Tuesday, 31 October 2017

தேசிய ஒருமைப்பாட்டு தின விழா 

தேவகோட்டை- தேவகோட்டைசேர்மன்  மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய ஒருமைப்பாட்டு தினம் கொண்டாடப்பட்டது.


                                  சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினத்தை தேசிய ஒருமைப்பாட்டு தினமாக நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரை மாணவி ஜெனிபர்  வரவேற்றார்.நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கி பேசுகையில் ,சர்தார் வல்லபாய் படேல் இந்திய நாட்டில் உள்ள அனைவரையும் ஒன்று இணைத்து அனைத்து மாநிலங்களையும் ஒன்றாக சேர்த்தார்.இந்தியா என்ற மிகபெரிய நாடு உருவாக அவரது உழைப்பு அதிகம் .அவரது தொலைநோக்கு பார்வை குறித்து  விரிவாக எடுத்துக்கூறப்பட்டது.மாணவர்கள்,ஆசிரியர்கள் அனைவரும் தேசிய ஒற்றுமை நாள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.   நிகழ்ச்சியின் நிறைவாக மாணவர் அஜய் பிரகாஷ் நன்றி கூறினார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியை முத்து லெட்சுமி செய்திருந்தார்.

பட விளக்கம் : தேவகோட்டைசேர்மன்  மாணிக்க வாசகம்   நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில்   மாணவர்கள்,ஆசிரியர்கள் அனைவரும் தேசிய ஒற்றுமை நாள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.



No comments:

Post a Comment