Saturday, 6 May 2017

வானவில் எவ்வாறு தெரிகிறது   ? நேரடி செயல் விளக்கம்

தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடமாடும் அறிவியல் வாகனம் மூலம் செயல் முறை விளக்கமளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.



                                      நிகழ்விற்கு வந்தவர்களை ஆசிரியை செல்வமீனாள்  வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.அகஸ்தியா அறக்கட்டளை மற்றும் அமுமு அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் இந்த அறிவியல் வாகனம் உபகரணங்களை கொண்டு அறிவியல் சார்ந்த விளக்கங்களை நேரடி சோதனை மூலம் சென்னையை சார்ந்த பயிற்சியாளர் கவியரசு மற்றும் திருநெல்வேலியை சார்ந்த முத்து செல்வன்  ஆகியோர் நேரடியாக மாணவர்களுக்கு செய்து காண்பித்தார்கள்.ஆடி என்றால் என்ன ?, ஆடியின் வகைகள்,மெய்பிம்பம்,மாயபிம்பம், வானவில் எவ்வாறு தெரிகிறது என்பதை நியூட்டன் வட்டு மூலமும் விளக்கினார்கள் .ஒலியானது  திட ,திரவ நிலைகளில்  எவ்வாறு பரவும்,ஒலி எதனால் ஏற்படுகிறது?, ஒளி எவ்வாறு நேர்கோட்டு பாதையில் செல்லும் ?,ஒளி மூலங்கள் ,நிழல் தொடர்பான விளக்கங்களை நேரடியாக செய்து காண்பித்து விளக்கம் அளித்தனர்.                         
                                 
                                                  மாணவர்கள் காயத்ரி,பரமேஸ்வரி,ஜெகதீஸ்வரன்,தனலெட்சுமி,ராஜி ,விக்னேஷ்,உட்பட பலர் கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றனர்.நிறைவாக ஆசிரியை கலாவல்லி  நன்றி கூறினார்.

பட விளக்கம் ; தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடமாடும் அறிவியல் வாகனம் வாயிலாக மாணவர்களுக்கு சோதனைகளை அமுமு அறக்கட்டளை   மற்றும் அகஸ்தியா அறக்கட்டளையின் பயிற்சியாளர் கவியரசு ,முத்து செல்வன் செய்து காண்பித்தார்கள் .

No comments:

Post a Comment