் என்று சொல்லி,மாலையில் சுமார் 6.45 மணி அளவில் மணி அய்யா அவர்களிடம் பேசினேன்.பள்ளியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகள் குறித்தும், சமுதாய முன்னேற்றம் தொடர்புடைய நிகழ்வுகள் குறித்தும் சுமார் 30 நிமிடங்கள் பேசினேன்.அய்யா அவர்களும் எனது தகவல்களை அன்பான முறையில் கேட்டு விட்டு ,ஆசீர்வாதம் தெரிவித்து வாழ்த்தினார்கள்.கடந்த ஆண்டு தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் நிகழ்வில் பங்கேற்க வில்லை என்றும்,இந்த ஆண்டு கண்டிப்பாக நிகழ்வில் பங்கேற்று என்னை சந்திப்பதாகவும் தெரிவித்து இருந்தார்கள் .
அய்யா அவர்களுடன் பேசிய நிகழ்வு எனக்கு மனதில் நீங்கா இடம் பிடித்தது.அய்யா அவர்களின் நிறைவு ஆண்டின்போது படித்த மாணவர்ளால் உருவாக்கப்பட்டதுதான் திசைகள் குழு என்று சொன்னபோது,சமுதாய மாற்றத்தில் அய்யாவின் பங்கை எண்ணி மகிழ்ந்தேன்.அய்யா அவர்களின் பெயரால் உள்ள விருதை பெறுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.திசைகள் குழுவுக்கு நன்றிகள் பல.
ஜாக்டோ - ஜியோ போராட்டமும் நானும் :
ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் ஆரம்பத்தில் இருந்தே முழு ஆதாரவுடன் எங்கள் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்று வருகின்றனர்.என்னுடைய தோழர்கள் சிலர் வெள்ளி அன்று கைதாகி தற்போது மதுரை மத்திய சிறையில் உள்ளனர்.இந்த சூழ்நிலையில் என்னால் திசைகள் குழு விழாவில் கலந்து கொள்ள இயலாத சூழ்நிலையில் உள்ளதை ஆசிரியர் பாஸ்கரன் அவர்களிடம் சொன்னேன்.அவர்களும் தகவல் தெரிவிப்பதாக சொன்னார்கள்.
மருத்துவர் திரு.தட்சிணாமுர்த்தி அவர்களுடன் அன்பான பேச்சு :
திங்கள்கிழமை நடைபெறும் போராட்டத்தில் பங்கு கொண்டு சிறை செல்வதால் என்னால் நிகழ்வில் கலந்து கொள்ள இயலாது என்பதை அன்னாரிடமும் நேற்று இரவு தெரிவித்தேன்.அவர்களோ,குடும்பத்தில் உள்ளவர்களை அனுப்புங்கள் எண்டு சொன்னார்கள்.எனது மனைவியும் அரசு பள்ளி ஆசிரியர் என்பதால் அவரும் என்னோடு போராட்டத்திற்கு வருகிறார்.எனது தந்தை ( திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியில் வசித்து வருகிறார்) அவர்களிடமும் சென்று வாருங்கள் என்று கூறினேன்.அவர்களும் காய்ச்சலால் அவதிப்படுவதால் என்னால் செல்ல இயலாத சூழ்நிலை உள்ளது என்று சொல்லி விட்டார்கள்.எனது சூழ்நிலையின் காரணமாக விருதை பிறிதொரு நாள் பெற்று கொள்கிறேன் என்பதை அன்புடன் தெரிவித்து கொள்கிறேன்.போராட்டத்தின் காரணமாகவே என்னால் அரா இயலவில்லை என்பதை அன்புடன் தெரிவித்து கொள்கிறேன்.
திசைகள் குழுவுக்கு வாழ்த்துக்கள்.நன்றி .
நன்றி.
லெ .சொக்கலிங்கம்,
தலைமை ஆசிரியர் ,சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி,தேவகோட்டை ,சிவகங்கை மாவட்டம்.
CELL :09786113160.

E-Mail : jeyamchok@gmail.com http://www.kalviyeselvam. blogspot.in/WHATSAP : 08056240653
FACE BOOK : https://www.facebook.com/ chokka.lingam.5815
FACE BOOK : https://www.facebook.com/
No comments:
Post a Comment