Sunday, 23 April 2017

உலக புத்தக தினவிழாவினை முன்னிட்டு ஓவிய போட்டி 

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான இரண்டாம்  ஆண்டு ஓவிய போட்டி நடைபெற்றது.


     போட்டிக்கு வந்தவர்களை ஆசிரியை வாசுகி  வரவேற்றார்.எல்.கே.ஜி மாணவர்களுக்கு தனியாகவும்,1முதல் 3ம்வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு முதல் பிரிவாகவும்,4மற்றும் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் பிரிவாகவும் போட்டிகள் நடைபெற்றன.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் . இப்போட்டிகளில் தேவகோட்டையில் உள்ள பல்வேறு அரசு,அரசு உதவி பெறும் ,தனியார் பள்ளிகளில் இருந்து பல நூறு மாணவர்கள் கலந்து கொண்டனர். எல்.கே.ஜி பிரிவில் முதல் பரிசை ஸ்ரீ மகா லெக்சனாவும்,  இரண்டாம் பரிசை நிஷாலினியும் , முதல் பிரிவில் சசி வர்மன் முதல் பரிசையும், ஹரிணி இரண்டாம் பரிசையும் பெற்றனர்.இரண்டாம் பிரிவில் நித்திஷ் குமார்  முதல் பரிசையும்,ராஜேஷ்குமார் இரண்டாம் பரிசையும் பெற்றனர்.வெற்றி பெற்ற அனைவருக்கும் விருது வழங்கப்பட்டது.பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை ஆசிரியை செல்வமீனாள் செய்து இருந்தார்.ஆசிரியை சாந்தி  நன்றி கூறினார்.இப்பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் புத்தக தினத்தை முன்னிட்டு விடுமுறையில் படிக்கும் வண்ணம் புத்தகங்கள் கொடுக்கப்பட்டது.


பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பிற பள்ளி மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு ஓவிய போட்டியில் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கும் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்

No comments:

Post a Comment