பள்ளி மாணவ பத்திரிகையாளருக்கு சென்னையில் பாராட்டு விழா
இன்று சென்னையில் நடைபெறும் சுட்டி ஸ்டார்களுக்கான பாராட்டு விழாவில்
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி சிரேகா பங்கு கொண்டு பரிசுகளை பெற உள்ளார்.அவருக்கு பள்ளியின் சார்பாக
பாராட்டுக்கள்.
சுட்டி விகடனின் மாணவ பத்திரிக்கையாளராக தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி தேர்வு ( தொடர்ந்து ஐந்தவாவது ஆண்டாக இப்பள்ளி மாணவிகள் மாணவ பத்திரிக்கையாளராக தேர்ந்தெடுக்கபடுவது குறிப்பிடத்தக்கது )
கோடை விடுமுறையில்
மாநில அளவில் நடைபெற்ற சுட்டி விகடன் பேனா பிடிக்கலாம்,பின்னி எடுக்கலாம் போட்டியில் நடுநிலைப் பள்ளி அளவில் தேர்வு பெற்றுள்ள ஒரே மாணவி தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி சிரேகா சுட்டி ஸ்டாராக தேர்வு பெற்றதற்கு பள்ளி காலை வழிபாட்டு கூட்டதில் பாராட்டு.
சுட்டி விகடன் சார்பாக தமிழகம் முழுவதும் நடைபெற்ற பேனா பிடிக்கலாம் ,பின்னி எடுக்கலாம் என்கிற சுட்டி ஸ்டார் போட்டி காரைக்குடி மையத்தில் நடைபெற்றது.கோடை விடுமுறையில் இப்போட்டி நடை பெற்றது.இப்போட்டியில் மாணவர்களை ஆர்வமுடன் ஆசிரியை முத்து மீனாள் பங்கேற்க வைத்தார்.போட்டிக்கு கோடை விடுமுறையிலும் தயார் செய்த ஆசிரியைக்கும்,தேர்வான மாணவி சிரேகாவுக்கும் பள்ளி காலை வழிபாட்டு கூட்டதில் தலைமை ஆசிரியர் லெ சொக்கலிங்கம்,ஆசிரிய,ஆசிரியை மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.இந்த ஆண்டும் முழுவதும் மாணவி நன்றாக சுட்டி விகடனுக்கு எழுதவும் ,தொடர்ந்து பல வெற்றி பெறவும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.சுட்டி விகடன் இதழுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment