Saturday, 27 May 2017



சேக்கிழார் விழாவில் பெரிய புராணம் பாடிய பள்ளி மாணவர்கள்


      தேவகோட்டை -    தேவகோட்டை நகர  சிவன்கோவிலில் நடைபெற்ற  சேக்கிழார் விழாவில் பெரியபுராணம்   முற்றோதுதல் முதல் நாள்  நிகழ்வில் பெரிய புராணம்  பாடல்களை பாடிய சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் சேக்கிழார் விழாக்குழு செயலர் பேரா .சபா .அருணாசலம் ,பொருளாளர் தெட்சினாமூர்த்தி ,கவிஞர் பழனியப்பன்  ஆகியோர் உள்ளனர். இந்நிகழ்வினை முன்னிட்டு சேக்கிழார் விழா குழு சார்பாக தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பெரிய புராணம் பாடும் பள்ளி மாணவர்களுக்கும் ,பெரியவர்களுக்கும் காலை உணவு வழங்கப்பட்டது.இந்நிகழ்வு தொடர்ந்து மூன்று நாள் நடை பெற உள்ளது.வருகிற செவ்வாய் கிழமை அன்று நடைபெற உள்ள சிவநெறிச் செல்வர் விருது வழங்கும் விழாவும்,மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழாவும் நடைபெற உள்ளது.இந்நிகழ்விற்கு பாடல்கள் பாடுவதற்கு மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியை செல்வமீனாள்   ஆகியோர்  ஒரு ஆண்டு முழுவதும் பயிற்சி அளித்து தயார் செய்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment