கந்தர் சஷ்டி விழாவில் கலை நிகழ்ச்சிகளால் கலக்கிய பள்ளி
பள்ளியில் மாணவர்களுக்கு பாராட்டு
தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்
கந்தர் சஷ்டி விழாவில் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் . மாணவர் கார்த்திகேயன் வரவேற்றார். தேவகோட்டை கந்தசஷ்டி விழாவில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகள் மற்றும் சொற்பொழிவில் பங்கு பெற்ற மாணவர்களுக்கும்,பயிற்சி அளித்த ஆசிரியர்கள் செல்வமீனாள் ,முத்துமீனாள் ,கருப்பையா ஆகியோருக்கும் பாராட்டு
தெரிவிக்கப்பட்டது. நிறைவாக மாணவி கீர்த்தியா நன்றி கூறினார்.
பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கந்தசஷ்டி விழாவில் கலைநிகழ்ச்சிகளில் பங்குபெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.
மேலும் விரிவாக :
இப்பள்ளி மாணவர்கள் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக தேவகோட்டை கந்த சஷ்டி விழா கலைநிகழ்ச்சிகளில் பங்குபெறுவது குறிப்பிடத்தக்கது.
ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் கலை நிகழ்ச்சிகள்

வரவேற்புரையுடன் துவங்கி பரதநாட்டியம் , செல்ல குழந்தைகள் நடனம்,கந்தசஷ்டி வரலாறு குறித்து தமிழ் ஆங்கில பேச்சு ,ஒயிலாட்டம் நடனம்,சுழலும் சொல்லரங்கம் ,மழலைகளின்
ஆசை பாடல் நடனம்,சூரஸம்ஹரம் தொடர்பான பேச்சு,வேப்பிலை
நடனம்,உடலுக்கு நன்மை தரும் யோகா,இயற்கையை நேசிப்போம் என்கிற தலைப்பில் நாடகம்,வில்லுப்பாட்டு ஆகிய
கலை நிகழ்ச்சிகள் நன்றியுரையுடன் நிறைவுபெற்றது.ஒரு மணி நேரத்திற்கும்
மேலான கலை நிகழ்ச்சிகளை பள்ளி மாணவிகள் 5ம் வகுப்பு கீர்த்தியா ,7ம்
வகுப்புஅய்யப்பன் ஆகியோர் தொகுத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment