வீடு தேடி சென்று கல்விக்கு கை கொடுத்த சிறுவர்மலர் வாசகி
உறுதியளித்ததை நிறைவேற்றிய சிறுவர்மலர் வாசகி
தினமலர் வாயிலாக மாணவியின் கல்விக்கு உதவி
தேவகோட்டை -
கடந்த, 2016 டிசம்பர் 9, 'தினமலர் -
சிறுவர் மலர்' இதழில், சிவகங்கை மாவட்டம்,
தேவகோட்டையில் உள்ள சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி,
தனலட்சுமி யின் சாதனையைப் பாராட்டி, 'ஸ்டூடண்ட்ஸ் க்ரவுன்' பகுதியில்,
1,000 ரூபாய் பரிசு வழங்கப்பட்டு, அவரைப் பற்றிய செய்தி வெளியானது.
இச்செய்தியை படித்த, மதுரை வாசகி ஜானகி, அந்தப் பள்ளி நிர்வாகத்தை தொடர்பு
கொண்டு பேசியதோடு, தன் மகன், கார்த்திகேயனுடன் அங்கு சென்று, தனலட்சுமியை
சந்தித்து, அவரின் சாதனை மெடல்களை பார்வையிட்டார். மாணவி, தனலட்சுமியின்
பெற்றோர் கூலித்தொழிலாளிகள் என்பதை அறிந்த ஜானகி, மாணவியின் விருப்பமான,
ஐ.பி.எஸ்., படிப்பது வரையிலான கல்வித்தொகை முழுவதையும் தானே ஏற்றுக்
கொள்வதாக உறுதி அளித்தார்.
உறுதி அளித்ததன் தொடர்ச்சியாக இன்று மதுரை அருகே உள்ள பறவை என்கிற ஊரிலிருந்து தேவகோட்டையில் உள்ள மாணவியின் குடிசை வீட்டிற்கே தேடிவந்து 9ம் வகுப்பு படிப்பதற்கான ரூபாய் நான்காயிரம் பணத்தை கொடுத்தனர்.இந்த நிகழ்வு குறித்து மாணவி தனலெட்சுமியின் தாயார் மீனாள் கூறும்போது , மதுரையில் இருந்து எங்களது வீடு தேடி வந்து ஜானகி அம்மாள் எனது மகளின் படிப்புக்கு உதவி செய்வது எனக்கு மனிதர்களின் ,மீது அதிக நம்பிக்கையினை ஏற்படுத்தி உள்ளது.சொல்லி விட்டு சென்று விடாமல் இவ்வளவு தொலைவு வந்து அவர்கள் உதவி செய்வது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.கண்டிப்பாக எனது மகள் நல்ல நிலைமைக்கு வருவாள்.வீட்டு வேலை பார்த்துவரும் நான் எப்படி எனது மகளை படிக்க வைக்கப்போகிறேன் என்று தெரியாமல் தவித்தேன்.நன்றாக படிக்கும் எனது மகளுக்கு இப்பள்ளியின் மூலமாகவும்,தினமலர் சிறுவர்மலர் நாளிதழின் வாயிலாகவும் படிப்பு உதவி தொகை கிடைத்ததற்கு பள்ளி தலைமை ஆசிரியருக்கும்,ஆசிரியர்களுக்கும்,உதவி செய்த ஜானகி அம்மாளுக்கும் ,அவர்களது மகன் கார்த்திகேயன் அவர்களுக்கும் ,தினமலர் சிறுவர்மலர் இதழுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
மாணவி தனலெட்சுமி கூறும்போது : என்னால் நம்ப முடியவில்லை.எங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் இன்று காலை தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு , மதுரையில் இருந்து ஜானகி அம்மாள்எனது மேற்படிப்புக்கு உதவி செய்யநேரில் வருவதாக சொன்னார்.எனக்கு பெரிய ஆச்சிரியம். தினமலர் சிறுவர் மலர் இதழ் வழியாக எனது திறமைகள் வெளிவந்தது.அதன் தொடர்ச்சியாக எனக்கு கிடைத்துள்ள இந்த உதவியை நான் நன்றாக பயன்படுத்தி கொண்டு எனது லட்சியமான IPS ஆவேன்.எனது தந்தை கல் உடைக்கும் வேலை பார்த்தும்,எனது தாயார் வீட்டு வேலை பார்த்தும் என்னை படிக்க வைக்க சிரமப்படும்போதும் எங்கள் பள்ளியின் வாயிலாக எனக்கு கிடைத்துள்ள இந்த உதவிக்கு சிறுவர்மலருக்கும் ,பள்ளி தலைமை ஆசிரியர்க்கும்,ஜானகி அம்மாள் குடும்பத்துக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
ஜானகி அம்மாள் கூறும்போது : நாங்கள் முன்பு வந்தபோதே மாணவி தனலெட்சுமியின் கல்விக்கு உதவி செய்வதாக தெரிவித்து உறுதி அளித்து இருந்தோம்.அதே போல் 9ம் வகுப்புக்கான படிப்பு உதவி தொகை ரூபாய் 4,000 கொடுத்துள்ளோம்.இந்த மாணவியின் குடும்ப சூழ்நிலையின் நிலை கருதி இந்த உதவியை செய்துள்ளோம்.மாணவியின் வீடு குடிசை வீடாக உள்ளது.இந்த மாணவி தேசிய திறன் வழி தேர்விலும் வெற்றி பெற்றுள்ளதாக அறிந்தோம்.மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.தொடர்ந்து மாணவியின் மேல்படிப்பு தொகை முழுவதையும் ஏற்று கொள்கிறோம். பல ஆண்டுகளாக, 'தினமலர்' படித்து வருகிறேன்; 'சிறுவர் மலர்' இதழின் தீவிர வாசகி. அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்களின் சாதனைகளை, வெளி உலகிற்கு எடுத்துக்காட்ட முயற்சிக்கும், பள்ளி தலைமை ஆசிரியர், லெ.சொக்கலிங்கம் மற்றும் தனலட்சுமியின் சாதனையை வெளிக்கொண்டு வந்த, சிறுவர்மலர் இதழுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் கூறியதாவது : நேற்று இரவு ஜானகி அம்மையாரின் மகன் கார்த்திகேயன் என்னை தொடர்பு கொண்டு மாணவிக்கு உதவி தொகை வழங்க வருவதாக சொன்னார்கள்.பள்ளி விடுமுறை காலமாக இருப்பதால் மாணவியின் வீட்டுக்கே சென்று கல்வி உதவி தொகையை வழங்குவது என்று முடிவு செய்தோம்.அதன்படி மாணவியின் குடிசை வீட்டுக்கு சென்று அங்கு அவரது தாயாரிடம் கல்வி உதவி தொகை கொடுக்கப்பட்டது.சிலர் உதவி செய்வதாக சொல்லி விட்டு அத்தோடு சென்று விடுவார்கள்.ஆனால் மதுரையிலிருந்து தேவகோட்டை தேடி வந்து உதவி செய்த ஜானகி அம்மாளுக்கும் ,கார்த்திகேயனுக்கும்,சிறுவர் மலர் இதழுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.இவ்வாறு பேசினார்.
