Thursday, 25 May 2017

விடுமுறையில் சத்துணவு
தேவகோட்டை – தமிழக அரசின் உத்தரவின்படி  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மதியம் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு விடுமுறையிலும் சத்துணவு வழங்கும் துவக்க விழா நடைபெற்றது.


                                           தமிழக அரசின் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்தின் கீழ் கோடைகாலத்தில் நிலவும் கடும் வறட்சியின் காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதால் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் .சதுனவுத்திட்டதின் கீழ் இயங்கும் அனைத்து சத்துணவு மையங்களில் உணவு உண்ணும் மாணவ,மாணவியர்களுக்கு பள்ளி விடுமுறை நாளன்றும்  உடனடியாக உணவு வழங்க உத்திரவு வழங்கப்பட்டுள்ளது.அதன் தொடர்ச்சியாக தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் சத்துணவு வழங்கும் துவக்க விழா பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம்  தலைமையில்  நடைபெற்றது.இந்நிகழ்வில் 5௦ க்கும் மேற்பட்ட மாணவர்கள் சத்துணவு சாப்பிட்டனர். சத்துணவு அமைப்பாளர் தென்றல்,உதவியாளர் கமலாராணி ,சமையலர் கலை செல்வி, ஆகியோரும்,ஆசிரியர்,ஆசிரியர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
                           இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் கூறியதாவது , கோடை விடுமுறை விட்ட நாளன்று எங்கள் பள்ளி ஆசிரியர்களுடன் கூட்டம் நடைபெற்றபோது ,அதில் 7ஆம்  வகுப்பு பயிலும் மாணவி காவியா, நான் இங்கு நல்ல உணவு சாப்பிட்டேன்.ஆனால் விடுமுறை 40 நாளும் நான் எப்படி சாப்பிட போகிறேன் என்று தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.கோடை விடுமுறையில் வறட்சி காலத்தில் சத்துணவு வழங்கும் திட்டம் உண்மையில்  மாணவர்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும்.காவியா போன்ற மாணவிகளுக்கு இந்த திட்டம் நல்ல உதவியாக இருக்கும்.இதனை வரவேற்கின்றோம்.இந்த திட்டம் தொடர்பாக தகவல் கிடைத்த உடன் ஆசீரியர்கள் மூலம் அனைத்து மாணவர்களுக்கும் தகவல் சொல்லி மாணவர்களை சத்துணவு சாப்பிட முயற்சி எடுத்துள்ளோம் .இன்று பல மாணவர்கள் சத்துணவு சாப்பிட்டு சென்றுள்ளனர் என்று தெரிவித்தார்.

பட விளக்கம் : தமிழக அரசின் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்தின் கீழ்  சத்துணவு மையங்களில் உணவு உண்ணும் மாணவ,மாணவியர்களுக்கு பள்ளி விடுமுறை நாளன்றும்  தமிழக அரசு உணவு வழங்க உத்திரவிட்டதின் படி சிவகங்கை மாவட்டம்   தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் சத்துணவு வழங்கும் துவக்க விழா பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமையில் நடைபெற்றது. நடைபெற்றது.

No comments:

Post a Comment