இஸ்ரோவின் புதிய சாதனைக்கு பள்ளி மாணவர்கள் பாராட்டு
தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் விண்வெளித் துறையில் இஸ்ரோவின் புதிய சாதனைக்கு வண்ண பலுன்கள் பறக்கவிட்டு மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) உயர்தொழில்நுட்பத்தில் ஜிசாட்-29 என்ற செயற்கைக்கோளை தயாரித்துள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட் மூலம் ஜிசாட் -29 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தி உள்ளது .அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்தி விண்வெளித் துறையில் நமது நாடு புதிய சாதனையை படைத்துள்ளது. இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தகவல் தொடர்பு மேம்பட உதவும் என்கிற தகவலை மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் எடுத்து கூறினார்.இந்த சாதனையை செய்த இஸ்ரோவின் அனைத்து விஞ்ஞானிகள்,பொறியாளர்கள்,தொழில்நுட்ப ஊழியர்கள் அனைவருக்கும் பள்ளி மாணவர்களால் வண்ண பலூன் பறக்கவிடப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரிய,ஆசிரியைகள்,மாணவ,மாணவியர்கள் பங்கேற்றனர்.
பட விளக்கம்: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஜிஎஸ்எல்வி மார்க் - 3 டி2 ராக்கெட் மூலம் ஜிசாட் -29 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தி விண்வெளித் துறையில் புதிய சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வண்ண பலூன் பறக்க விட்டு பள்ளி மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
மேலும் கூடுதல் தகவல் :
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் 67-வது ராக்கெட் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 -டி2 ஆகும். தகவல் தொடர்புக்காக இஸ்ரோ தயாரித்த 33-வது செயற்கைக்கோள் ஜிசாட்-29 இதில் பொருத்தப்பட்டு உள்ளது. 2-வது ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் 33-வது ராக்கெட் மற்றும் இந்த ஆண்டு ஏவப்படும் 5-வது ராக்கெட் இதுவாகும்.
ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் திட எரிபொருள், திரவ எரிபொருள் மற்றும்
கிரையோஜெனிக் என்ஜின் ஆகிய 3 நிலைகளை கொண்ட ராக்கெட்டாகும். இந்த
ராக்கெட்டை வெற்றிகரமாக செலுத்தியதன் மூலம் இஸ்ரோ அடுத்த சாதனைக்கு தயாராகி
வருகிறது.
No comments:
Post a Comment