Saturday, 12 January 2019

பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா 








தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
  
                ஆசிரியை முத்துலெட்சுமி  வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம்  தலைமையில் ஆசிரியர்கள் ,மாணவிகள் பொங்கல் சமைத்து மாணவர்களுக்கு வழங்கினார்கள் .
பொங்கல் விளையாட்டு, பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.நிகழ்விற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் கருப்பையா செய்து இருந்தார்.நிறைவாக ஆசிரியை முத்து மீனாள்  நன்றி கூறினார்.


பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.மாணவர்கள் அனைவரும் பொங்கலோ பொங்கல் என்று சொல்லி மகிழ்ச்சியுடன் சர்க்கரை பொங்கல் சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

No comments:

Post a Comment