வட்டார அளவில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு
பாராட்டு விழா
தேவகோட்டை – தேவகோட்டையில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலைய
துறை பாவை விழா போட்டிகளில்
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
விழா நடைபெற்றது.
வட்டார அளவிலான பாவை விழா ஒப்புவித்தல் மற்றும் கட்டுரை போட்டிகளில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றதற்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. ஆசிரியை முத்து மீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை
ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.வட்டார அளவிலான திருப்பாவை,திருவெம்பாவை
ஒப்புவித்தல் போட்டிகளில்
சிறுவர்களுக்கான பிரிவில் முதலிடம் பெற்ற ஜெய ஸ்ரீ,இரண்டாம் இடம் பெற்ற அஜய், கட்டுரை போட்டியில் சிறுவர்களுக்கான பிரிவில் முதலிடம் பெற்ற அம்மு ஸ்ரீ , 6 முதல் 8
வகுப்பு வரை உள்ள பிரிவில் ஒப்புவித்தல் போட்டியில் முதலிடம் பெற்ற ஜனஸ்ரீ ,இரண்டாமிடம் பெற்ற கார்த்திகேயன் மற்றும் கட்டுரை போட்டியில் முதலிடம் பெற்ற கிருத்திகாவுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.நிறைவாக ஆசிரியை முத்து லெட்சுமி நன்றி
தெரிவித்தார்.
பட விளக்கம் : இந்து சமய
அறநிலைய துறை சார்பாக தேவகோட்டை வட்டார அளவிலான பாவை விழா ஒப்புவித்தல் மற்றும் கட்டுரை
போட்டிகளில் வெற்றி பெற்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி
மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
No comments:
Post a Comment