பார்வையாளர்களை அசத்திய மாற்றுத்திறனாளி மாணவர்கள்
நேற்று படித்த இரண்டு வரி எனக்கு இன்று நினைவில் இல்லை.ஆனால் இந்த மாற்றுத்திறனாளி மாணவி என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டார்-மாணவி சிரேகா
தேவகோட்டை - சென்னை சேது பாஸ்கரா மெட்ரிக் பள்ளியில் பயின்று வரும் பார்வையற்ற மாற்று திறனாளி மாணவர்கள் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது.
மாற்றுத்திறனாளி மாணவர்களை தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் வரவேற்றனர்.தேவகோட்டை பள்ளி மாணவர்கள் பெற்றுள்ள பரிசுகள் ,சான்றிதழ்களை ஆர்வத்துடன் மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர்களும் ,பெற்றோர்களும்,ஆசிரியர்களும் பார்வையிட்டனர்.பின்பு நடைபெற்ற நிகழ்வில் தேவகோட்டை பள்ளி மாணவர்கள் அறநூல்,திருப்பாவை,திருவெம்பாவை,திருக்குறள் நடனம்,அபிராமி அந்தாதி நடனம் மூலம் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.மாற்றுத்திறனாளி மாணவர்களில் பவித்ரா,தக்சிகா பல்வேறு திருக்குறளை சொல்லியும்,விஜி பூர்விகா யோகா செய்து காண்பித்தும்,முதல் வகுப்பில் படித்ததை அப்படியே மூன்றாம் வகுப்பு படிக்கும் இன்றைய நிலையில் தெளிவாக சொல்லி அனைவரையும் ஆச்சரியத்தில் அசத்தியும் , சபரீஷ் ட்ரம்ஸ் வாசித்தும் சௌமியா பழமொழிகள் சொல்லியும் பார்வையாளர்களை அசத்தினார்கள்.மாற்று திறனாளி மாணவர்களின் திறமைகளை பார்த்து கற்றுக்கொண்டது தொடர்பாக சிரேகா என்ற மாணவி பேசுகையில் , நேற்று படித்த இரண்டு வரி எனக்கு இன்று நினைவில் இல்லை.ஆனால் இந்த மாற்றுத்திறனாளி மாணவி என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டார்.1ம் வகுப்பில் படித்ததை மூன்றாம் வகுப்பில் ஞாபகம் வைத்து சொல்லி எங்களை அசத்தி விட்டார்.
இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்,இந்திய கால்பந்தாட்ட அணியின் வீரர் ராமன் விஜயன்,சென்னை தேசிய பார்வையற்றோர் சங்க பயிற்சியாளர் லெட்சுமி பிரபா ,சேது பாஸ்கரா விவசாய கல்லூரியின் பண்ணை மேலாளர் கருப்புராஜா ,சென்னை சேது பாஸ்கரா பள்ளி மாற்று திறனாளி மாணவர்களின் பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
படவிளக்கம் : சென்னை சேது பாஸ்கரா மெட்ரிக் பள்ளியில் பயின்று வரும் பார்வையற்ற மாற்று திறனாளி மாணவர்கள் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது.மாற்று திறனாளி மாணவர்கள் தங்களின் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.
மாற்றுத்திறனாளி மாணவர்களின் பெற்றோர்கள் சார்பாக சோபா பேசும்போது,
நாங்கள் சென்னையில் இருந்து இங்கு வந்துள்ளோம். எங்கள் குழந்தைகள் மாற்று திறனாளிகள் கிடையாது.நாங்கள் அனைவரும் உங்களுக்கு சமமானவர்கள்.உங்களின் திறமைக்கும் பாராட்டுக்கள் .இந்த ஊரில் கோவில் அருகில் அமைதியான இடத்தில் இப்படி பள்ளியை பார்க்கும்போது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.உங்களின் பல்வேறு பரிசுகளையும் , சான்றிதழ்களையும் பார்க்கும்போது எங்களுக்கு மிகப்பெரிய சந்தோசம்.வாழ்த்துக்கள் என்று பேசினார்.
