மண்ணவனுரில் இரண்டு நாள் சுற்றுலா
லெ .சொக்கலிங்கம் ,தேவகோட்டை சுற்றுலா குறித்து கூறுவது : மண்ணவனுர் பகுதி கொடைக்கானலில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.இயற்கை அதிகம் உள்ள பகுதி .அதன் வழியாக நாம் கிளாவரை வரை செல்லாம்.விரிவாக காண்போம்.
திண்டுக்கல் டூ கொடைக்கானல் ( தாண்டிக்குடி-பெரும்பாறை வழியாக )
திண்டுக்கல்லில் இருந்து காலை 5 மணிக்கு கிளம்பி ஆத்தூர் வழியாக சித்தையன்கோட்டை,சித்தரேவு வழியாக பெரும்பாறை மலை யை அடைந்தோம் .சித்தரேவு முதல் மலை பகுதி ஆரம்பம் ஆகி விடுகிறது.நல்ல பசுமை சூழ்ந்த சூழல்.இயற்கை காற்றை சுவாசித்து கொண்டே (லெ .சொக்கலிங்கம் ,தேவகோட்டை ) பொறுமையாக மலை ஏறினால் பெரும்பாறை மலையில் நல்ல டீ சாப்பிட்டோம்.அங்கு மிக்ஸ்ர் நன்றாக இருக்கும் என்றார்கள்.அதனையும் வாங்கி வைத்து கொண்டு கொடைக்கானல் சென்று சாப்பிட்டோம்.நன்றாக இருந்தது.பெரும்பாறை மலையில் இருந்து கிளம்பி பெருமாள் மலை வழியாக காலை 7.20 க்கெல்லாம் கொடைக்கானல் கோக்கர்ஸ் வாக் நடை பாதையை அடைந்தோம்.அங்கு 30 நிமிடம் சுற்றி பார்த்தோம்.
பேரிஜம் ஏரி சுற்றுலா
மீண்டும் காரில் பயணம்.மூஞ்சிக்கல் சென்று அங்கு உள்ள வனத்துறை அலுவலகத்தில் பணம் செலுத்தி (காலை 8.30 மணி முதல் 9.00 மணிக்குள் மட்டுமே ) படிவம் பூர்த்தி செய்து பேரிஜம் வனப்பகுதிக்கு செல்ல கிளம்பினோம்.செல்லும் வழியில் மிகுந்த போக்குவரத்து நெருக்கடி.அதனை தாண்டி மோயர் பாயிண்ட் என்கிற இடத்தில பிரிந்து பேரிஜம் உள்ளே அனுமதி பெற்று (லெ .சொக்கலிங்கம் ,தேவகோட்டை ) சென்றோம்.முதலில் அமைதி பள்ளத்தாக்கு (அருமையான இடம் ) கண்டு களித்தோம்.மீண்டும் அடுத்ததாக ஒரு அமைதி பள்ளத்தாக்கு.நல்ல இயற்கை சூழ்ந்த இடம்.பசுமை கொட்டி கிடக்கிறது.அடுத்து மலை பகுதியை காணும் இடம் .அடுத்ததாக ஏரியின் ஒரு பகுதி அருகில் சென்று சாலையில் நின்று பார்க்கலாம்.நிறைவாக பேரிஜம் ஏரி அருகே காரை நிறுத்தி விட்டு சிறிது தூரம் நடந்து சென்றால் உள்ளே பேரிஜம் ஏரி பார்க்கலாம்.அமைதியான சூழல்.நல்ல இடம்.சிறிது நேரம் இளைப்பாறி விட்டு மீண்டும் அங்கிருந்து மோயர் பாயிண்ட் நோக்கி வரவேண்டும்.
கொடைக்கானல் சுற்றுலா
மோயர் பாயிண்டில் சிறிது நேரம் அழகை ரசித்து விட்டு அடுத்ததாக நாம் செல்ல கூடிய இடம் குணா குகை.அங்கு குகையை காண முடியாது.ஆனால் அந்த வழித்தடத்தில் சிறிது தூரம் நடந்து சென்று அழகை ரசிக்கலாம்.சிறுது நேரம் அங்கு உள்ள மற பலகைகளில் அமரலாம்.மீண்டும் சிறிது தூரம் நடந்து வந்து நமது வாகனத்தில் ஏறி பில்லர் ராக் (லெ .சொக்கலிங்கம் ,தேவகோட்டை ) சென்றோம்.நீண்ட பனி மூடி இருந்ததால் பனிப்புகையை பார்த்து விட்டு திரும்பி விட்டோம்.நிறைவாக கொடைக்கானல் ஏரி வந்து அங்கு படகு சவாரி சென்றோம்.அருமையான பயணம்.பிறகு குதிரை சவாரி,சைக்கிள் சவாரி செல்லலாம்.அதன் பிறகு சில பொருள்கள் வாங்கி கொண்டு மீண்டும் குறிஞ்சி ஆண்டவர் கோவில் சென்றோம்.முருகனை தரிசித்தோம்.மீண்டும் இரவு 8 மணிக்கு பூம்பாறை வழியாக மண்ணவனுர் சென்று அடைந்தோம்.அங்கு அரவிந்த் ரெசிடென்சி என்கிற வாடகை அறையில் தங்கினோம்.
