சிறுவர்
பல்சுவை நிகழ்ச்சி !
அகிலஇந்தியவானொலியான
மதுரை வானொலியில் தேவகோட்டை பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் பொங்கல் சிறப்பு சிறுவர் பல்சுவை நிகழ்ச்சி !
தேவகோட்டை
– தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர்
அகில இந்திய வானொலி நிலையமான மதுரை வானொலியில் ஒலிபரப்பாகும்
சிறுவர் பல்சுவை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான ஒலிபதிவு செய்யப்பட்டது.
மதுரை வானொலி நிலையத்திற்கு மாணவ,மாணவியர் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் சென்றனர்.மதுரை வானொலி நிலையத்தினர் மாணவர்களை வரவேற்று ஒலி பதிவு அறைக்கு அழைத்து சென்றனர். மாணவி அட்சயா தை பொங்கல் பற்றி பாடலும் ,பொங்கல் திருநாள் பற்றி சுழலும் சொல்லரங்கத்தினை தேவதர்ஷினி,கீர்த்தியா,யோகேஸ்வரன்,கனிஷ்காவும்,இயற்கை குறித்த நாடகத்தை ஜெயஸ்ரீ,நதியா,தேவதர்ஷினியும்,பொங்கும் மங்களம் குறித்து மாணவி கிருத்திகாவும்,மாட்டு பொங்கல் பற்றி மாணவி சிரேகாவும்,சுதந்திர போராட்டத்தில் சிவகங்கையின் பங்கு குறித்து கார்த்திகேயனும்,ஐயப்பனும் சிந்திக்கும் விதமாக நிகழ்ச்சிகளை வழங்கினார்கள். மாணவி கீர்த்தியா அனைத்து நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார்.ஆசிரியை செல்வமீனாள் மாணவர்களை அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார்.இப்பள்ளியின் நிகழ்ச்சிகள் இந்த மாதம் 10 மற்றும் 17ம் தேதிகளில் மாலை 6.15 மணிக்கு ஒலிபரப்பாகவுள்ளது.
பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் அகில இந்திய வானொலியான மதுரை வானொலி நிலையத்தில் சிறுவர் பல்சுவை நிகழ்ச்சிக்கு ஒலி பதிவுக்கு தனி வாகனம் மூலம் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் சென்றனர்.
மேலும் கூடுதல் தகவல்கள்
அகிலஇந்தியவானொலியான
மதுரை வானொலியில் தேவகோட்டை பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் பொங்கல் சிறப்பு சிறுவர் பல்சுவை நிகழ்ச்சி !
மதுரை வானொலி நிலையத்தில் ஒலிப்பதிவானது
தனி வாகனம் மூலம் தேவகோட்டையில் இருந்து மதுரை வானொலி நிலையத்துக்கு பயணம்
பள்ளியில் இருந்து தனி வாகனம் மூலம் மாணவர்கள் அனைவரும் ஆசிரியர்களுடன் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் தேவகோட்டை பள்ளியில் இருந்து மதுரை வானொலி நிலையத்திற்கு நேரடியாக அழைத்து செல்லப்பட்டனர்.பள்ளியின் சார்பாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.மாணவர்கள் அனைவரும் மதுரைக்கு வருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிகழ்ச்சி மதுரை வானொலியில் வருகிற ஒளிபரப்பாகவுள்ளது.
வானொலி நிலையத்திற்கு சென்றது தொடர்பாக மாணவர்களின் கருத்து:
ஐந்தாம் வகுப்பு படிக்கும் நதியா : நான் இது வரை மதுரை வந்தது கிடையாது.இதுவே முதல் முறை.வானொலி நிலையத்தை கேள்வி பட்டது கூட கிடையாது.இங்கு வந்து நான் பேசும் நிகழ்ச்சி ஒலிப்பதிவானது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. என்னுடைய வாழ்கையில் இது மறக்க முடியாத நிகழ்வு.இது வரை தொலைகாட்சியில் அனைவரும் பேசுவதை தான் கேட்டு உள்ளேன்.ஆனால் இப்போது தான் ரேடியோவில் நான் பேசுவதை கேட்க போகிறேன் என்று நினைக்கும்போது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.ரேடியோ நிலையத்தை சுற்றி காண்பித்தனர்.எனக்கும்,எனது அம்மாவுக்கும் ரேடியோ ஒலிபதிவு புதிய அனுபவத்தை கொடுத்துள்ளது.
எட்டாம் வகுப்பு அபிநயா : நான் ரேடியோவில் பேசியது எனக்கு பிரமிப்பை ஏற்படுத்தி உள்ளது.என்னுடைய குரல் மிக நன்றாக உள்ளதாக ரேடியோ நிலையத்தில் சொன்னார்கள்.எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.நான் பேசியதை நான் கேட்பது தொடர்பாக என்னுடைய வீட்டின் அருகில் உள்ளவர்களிடம் எல்லாம் சொல்லி உள்ளேன்.அனைவரும் ஆச்சரியத்துடன் கேட்டனர்.ரேடியோ நிலையம் எப்படி இருக்கும் என்று அனைவரும் என்னிடம் கேட்டு தெரிந்து கொண்டனர்.இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்ததில் எனக்கு மகிழ்ச்சி.ஒரே வருத்தம் எனது தயார் கூலி வேலைக்கு செல்வதால் அவர்கள் என்னுடன் வர இயலவில்லை.அவர்களும் வந்து நான் பேசுவதை பார்த்திருந்தால் இன்னும் சந்தோசமாக இருந்து இருக்கும்.இருந்த போதும் ரேடியோ நிலையத்தில் என்னை அன்புடன் பேச சொல்லி பாராட்டி ஒலிபதிவு செய்ததும்,எங்கள் பள்ளியில் இருந்து எங்களை தனி வாகனம் மூலம் பாதுகாப்பாக ரேடியோ நிலையம் அழைத்து வந்து மதியம் உணவு பள்ளியின் சார்பாக வழங்கியதும் எனக்கு அதிமகமான மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

No comments:
Post a Comment