தேசிய கடல்சார் தினம்
வீடியோ படங்கள் மூலம்
கடல் சார் உயிரினங்கள் தொடர்பாக விளக்குதல்
தேவகோட்டை – தேவகோட்டை
சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் தேசிய கடல் சார்
தினம் கொண்டாடப்பட்டது.
நிகழ்விற்கு வந்தவர்களை
பள்ளி ஆசிரியை சாந்தி வரவேற்றார்.தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தமிழ்நாடு
மீன் வள பல்கலைகழகத்தின் உச்சிபுளி உதவி
பேராசிரியர் ஆனந்த் மாணவர்களிடம் சிறப்புரையாற்றுகையில் ,கடலில் பவளப் பாறை,வண்ணமீன்கள்
போன்றவை கற்பனைக்கு எட்டாத வகையில் காணப்படுகின்றன.கடலில் மூழ்கி பார்த்தால்
அதற்கு அடியிலும் ஒரு உலகம் உண்டு என்பதை உணரலாம்.மீன்களில் பெரிய மீனான சுறாமீன்
கருப்பை தொப்புள் கொடியிலிருந்து மூன்று அல்லது நான்கு மாதங்களில் குட்டி
வெளிவரும்.இராமேஸ்வரம்,மண்டபம் போன்ற பகுதிகளில் கடல்நீரில் தாமரைக்காத்தான் என்ற
மீன் வகை உள்ளது.இதைப் பார்க்க தாமரை வடிவத்தில் உள்ளது. ஆழ்கடலில் உள்ளே சென்று கேமராவில்
போட்டோ எடுக்கும் பயிற்சி கோவா மாநிலத்தில் உள்ளது.மெரைன் பயலாஜி படித்தால்
கடலுக்கு அடியில் சென்று ஆர்வமாக கேமிரா மூலம் தண்ணீர் அடியிலும் ரசிக்கலாம்.20
நாள் அல்லது 1 மாதத்திற்குள் வேலை வாய்ப்பு பெற வழி உள்ளது.மீன் முட்டையிடாது.மீன்
உவர்நீரில்தான் முட்டையிடும்.உயரமான கால், அலகு நீளமாக இருக்க கூடிய சைபீரியன்
கொக்கு ஆழமான பகுதிகளில் உள்ள மீன்களை கொத்தி தின்னும் இயல்புடையது. கடல்
தண்ணீரில் 1 லிட்டரில் 35 கிராம் உப்பு உள்ளதால் மீன் வளர்க்க ஏதுவாக இருக்கும்.தொழில்நுட்ப
முன்னேற்றத்திற்காக பயன்படுத்தக் கூடிய செயற்கை உப்பு கடலிலிருந்து
தயாரிக்கபடுகிறது.இவ்வாறு பேசினார். வீடியோ படங்கள் மூலம் கடல் சார் உயிரினங்கள்
தொடர்பாக விளக்கினார்.சந்தியா,சத்தியா,கா ர்த்திகேயன்,ஜெகதீஸ்வரன்,தனலெட் சுமி,பரமேஸ்வரி,பிரவீனா,காயத்ரி
ஆகியோர் பல்வேறு கேள்விகளை கேட்டு பதில் பெற்றனர். நிகழ்ச்சியின் நிறைவாக ஆசிரியர்
ஸ்ரீதர் நன்றி கூறினார்.
பட விளக்கம் :
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் தேசிய
கடல் சார் தினம் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு மீன் வள பல்கலைகழகத்தின் உச்சிபுளி உதவி பேராசிரியர் ஆனந்த் மாணவர்களிடம்
கடல் சார் உயரினங்கள் தொடர்பாக விளக்கினார்.
No comments:
Post a Comment