மண்ணவனுரில் முதல் நாள் சுற்றுலா
ஆட்டு பண்ணை ,ஏரியில் பரிசல் சுற்றுலா
மண்ணவனுரில்முதல் நாள் காலை ஆட்டு ஆராய்ச்சி பண்ணைக்கு சென்றோம்.மத்திய அரசின் நிறுவனம்.இங்கு கறி முயல்கள் வளர்ப்பு,ஆடுகள் வளர்ப்பு மற்றும் பசுமையான புல் தரையில் இன்பமாக அமரலாம்.நல்ல இயற்கை சூழ்நிலை.ஆனந்தமாக அனுபவிக்கலாம்.ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சுற்றி பார்க்கலாம்.மீண்டும் (லெ .சொக்கலிங்கம் ,தேவகோட்டை ) மண்ணவனுர் கைகாட்டி வழியாக சென்றால் ஏரியுடன் கூடிய காட்டு இலாகாவின் பரிசல் பயணம் செல்லலாம்.அருமையான இடம் .நன்றாக ரசிக்கலாம்.இந்த ஏரியின் நடுவே நாம் நடக்கும்போது கால்களில் ஊசி குத்துவது போன்று முழங்கால் முதல் பாதம் வரை ஜில்லென்ற இன்பம்.இதனை இது வரை எங்குமே அனுபவித்தது கிடையாது.முதலில் பயம் பிறகு இனிமையான பயணம்.
குழந்தை வேலப்பர் சன்னதி,கவுஞ்சி சுற்றுலா
மதிய உணவை முடித்து கொண்டு அங்கிருந்து (லெ .சொக்கலிங்கம் ,தேவகோட்டை ) நாங்கள் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவிலுக்கு சென்றோம்.சுமார் 1000 வருடத்திற்கு முன்பு உள்ள கோவில்.இதன் சிறப்பு பழனி முருகன் சிலையில் இது ஒன்று என்று கூறினார்கள்.அருமையான இடம்.மேலும் இங்கு மலை பூண்டு அதிக அளவில் விற்கப்படுகிறது.இதனையும் வாங்கி கொள்ளலாம் .பின்பு அங்கிருந்து பூம்பாறை மலை பகுதியில் உள்ள பாலு என்பவரின் ஹோட்டலில் நல்ல சாப்பாடு சாப்பிட்டோம்.அதன் அருகில் புதிய கேரட் தோட்டத்தில் உருவானது வாங்கி கொள்ளலாம் .மீண்டும் மண்ணவனுர் வந்து அங்கிருந்து (லெ .சொக்கலிங்கம் ,தேவகோட்டை ) நாங்கள் கவுஞ்சி , பூண்டி வழியாக கிளாவரை சென்றோம்.அங்கு புறவழிச்சாரு என்கிற பகுதியில் அடர்ந்த காடுகளின் இடையில் சிறிய ஏறி உள்ளது.கண்ணுக்கு குளிர்ச்சியான இடம்.மீண்டும் மலை பகுதியில் கவுஞ்சியில் பூண்டு விவசாயம் செய்யும் இடம் சென்று நேரில் பார்த்து பூண்டை மொத்தமாக கட்டுவதையும் பார்த்து அவர்களுடன் தேவகோட்டையில் இருந்து சென்ற சொக்கலிங்கம் பேசிக்கொண்டு இருந்தார்.பின்பு கவுஞ்சியில் ஒரு டீ கடையில் டீ குடித்தோம்.அரசு உயர்நிலை பள்ளியின் அருகில் படம் எடுக்கும் இடம் என்று சொன்னார்கள்.அங்கு மலை பகுதியின் மேலே உச்சி வரை சென்றோம்.மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.பயம் லேசாக இருந்தது.ஏனெனில் அந்த இடத்தில் நன்றாக கார் ஓட்ட தெரிந்தால் மட்டுமே செல்ல முடியும்.உச்சி வரை சென்று பார்த்தோம்.மீண்டும் மண்ணவனுர் அருகில் உள்ள ஏரி அருகே அமர்ந்து நீண்ட நேரம் இளைப்பாறினோம்.இரவு மண்ணவனுரில் தங்கினோம் .
