Thursday, 25 May 2017

தினமலர் பத்திரிக்கை நிருபர் திரு.முருகராஜ் லட்சுமணன் அவர்களுடன் ஒரு இனிய சந்திப்பு


                                  நாங்கள் அந்தமான் சென்று திரும்பும்போது தினமலர் பத்திரிக்கை நிருபர் திரு.முருகராஜ் லட்சுமணன் அவர்கள் எங்களை சந்திக்க சென்னை ரயில் நிலையம் வந்து எங்களுடன் அன்பாக பேசியதுடன் ,ரயில் கிளம்பும் வரை எங்களுடன் இருந்து எங்களை நன்றாக உபசரித்ததுடன் மீண்டும் சென்னை வரும்போது இல்லம் வாருங்கள் என்று அன்பு அழைப்பும் கொடுத்து சென்றார்.சில மாதங்களாக போன் மற்றும் மெயில் வழியாக தொடர்பு ஏற்பட்டுள்ள நிலையில் அவர் எங்களுக்கு கடந்த வாரம் சென்னை சென்ற அன்று காலை முதல் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டதுடன் ,மீண்டும் திரும்பி வரும்போது எங்களை சந்தித்து வழி அனுப்பி வைத்தது எங்களுக்கு மிகுந்த மகிச்சியை ஏற்படுத்தி உள்ளது.திரு.முருகராஜ் அவர்களின் அன்பான உபசரிப்புக்கு நன்றிகள் பல.பல நாள்கள் தொலைபேசி வழியாக பேசிய நாங்கள் அன்று தான் முதல் முறையாக சந்தித்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.நல்ல தோழமையுடன் குடும்பம்,பள்ளி தொடர்பாக பேசியதுடன் எங்களுக்கு உணவு அன்புடன் வாங்கி கொடுத்து உபசரித்தமைக்கும்,பல்வேறு பணிகளுக்குமிடையில் நெருக்கம் நிறைந்த சென்னையில் எங்களை சந்தித்த தோழர் அவர்களுக்கு மீண்டும் நன்றிகள் பல.எப்பொழுது எந்த தகவல் குறித்து பேசினாலும் நேர்மறை சிந்தனையுடன் பேசுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.






No comments:

Post a Comment