Thursday, 20 April 2017

தேவகோட்டை  நடு நிலை பள்ளியில் ஒளி ஏற்றுதல் விழா 
தேவகோட்டை ​ ​ - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  அரசு உதவி பெறும் நடு நிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்களின் பிரியா விடை பெறும் விழா பெற்றோர் ஆசிரியர் முன்னிலையில் ஒளி ஏற்றும் விழாவாக நடை பெற்றது.


                                                 ஒளி ஏற்றுதல் விழாவின் தொடக்கமாக எட்டாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தங்கள் பெற்றோர் ஆசிரியர் முன்னிலையில் வரிசைப்படி நின்றனர்.அவர்கள் முன்பாக ஏழாம்  வகுப்பு மாணவர்கள் உட்கார்ந்து இருந்தனர்.ஆசிரியை முத்து லெட்சுமி அனைவரையும் வரவேற்றார்.தேவகோட்டை கனரா வங்கியின் மேலாளர் கோபாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்வியின் அவசியம் குறித்து பேசினார்.எட்டாம்   வகுப்பு மாணவி ராஜேஸ்வரி   அபிராமி அந்தாதி பாடினார். எட்டாம் வகுப்பு மாணவர்    சாய் புவனேஸ்வரன் சர்வ சமய வாழ்த்துக்கள் பாடலை பாடினார். மாணவியர் கல்விகடவுள் சரஸ்வதியை வணங்கி பள்ளி தலைமை ஆசிரியர்  லெ .சொக்கலிங்கம் தீப ஒளியை ஏற்ற அதனை எட்டாம்  வகுப்பு மாணவர்கள் அனைவரும்  கையில் மெழுகுவர்த்தி தீபம் ஏற்றினர்.எட்டாம்  வகுப்பு மாணவி ஜீவா   உறுதி மொழி வாசிக்க எட்டாம்  வகுப்பு அணைத்து மாணவர்களும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.அதன் பிறகு தீப  ஒளியை  ஏழாம்  வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்தி கொடுக்க அவர்கள் தீபத்தை வாங்கி கொண்டனர்.ஏழாம் வகுப்பு மாணவர்கள் சார்பில்  மாணவர்  ஜெனிபர்   ஏற்புரை வழங்கினார்.இதற்கான  ஏற்பாடுகளை ஆசிரியை செல்வ   மீனாள் செய்திருந்தார்.ஆசிரியர் செல்வம்   நன்றி கூறினார்.விழாவில் மாணவர்கள் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தங்களின் படிப்பு காலம் தொடர்பான பல்வேறு நிகழ்வுகள் குறித்து தங்களின் கருத்துக்களை மலரும் நினைவுகளாக பகிர்ந்து கொண்டனர். பள்ளி அளவில் விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு அனைத்து நாட்களும் வருகை புரிந்த வித்யா என்கிற மாணவிக்கும்,வளரறி மதிப்பீடு அதிகமாக செய்து வெற்றி பெற்ற பரத்குமார் என்கிற மாணவனுக்கும் , சிறந்த மாணவியாக தனலெட்சுமிக்கும்,அதிகமான கேள்விகள் கேட்ட மாணவி பரமேஸ்வரிக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.பெற்றோர்கள் சார்பில் அய்யாதேவன்,மீனாள்,அப்துல் மாலிக் ஆகியோர் பேசினார்கள்.  விழாவில் மாணவ,மாணவியரின் நாடகம்,திருக்குறள் நடனம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.விழாவில் ஏராளமான பெற்றோர்களும்,கனரா வங்கியின் அலுவலர் பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடு நிலை பள்ளியில் எட்டாம்  வகுப்பு மாணவ ,மாணவியர் பிரியா விடை பெறும் விழாவில்  ஒளி ஏற்றி ஏழாம்  வகுப்பு மாணவ,மாணவிகளிடம் வழங்கினார்கள்.

No comments:

Post a Comment