மண்ணவனுரில் இரண்டாம் நாள் சுற்றுலா :
கூக்கால் சுற்றுலா
இரண்டாம் நாள் கிளம்பி அடர்ந்த காடுகளின் வழியாக சென்றோம்.செல்லும் வழியில் ஏரி பார்த்தோம்.அங்கு நீர் கோழி பார்த்தோம்.நல்ல இயறக்கை சூழ்ந்த இடத்தில தேவகோட்டையில் இருந்த சென்ற சொக்கலிங்கம் ஆகிய எங்கள் குடும்பம் நன்றாக வளர்ந்திருந்த புல் வெளியில் அமர்ந்தோம்.பிறகு ஊருக்குள் சென்றோம்.அங்கு அருமையான விவசாயம் செய்து ஊர் அதனுடன் முடிந்து விட்டது.அதன் பிறகு கேரளா என்று சொன்னார்கள்.மிகவும் குளுமையான ஊர் அது.அங்கு ஊரின் உள்ளே ஓர் ஏறி உள்ளது.அது சூப்பர்.அங்கு இருந்து நடை பயணம் வழியாக மேலே மலை பகுதிக்கு ஊரில் உள்ளவர்கள் உதவியுடன் ட்ரெக்கிங் சென்றால் பாப்பையி அம்மன் கோவில் உள்ளதாகவும்,அங்கு நின்று பார்த்தால் கொடைக்கானல் பகுதி முழுவதும் நன்றாக தெரியும் என்று சொன்னார்கள்.நாங்கள் சென்று இருந்தபோது கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து ஒரு கல்லூரி பேருந்தில் மாணவிகள் அனைவரும் ட்ரெக்கிங் சென்று இருப்பதாக சொன்னர்கள்.எங்களுக்கு அங்கே இருந்து வரவே தோணவில்லை.மிகவும் அழகான பசுமை நிறைந்த ,குளிர் நிறைந்த இடம் .மீண்டும் அடர்ந்த காடுகளின் வழியாக பூம்பாறை வழியாக திரும்பும்போது மகாலெட்சுமி கோவில் சென்றோம்.சாமி தரிசனம் முடித்து விட்டு அங்கிருந்து காரைக்குடியில் இருந்து சென்ற சொக்கலிங்கம் ஆகிய எங்கள் குடும்பம் குண்டாறு என்கிற நீர்வீழ்ச்சியை காண சென்றோம்.
குண்டாறு ,செட்டியார் பூங்கா,கோடை FM சுற்றுலா
அது அடர்ந்த சவுக்கு தோப்பின் நடுவே கொஞ்ச தூரம் நடந்து சென்ற பிறகு (பல மரங்கள் கீழே விழுந்து கிடக்கும் அவற்றை தாண்டி,கடந்து சென்ற பிறகு ) சிறிய நீர் வீழ்ச்சி இருக்கும்.அதனை பார்த்து விட்டு திரும்புகையில் நல்ல மழை .வேகமாக திரும்பி நாங்கள் மீண்டும் காருக்கு வந்து அடுத்ததாக செட்டியார் பூங்கா சென்றோம்.அங்கு அருமையான பராமரிப்பு.நல்ல மழை .அதனுடன் அங்கு இருந்த பூக்கள் எங்களை பெரிதும் மகிழ்வித்தது.புற்கள் வழியாக செய்ய பட்டிருந்த அழகிய வடிவங்கள் எங்களை அதிகமாக கவர்ந்தது.மழையுடன் அதனை ரசித்து விட்டு கோடை FM 100.5 உள்ளே சென்று அதன் செயல்பாடுகள் அனைத்தையும் பார்த்தோம்.கோடை வானொலி நிலைய பொறுப்பாளர் திரு.பொன் .தனபாலன் மற்றும் நிலைய பொறுப்பாளர் பர்வீன்,பாதுகாவலர் சக்திவேல்,நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன்,ரமேஷ் குமார்,சுதா ஆகியோர் எங்களுக்கு வானொலி நிலைய செயல்பாடுகள் தொடர்பாக நன்றாக விளக்கினார்கள்.
மீண்டும் கொடைக்கானல் வந்து உணவு அருந்தி விட்டு ஊருக்கு கிளம்பினோம்.தயவு செய்து யாரும் மியூசியம் மட்டும் செல்ல வேண்டாம்.அது தனியார் கல்லூரி நடத்தும் மியூசியம் .அங்கு ஒன்றும் நல்ல விஷயங்கள் இல்லை.எனவே அங்கு செல்ல வேண்டாம்.மீண்டும் வரும்போது வத்தலகுண்டு வழியாக வந்தோம்.அருமையான சுற்றுலா.
லெ .சொக்கலிங்கம்,தேவகோட்டை.

This comment has been removed by the author.
ReplyDeleteஉங்கள்
ReplyDeleteசாதனைகளுக்கு
கைதட்டி கைதட்டியே
என்
கைகளுக்கும்
ஆனந்த வலி!
வளர்க!
உங்கள் கல்விப்பணியும்
சாதனைப்பணியும்!