Monday, 17 April 2017

மாணவர்களுடன் கலந்துரையாடல்

சுய ஒழுக்கம் இருந்தால் கல்வி தானாக வளரும்

இந்திய அரசின் முன்னாள் தணிக்கை அதிகாரி பேச்சு

தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் இந்திய அரசின் முன்னாள் தணிக்கை அதிகாரி சௌந்தரராஜன் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.


                     நிகழ்ச்சிக்கு வந்தவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் வரவேற்றார்.தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லுரி முதல்வர் சந்திரமோகன் தலைமை தாங்கினார்.அழகப்பா பல்கலை கழக முன்னாள் அலுவலர் முனைவர் காளை ராஜன் முன்னிலை வகித்தார். இந்திய அரசின் முன்னாள் தணிக்கை அதிகாரி சௌந்தரராஜன் மாணவர்களிடம் பேசுகையில், சுய ஒழுக்கம் இருந்தால் கல்வி தானாக வளரும்.ஒரு நிகழ்வு நடக்கும்போது குறிப்பு எடுத்துக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும்.மேல்வகுப்புக்கு செல்லும்போது குறிபெடுத்தல் எளிதாகப் படிக்கவும்,நிறைய படிக்கவும் உதவி செய்யும்.நாம் இருப்பது நம் தாய்,தந்தை,குடும்பம்,பள்ளிக்கூடம்,உள்ளூர்,தேசம்,நாடு இப்படி எல்லாவற்றையும் சார்ந்தது.இதில் எல்லாவற்றிலும் நம்மிடையே விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.இங்கிலாந்து நாட்டில் தமிழில் நல்வரவு என்று எழுதி இருப்பார்கள்.தமிழ் மரபு அறக்கட்டளை வழியாக நான் தமிழ் பயின்று வருகிறேன்.75 வயதிலும் தமிழ் நன்றாக படிக்க கற்று கொண்டேன்.இன்றும் தமிழ் மீது உள்ள ஆர்வத்தில்தான் சென்னையில் வசித்து வருகிறேன்.இவ்வாறு பேசினார்.மாணவர்கள் பரமேஸ்வரி,ஜெகதீஸ்வரன் ,கார்த்திகேயன்,ராஜி,ஜெனிபர்,சின்னம்மாள்,பரத்குமார்,கார்த்திகா ஆகியோர் கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றனர்.தமிழ் மரபு அறகட்டளை சார்பாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.நிறைவாக பள்ளி ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் இந்திய அரசின் முன்னாள் தணிக்கை அதிகாரி சௌந்தரராஜன் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.


No comments:

Post a Comment