பட விளக்கம் : தினமலர் சிறுவர்மலர் இதழ் மூலமாக சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி தனலெட்சுமி வீடு தேடி சென்று கல்விக்கு கை கொடுத்த சிறுவர்மலர் வாசகி பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம்,மாணவியின் தாயார் மீனாள் .
தினமலரில் முன்பு வெளியான செய்தி :
கல்விக்கு கைகொடுத்த சிறுவர் மலர் : மாணவி ஆனந்த கண்ணீர்
Advertisement
Advertisement
- இன்று
- கடந்த வாரம்
- கடந்த மாதம்
- இன்று
- கடந்த வாரம்
- கடந்த மாதம்
- ஜல்லிக்கட்டு தடைக்கு நான் காரணமல்ல: ராதா ராஜன் ஜனவரி 22,2017
- மெரினா போராட்டத்திற்கு வித்திட்டது தி.மு.க., : ஸ்டாலின் ஜனவரி 22,2017
- போராட்டம் போதும்: மாணவர்களுக்கு வேண்டுகோள் ஜனவரி 22,2017
- ஜல்லிக்கட்டு தொடர்பான கவர்னரின் அவசர சட்டத்தை 'ஏற்க மாட்டோம்': நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை போராட மாணவர்கள் முடிவுஜனவரி 22,2017
- மோடி பெயரை 'டேமேஜ்' செய்த அதிகார மையம் கண்ணீருடன் ஆதாரம் கொடுத்த முதல்வர் பன்னீர் ஜனவரி 22,2017
- இன்று
- கடந்த வாரம்
- கடந்த மாதம்
Advertisement
பதிவு செய்த நாள்
21ஜன2017
20:53
கடந்த,
2016 டிசம்பர் 9, 'தினமலர் - சிறுவர் மலர்' இதழில், சிவகங்கை மாவட்டம்,
தேவகோட்டையில் உள்ள சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி,
தனலட்சுமி யின் சாதனையைப் பாராட்டி, 'ஸ்டூடண்ட்ஸ் க்ரவுன்' பகுதியில்,
1,000 ரூபாய் பரிசு வழங்கப்பட்டு, அவரைப் பற்றிய செய்தி வெளியானது.
இச்செய்தியை படித்த, மதுரை வாசகி ஜானகி, அந்தப் பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு பேசியதோடு, தன் மகன், கார்த்திகேயனுடன் அங்கு சென்று, தனலட்சுமியை சந்தித்து, அவரின் சாதனை மெடல்களை பார்வையிட்டார். மாணவி, தனலட்சுமியின் பெற்றோர் கூலித்தொழிலாளிகள் என்பதை அறிந்த ஜானகி, மாணவியின் விருப்பமான, ஐ.பி.எஸ்., படிப்பது வரையிலான கல்வித்தொகை முழுவதையும் தானே ஏற்றுக் கொள்வதாக உறுதி அளித்தார். ஜானகி மற்றும் அவரது மகனின் வருகையைப் பாராட்டியதோடு, உடற்கல்வி ஆசிரியர் கருப்பையா, ஆசிரியை, செல்வமீனாள் ஆகியோர் பள்ளியின் சார்பாக, இருவருக்கும் பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர்.
இது குறித்து ஜானகி கூறியதாவது: பல ஆண்டுகளாக, 'தினமலர்' படித்து வருகிறேன்; 'சிறுவர் மலர்' இதழின் தீவிர வாசகி. அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்களின் சாதனைகளை, வெளி உலகிற்கு எடுத்துக்காட்ட முயற்சிக்கும், பள்ளி தலைமை ஆசிரியர், லெ.சொக்கலிங்கம் மற்றும் தனலட்சுமியின் சாதனையை வெளிக்கொண்டு வந்த, சிறுவர்மலர் இதழுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
ஜானகியின் மிகப்பெரிய உதவிக்கு, ஆனந்த கண்ணீருடன் நன்றி தெரிவித்தார், மாணவி தனலட்சுமி.
- நமது நிருபர் -

No comments:
Post a Comment