சென்னை தேசிய பார்வையற்றோர் சங்க பயிற்சியாளர் லெட்சுமி பிரபா பேசும்போது :
சென்னையில் ஜன நெருக்கடியான சூழ்நிலையில் வாழ்ந்து வரும் எங்களுக்கு இந்த ஊர் மிகவும் பிடித்து உள்ளது.அமைதியான சூழ்நிலையில் படிக்கும் இந்த மாணவர்கள் மிகவும் குடுத்து வைத்தவர்கள்.சென்னை சேது பாஸ்கரா மெட்ரிக் பள்ளியில் பல ஆயிரம் மாணவர்களுடன் மாற்றுத்திறன் உள்ள சுமார் 30 மாணவர்கள் இலவசமாக படித்து வருகின்றனர்.சென்னை தேசிய பார்வையற்றோர் சங்கத்தில் அடிப்படை பயிற்சி பெற்று வரும் இம்மாணவர்கள் சேது பாஸ்கரா மெட்ரிக் பள்ளியில் அனைத்து வகை மாணவர்களுடன் இணைந்து இலவசமாக படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.எங்கள் பள்ளி மாணவர்கள் மாற்றுத்திறனாளி மாணவர்களாக இருந்தாலும் மிக அருமையாக திறமை பெற்றவர்கள்.அவர்களை பார்த்துக்கொள்ளும் பெற்றோர்கள் உண்மையில் கடவுளுக்கு சமமானவர்கள்.அவர்களிடம் அந்த குழந்தைகள் பிள்ளைகளாக பிறந்ததற்கு கொடுத்துவைத்திற்க வேண்டும்.நன்றாக பார்த்து கொள்கிறார்கள்.நாங்கள் இம்மாணவர்களை அழைத்து செல்லும் இடங்களுக்கெல்லாம் எங்கள் பள்ளியின் தாளாளர் சேது குமணன் வாகனம் ஏற்பாடு செய்து எங்களை அனுப்பி வைக்கின்றார்.தற்போது சென்னையில் இருந்து இங்கு வந்தது கூட அவரது உதவியுடன்தான் வந்துள்ளோம்.இந்த பள்ளி மாணவர்களின் திறமைகளும் எங்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது என்பது உண்மை என்று பேசினார்.
இந்நிகழ்வு குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் :
இந்த கலந்துரையாடல் நிகழ்வின் மூலம் எங்கள் பள்ளி மாணவர்கள் பல வகையிலும் நம்பிக்கை பெற்றுள்ளனர்.தங்களுக்கு பொருளாதார வசதி இல்லை, அம்மா,அப்பா கவனிப்பு இல்லை என்று வருத்தப்படும் மாணவர்கள் மாற்று திறனாளி மாணவர்களின் திறமைகளை பார்த்து புத்துணர்வு பெற்றுள்ளனர்.தாங்களும் அவர்களை போன்று தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணத்தை ஏற்படுத்தி கொண்டு உள்ளனர்.மாணவர்கள் யோக செய்தது, திருக்குறள் சொன்னது , முதல் வகுப்பில் படித்ததை அப்படியே மூன்றாம் வகுப்பில் கூறியது என அனைத்துமே அருமையாக இருந்தது.எங்கள் பள்ளி மாணவர்களின் பரிசுகளையும்,விருதுகளையும்,சான்றிதழ்களையும் பற்றி வந்திருந்த பெற்றோர்கள் பாராட்டியது அருமை.இளம் வயது மாணவர்கள் மாற்று திறனாளி மாணவர்களை கிண்டல் ,கேலி செய்து தொல்லை கொடுக்காமல் அவர்களிடம் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை இந்த நிகழ்வு ஏற்படுத்தி உள்ளது என்பது உண்மை.

No comments:
Post a Comment